Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் 10/03/2020.



1. முதல்வர் பழனிசாமி மார்ச் 10ஆம் தேதி திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரா. கண்ணகிக்கு ஒளவையார் விருது வழங்கி கௌரவித்தார்.

• திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரா. கண்ணகிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்க ஊக்கப்படுத்தியது. ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டது.  குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது போன்ற பல்வேறு சமூகநலப் பணிகளை அர்ப்பணிப்புடன் ஆற்றியதற்காக 2020 ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி சிறப்பித்தார்கள்.

2. மாநில திட்டக் குழு துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் வெளியிட்டார்.

• இவர் 1977, 1980, 1984 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                                                                                       இந்தியா

1. போபாவில் முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மாநில அமைச்சர்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததாக மூத்த முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.

2. கர்நாடகம் மற்றும் உத்தரகண்ட் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் இருவரைப் பணியிட மாற்றம் செய்ய கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

3. பாதுகாப்புத் துறை உளவு அமைப்பின் இயக்குநராக லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் (57) நியமிக்கப்பட்டுள்ளார்.

• இந்திய ராணுவ அகாடெமியின் 1983ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த கே.ஜே.எஸ். தில்லான், ராணுவத்தின் 15வது பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

4. செவ்வாய் கிரகத்தின் ஆராய்வதற்கென நாசா விண்வெளி ஆய்வு மைத்தினால் கியூரியோசிட்டி ரோவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

• 1.8 பில்லியம் பிக்சல்கள் உடைய பனோரமா தொழில்நுட்பத்தின் ஊடாக செவ்வாய் கிரகத்தினை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இதுவே ரோவர் விண்கலம் அனுப்பிய அதிகூடிய பிரிதிறன் கொண்ட புகைப்படமாக இருக்கின்றது.

                                                                                                                உலகம்

1. இந்தியா உள்பட 13 நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவதற்கு கத்தார் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கோரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கையை கத்தார் மேற்கொண்டுள்ளது.

2. ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரஃப் கனி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் அப்துல்லா அப்துல்லாவும் அதிபராக பதவியேற்றுக் கொண்டதால் ஆப்கன் அரசியல் பரபரப்பாகியுள்ளது.

                                                                                                      இன்றைய தினம்

1. ஐவரி கோஸ்ட் பிரெஞ்ச் குடியேற்ற நாடானது (1893)

2. அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார் (1876)

3. பிரிட்டனில் முலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது (1801)

4. யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர் (1977)
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY