Ads Right Header

மன்னர்கள் - சிறப்பு பெயர்கள்!!


மன்னர்கள் அவர்களின் சிறப்பு பெயர்கள் :-

👑 கரிகாலன் சோழன் - ஏழிசை வல்லவன், நரிமுடித்து சொல்லால் முறைசெய்த அரசன், திருமாவளவன்

👑 முதலாம் மகேந்திர வர்மன் - சத்ருமல்லன், கலகப்பிரியன், குணபரன், சித்திரக்காரப் புலி, விசித்திர சித்தன், மத்தவிலாசன், சங்கீரண ஜதி,

👑 முதலாம் நரசிம்மவர்மன் - மாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி, வாத்தியவித்யாதரன், வாதாபி கொண்டான்

👑 இரண்டாம் நரசிம்மன் - இராஜசிம்மன்

👑 மாறவர்மன் அவனி சூளாமணி - சடையவர்மன், உண்மையின் தோழன்

👑 செழியன் சேந்தன் - வானவன், செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்

👑 மாறவர்மன் அரிகேசரி - பராங்குசன், கூன்பாண்டியன், நெல்வேலி வென்ற நெடுமாறன், நின்ற சீர் நெடுமாறன்

👑 கோச்சடையன் இரணதீரன் - மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியம், மதுரை கருநாடகன்

👑 முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரை ஈழமும் கொண்டான், பொன்வேய்ந்த சோழன்

👑 முதலாம் இராஜராஜ சோழன் - மும்முடிச் சோழன், அருண் மொழிவர்மன், இராஜகேசரி, சிவபாத சேகரன், உலகலந்தான்,

👑 முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்

👑 முதலாம் குலோத்துங்கன் - சுங்க தவிர்த்த சோழன்

👑 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் - ராஜகம்பீரர்

👑 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - கலியுகராமன், அதிசய பாண்டிய தேவர்

👑 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் - திருபுவன சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன், பொன்வேய்ந்த பெருமாள்

👑 முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கொல்லம் கொண்ட பாண்டியன்
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY