Ads Right Header

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023 - முக்கிய குறிப்புகள்!



* " தமிழக அரசின் தொலைநோக்கு திட்டம் 2023 " ஐ முன்னாள் முதல்வர் செல்வி , ஜெயலலிதா அவர்கள் 22 மார்ச் 2012 ல் வெளியிட்டார் .

* தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 , 2011 - 12 - ஆம் ஆண்டில் தொடங்கி , 2022 - 23 - ஆம் ஆண்டு வரை செயல்படுத்தும் திட்டமாகும் .

* இந்த 11 ஆண்டுகளில் கணிக்கப்பட்டுள்ள மொத்த முதலீட்டு மதிப்பீடு , 15 லட்சம் கோடி ரூபாயாகும் .

* இந்தத் திட்ட அறிக்கையின்படி , சுமார் 60 சதவீத நிதி ஆதாரம் அரசின் மூலமாக பெறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நிதி அரசின் நேரடி மூலதனச் செலவு மட்டுமல்லாமல் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் ,

* அடுத்த 11 ஆண்டுகளில் , மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் . இது , எதிர்பார்க்கப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் .

*அடுத்த 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அதிகரித்திருக்கும் . இந்த காலகட்டத்தில் , தனிநபர் வருமானம் ஆறு மடங்கு உயர்ந்து இருக்கும் . அடுத்த 10 ஆண்டுகளில் , தமிழகத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ஆறு மடங்கு உயர்ந்து , நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயரும் . இதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் மாறும் .

*2023ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் , 100 சதவீத சுகாதார வசதி பெற்றவர்களாக இருப்பர் திறந்தவெளிக் கழிவறை இல்லாத நிலை உருவாக்கப்படும் .

*குடிசைகள் இல்லாத , தமிழகத்தை உருவாக்க 25 லட்சம்வீடுகள் ஏழை மக்களுக்குக் கட்டித் தரப்படும் ,

*அடுத்த 10 ஆண்டுகளில் , 20 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சார ம் உற்பத்தி செய்யப்படும் .

*தமிழக அரசின் , " தொலைநோக்குத் திட்டம் - 2023 ' பத்து நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது .

அவை வருமாறு :

*2023ம் ஆண்டில் , இந்தியாவிலேயே பொருளாதார ரீதியாக வளம் பெற்ற மாநிலமாக விளங்கும் , தற்போதுள்ள தனிநபர் வருமானம் ஆறு மடங்காக உயர்ந்து , 11 ஆண்டுகளில் , உலகளவில் உயர்நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு இணையாக இருக்கும் .

* தமிழகம் உள்ளடக்கிய வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தும் , வறுமை இல்லாத மாநிலமாகவும் , வேலைவாய்ப்பு வேண்டுவோருக்கு லாபமான வாய்ப்புகள் அளிக்கப்படும்.

* சமூக வளர்ச்சியில் , இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் . இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே , அதிக மனிதவள குறியீடு கொண்ட மாநிலமாக திகழும் .

 * வீட்டுவசதி , குடிநீர் , துப்புரவு , எரிசக்தி , போக்குவரத்து , பாசனம் , இணைப்புகள் , சுகாதாரம் மற்றும் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்த உள்கட்டமைப்பு சேவைகளை தமிழகம் வழங்கும் .

* ஆசியாவிலேயே முதலீடுகளுக்கு விரும்பும் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இடம்பெறும் . குறிப்பாக , இந்தியாவிலேயே மிகவும் விருப்பப்படும் மாநிலமாக இருக்கும் .

* இந்தியாவிலேயே , புதுமையை புகுத்துதலுக்கான மையம் மற்றும் அறிவுசார் தலைநகரமாக தமிழகம் கருதப்படும் ,

* அனைத்து குடிமகன்கள் மற்றும் வர்த்தகத்துக்கு , அமைதி , பாதுகாப்பு மற்றும் வளத்தை தமிழகம் உறுதி செய்யும் . சுதந்திரமான போக்குவரத்து , கருத்துகள் பரிமாற்றம் , வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் உலகத்துடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் .

* தமிழகம் தனது சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து , கவனம் செலுத்தும் ,

* இயற்கை சீற்றங்கள் , பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் மனிதனால் ஏற்படும் இதர அம்சங்களால் ஏற்படும் நிலையற்ற தன்மையில் இருந்து மாநிலத்தையும் மக்களையும் பாதுகாக்க தமிழகம் நடவடிக்கை எடுக்கும் .

* நிர்வாகத்தில் வெளிப்படையான மற்றும் பதிலளிக்கக் கூடிய கலாசாரத்தை தமிழகம் பின்பற்றும் . அனைவருக்கும் பாதுகாப்பு , சம வாய்ப்பு உறுதி செய்யப்படும் .

Whatsapp ல் இணைந்திட
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY