Ads Right Header

இயற்பியல் 20+20 குறிப்புகள்!




1.வெப்பநிலை என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலாகும் .

2.வெப்பத்தின் அலகு -
கலோரி அல்லது ஜூல்

3.வெப்பநிலையின் அலகு - செல்சியஸ் அல்லது கெல்வின்

4.வெப்பம் என்பது ஒரு
பொருளின் உள் ஆற்றலாகும்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
5.வெப்பம் என்பது ஒரு பொருளிலுள்ள மொத்த துகள்களின் வேகத்தையும் , வெப்பநிலை என்பது ஒரு பொருளிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி வேகத்தைப் பொறுத்தது.

6.வெப்பம் என்பது ஒரு பொருளிலுள்ள துகள்களின் எண்ணிக்கை , அளவு மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.

7.வெப்பநிலை என்பது துகள்களின் எண்ணிக்கை , அளவு போன்றவற்றை பொறுத்ததல்ல.

8.பொருட்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
9.இரட்டை உலோகப்பட்டையின் பயன்கள் : சலவைப்பெட்டி , மின்அடுப்பு , குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றில் தெர்மோஸ்டாட் எனும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பயன்படுகிறது.

10 கடிகாரத்தில் நேர இழப்பு கோடைகாலங்களிலும் , நேர நீட்டிப்பு குளிர்காலங்களிலும் ஏற்பட காரணம் - வெப்ப விரிவு ( இதனை தவிர்க்க ஈழுலோகத்தகடு பயன்படுகிறது ).

11. தண்டவாளங்களுக்கு இடையே சிறிது இடைவெளிவிட்டு இணைப்புத்தகடுகள் கொண்டு இணைக்கப்பட காரணம் - வெப்பத்தினால் தண்டவாளங்கள் விரிவடையும் போது வளையாமல் நேராக இருப்பதற்காக

12.குளிர்பான பாட்டில்கள் தடித்த கண்ணாடியால் செய்யப்பட காரணம் - வாயுகளடங்கிய குளிர்பாட்டில்கள் வெப்ப விரிவால் வெடிக்காமல் இருப்பதற்காக.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
13.பாலங்களை அமைக்கும்போது இரும்பு பலகைகளை கான்கிரிட் தூண்களின் மீது பொருத்தும்போது சிறிது இடைவெளிவிட்டு அமைக்கப்பட காரணம் - வெப்பத்தினால் விரிவடையும்போது இரும்புப்பலகை வளையாமல் இருப்பதற்காக.

14. 4°C வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும் .

15.பருமன் குறையும் குளிர்காலங்களில் நீர் நிலைகளில் உறைந்திருப்பினும் அவற்றில் வாழும் உயிரினங்கள் உயிர் வாழக் காரணம் - நீர் நிலைகளின் அடிப்புறம் நீரின் வெப்பநிலை 4°C இருப்பதால் நீர் உறையாமல் உள்ளது .

16நீரின் முரண்பாடான பெருக்கத்தை அறிய உதவும் கருவி - ஹோப் கருவி .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
17.உறைகலவை என்பது சாதாரண உப்பும் , பனிக்கட்டியும் 1 : 3 எனற் விகதத்தில் உள்ள கலவையாகும் . உறைகலவையின் வெப்பநிலை ( - 13°C )

18.உறைகலவையில் பயன்படுத்தப்படும் உப்பு - அம்மோனியம் நைட்ரேட்.

19. மனித உடலின் வெப்பநிலை 98 . 4°F அல்லது 36 . 9°C அல்லது 310°K .

20.வெப்பநிலை அதிகரிப்பதால் நிர்வாழி உயிரினங்கள் இறப்பதற்கு காரணம் - வெப்பநிலை உயரும்போது நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் வாயு அளவு குறைவதால்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
21.வெப்ப ஏற்புத்திறனின் அலகு J / K

22.தன்வெப்ப ஏற்புத்திறனின் அலகு / / KG / K

23.பாரபின் மெழுகின் தன்வெப்ப ஏற்புத்திறன் 2900 / / KG / K

24.நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்
 4180 J / KG / K
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
25.காரியம் தன்வெப்ப ஏற்புத்திறன்
128 J / KG / K

26.பாதரசம் தன்வெப்ப ஏற்புத்திறன்
 138 | / KG / K .

27.ரேடியேட்டர்களில் , நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தக் காரணம் - நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகமாக உள்ளதால் .

28.வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தக் காரணம் -
தன்வெப்ப ஏற்புத்திறன் குறைவாக இருப்பதால் .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
29.வெப்பம் பரவுதல் மூன்று முறைகளில் ஏற்படுகிறது.
 1 . வெப்பக்கடத்தல் : ஒரு பொருளில் , வெப்பம் மிகுந்த பகுதியிலிருந்து வெப்பம் குறைவான பகுதிக்கு மூலக்கூறின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்ச்சி ஆகும் .
( திடப்பொருளில் நிகழும் )

2 . வெப்பசலனம் : ஒரு பொருளில் , வெப்பமிகுந்த பகுதியிலிருந்து வெப்பம் குறைந்த பகுதிக்கு துகள்களின் சலனத்தால் வெப்பம் பரவும் நிகழ்ச்சி ஆகும் ( திரவம் மற்றும் வாயுக்களால் நிகழும் )

3 . வெப்ப கதிர்வீச்சு : வெப்பமானது ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊடகமின்றி பரவும் நிகழ்ச்சி ஆகும் .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
30.சூரியனிடமிருந்து வெப்பமானது - வெப்பக் கதிர்வீசல் மூலமாக புவியை அடைகின்றது .

31.கருமை நிறப் பொருட்கள் அதிக அளவு வெப்பக் கதிர்வீச்சை உட்கவரும்.

32. வெள்ளை நிறம் மிகக் குறைந்த வெப்பக் கதிர்வீச்சை உட்கவரும்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
33.சுமையல் பாத்திரங்களின் அடிப்புறம் கருமை நிறம் பூசப்பட்டிருப்பதன் காரணம் - அதிக கதிர்வீச்சை உட்கொண்டு பாத்திரம் விரைவில் சூடேறுவதற்கு .

34.மெழுகுவர்த்தி எரியும்போது உருவாவது - கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீர் .

35.ஒரு பொருள் எரியும்போது உருவாகும் வாயு - கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு .

36.துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றத்திற்கு எ . கா . ஆகும் ஒரு இயற்பியல் மாற்றத்தின்போது பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை ஒரு வேதியியல் மாற்றத்தின்போது பொருள்களின் மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழும்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
 37.உள்ளங்கையை தேய்க்கும் போது இயக்க ஆற்றல் , வெப்ப ஆற்றலாக மாறுகிறது .

38.சலவைப்பெட்டி , வாட்டர்ஹீட்டர் , மின் அடுப்பு , கெய்சர் ஆகியவை - மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகின்றன .

39.சூரியன் , அணுகுண்டு ஆகியன - அணுஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது

40.வெப்பம் என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றலாகும்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY