Ads Right Header

குரூப் 4 தேர்வில் வரப்போகும் மாற்றங்கள் என்ன?




குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை தெரிவிப்பு மாதிரிகளையும் மாற்றியமைத்து உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட குரூப் 4 தேர்வு முறைகேட்டின் எதிரொலியாக குரூப் 4 தேர்வுகளில் முதற் கட்ட மற்றும் முதன்மை தேர்வு முறைகள் கடைபிடிக்க பட உள்ளன.

அதன் படி அந்த தேர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அதில் கேட்கப்பட்ட இருப்பதையும் கீழே நாங்கள் வழங்கியுள்ளோம். இவை குரூப் 4 முதன்மை தேர்வில் கேட்கப்பட்ட உள்ளவையாகும்.

கட்டுரை எழுதுதல் – கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிற்கு ஏற்றவாறு ஒரு கட்டுரையினை எழுத வேண்டும்

கடிதம் எழுதுதல் – கொடுக்கப்பட்டுள்ள சூழலிற்கு ஏற்றவாறு ஒரு கடிதம் எழுத வேண்டும்

பத்தியை படித்து விடை அளித்தல் – ஒரு தலைப்பினை குறித்த பத்தியும் அது தொடர்பான அக்கேள்விகளும் இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள பதியினை படித்து கீழேயுள்ள கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்

மொழிப்பெயர்ப்பு – வேறொரு மொழியில் (ஆங்கிலம்) தரப்பட்டுள்ள வாக்கியத்தினை படித்து அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
சுருக்கம் மற்றும் விரிவான விடை அளித்தல் – கொடுக்கப்பட்டுள்ள சூழல் / தலைப்பு ஆகியவற்றினை குறித்த சுருக்கமான மற்றும் விரிவான விடைகளை அளிக்க வேண்டும்.

இதற்கிடையில் இந்த புதிய நடைமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்ற கருத்தும் எழுந்தது. ஆனால் இது தகுதி அடிப்படையில் முறைகேடு இல்லாமல் நடைபெறுவதற்காகவே இவ்வாறு மாற்றபட்டிருப்பதாகவும் இதனால் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட்டது எனவும் விளக்கம் அளித்து உள்ளது.

புதிய பாடத்திட்டம்  குறித்த அதிகாரபூர்வ பாடத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை TNPSC விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY