Ads Right Header

இயற்பியல் - முக்கிய குறிப்புகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு!



ஒளிவிலகலின் விதிகள் :

* ஒளிவிலகலின் அடிப்படையில் , நட்சத்திரமானது ஒளிர்கிறது .

* ஒளிவிலகலின் காரணமாக , ஆறுகள் ஆழமாக இருப்பது போன்ற தோற்றம் , நீர்நிறைந்த பாத்திரத்திலுள்ள நாணயம் மேலே இருப்பது போன்ற தோற்றம் , பாத்திரத்தின் மீதுள்ள பென்சில் உடைந்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது .

 * சூரிய மறைவு , மற்றும் சூரிய உதயத்தில் , ஒளிவிலகல் காரணமாக , சூரியன் கிடைமட்டத்திற்கு மேலோக இருப்பது போன்று தோற்றமளிக்கிறது .

 * வளிமண்டல ஒளிவிலகலின் காரணமாக நாளின் நீளமானது 4 நிமிடங்கள் அதிகமாக தோற்றமளிக்கிறது .

* அதிக விலகல் குறியீடு காரணமாக வைரம் மின்னுகிறது.

ஒளி எதிரொளித்தல்

 * சமதள ஆடி ஒன்றின் மீது ஓர் ஒளிக்கற்றை விழும்போது அவ்வொளிக் கற்றையானது வந்த ஊடகத்திலேயே மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது . இந்நிகழ்வு ஒளி எதிரொளித்தல் எனப்படும் .

 ஒழுங்கான எதிரொளிப்பு

* இந்நிகழ்வில் ஒளியின் இணைக்கற்றை ஒன்று வழவழப்பான அல்லது பளபளப்பான பரப்பின் மீது விழும் போது எதிரொளிக்கும் கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்.

முழுமையான தொகுப்பைக்காண
Click here to view
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY