Ads Right Header

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - காமராஜர் ஆட்சி( Part -1)



குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் . தமிழக முதல்வராக 13 . 04 . 1954 தமிழ் புத்தாண்டு அன்று பதவியேற்றார் . முதல்வராக பதவியேற்றதும் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லம் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டுதான் தன் பணிகளைத் தொடங்கினார்.

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாக காமராஜரின் அமைச்சரவையில் , மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே ( 8 பேர் ) அமைச்சர்கள் இருந்தனர் . காமராசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி சுப்பிரமணியம் , அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் இருவரையும் அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்த்திருந்தார்.

அரசியலமைப்பின் முதல்
திருத்தத்திற்கு வித்திட்டவர்.

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த , பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் கம்யூனல் ஜி . ஓ . '
 ( சமூக அரசாணை 1921 ( செப்டம்பர் 26 ) மற்றும் 1922 ( ஆகஸ்டு 15 ) ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது .

இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர் , பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல்திருத்தம் கொண்டுவர வித்திட்டார் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951 - ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து , பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி , வேலை வாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர்.

 கல்விப் புரட்சி

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக இராஜாஜி அமல்படுத்திய குலக்கல்வி முறையை ஒழித்தார் . பூரண மதுவிலக்கை கொண்டு வந்ததால் இராஜாஜி அரசினால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை மறுபடியும் திறந்தார் .

300 க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன . இதன்மூலம் 14000 புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன . ராஜாஜி ஆட்சியில் மொத்தம் இருந்த 12000 பள்ளிகளின் எண்ணிக்கை காமராஜர் ஆட்சியின் போது 27000 ஆக அதிகரித்தன .

மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது , 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1 , 995 ஆனது , மாவட்டம் தோறும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன.

 ஆசிரியர் நலனுக்காக ஆசிரியர் ஓய்வூதியத் திட்டம் ' அறிமுகப்படுத்தப்பட்டது . எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி , வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும் , மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார்.

அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது . ( வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது ) . பள்ளிகளில் வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

நெ.து.சுந்தரவடிவேலுவை பொதுக் கல்வி இயக்குநராக நியமித்தார் . அவரது கல்வித் தலைமையின் கீழ் பல்வேறு முற்போக்குக் கல்வித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன , காமராஜர் ஆட்சியில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டது . இதன்படி , தமிழும் ஆங்கிலமும் கட்டாயப் பாடங்களாகவும் , இந்தி விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957 - 58 - ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர் . 1956 - ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே 1959 ஜனவரியில் , தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ' தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் ' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது .

இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார் . கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது .

இத்துடன் ' தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம் ' தோற்றுவிக்கப்பட்டது . தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகையும் , அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன . பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960 - ல் வெளியிடப்பட்டது . 1955 ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ' மெட்ராஸ் ஸ்டேட் ' என்பதை ' தமிழ்நாடு ' என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது .

 இதுகுறித்து சட்டமன்றத்தில் 24 . 2 . 1961 - ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி . சுப்பிரமணியம் , ' மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ' என்று தெரிவித்தார் . சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர் .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY