Ads Right Header

தமிழ் இலக்கிய வரலாறு - தமிழ்நாடு அரசு வெளியீடு!



முதற் சங்கம்

கடல் கொள்ளப்பட்ட தென்மதுரையில் முதற் சங்கமாகிய தலைச்சங்கம் இருந்தது என்பர் . திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள் , குன்றம் எறிந்த குமரவேள் , அகத்தியர் , முரஞ்சியூர் முடிநாகராயர் , நீதியின் கிழவன் முதலான 549 புலவர்கள் அச்சங்கத்தில் இருந்தனர் 4449 புலவர்கள் பாடினர் . அவர்கள் பாடிய முதுநாரை , முதுகுருகு , பெரும் பரிபாடல் , களரியாவிரை முதலான நூல்கள் மறைந்து போயின . காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 மன்னர்கள் தலைச் சங்கத்தைப் புரந்தனர் . இச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவியது . இச்சங்கப் புலவர்க்கு , அகத்தியமே இலக்கண நூலாக விளங்கியது .

இடைச் சங்கம்
இடைச்சங்கம் கடல் கொண்டகபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் நிலவியது . இருந்தையூர்க் கருங்கோழி சிறு பாண்டரங்கன் , துவரைக் கோமான் , கீரந்தை , வெள்ளார்க் காப்பியன் , திரையன் மாறன் உள்ளிட்ட 59 புலவர்கள் வீற்றிருந்தனர் ; 3700 புலவர்கள் பாடினர் . கலி , குருகு , வெண்டாளி , வியாழமாலை அகவல் , மாபுராணம் , பூதபுராணம் , தொல்காப்பியம் முதலான பல நூல்கள் இயற்றப்பட்டன . இவற்றுள் தொல்காப்பியம் ஒன்றே இன்று கிடைத்துள்ளது . வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 மன்னர்கள் இச்சங்கத்தைப் புரந்தனர்.

கடைச் சங்கம்
பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை மாநகரில் கடைச் சங்கம் நிறுவப்பட்டது . கபிலர் , பரணர் , நக்கீரனார் , சிறுமேதாவியார் , சேந்தம்பூதனார் , பெருங்குன்றூர்க் கிழார் உட்பட 49 புலவர்கள் வீற்றிருந்தனர் . 449 புலவர்கள் பாடினர் . எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் வேறு பிற நூல்களும் இப்புலவர்களால் இயற்றப்பட்டன . 1850 ஆண்டுகள் நிலவிய இச்சங்கத்தை முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர்.

முழுமையான தொகுப்பினைக் காண
Click here to view

Whatsapp ல் இணைந்திருங்கள்
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY