Ads Right Header

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் - காமராஜர் ஆட்சி (Part -2)



அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்

சென்னை ஐ . ஐ . டி ,
ராமானுஜம் கணித நிறுவனம் , சென்னை.
அடையாறு புற்றுநோய்
ஆராய்ச்சி நிறுவனம் ,

திருச்சி பிராந்திய
தொழில்நுட்பக் கல்லூரி ,

கோவை அரசு பொறியியல் கல்லூரி ,

காரைக்குடி மின் வேதியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட முக்கிய உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாகும்.

தொழில் வளர்ச்சி

ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது , இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்  பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது .

சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை , சென்னை.

 கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை.

 ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை ,

திருச்சி திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை ( BHEL ) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும் , 2 , 400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன .

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று , பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ' மகாநவரத்தினா ' என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம்.

 பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு , தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன .

மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் , அசோக் லேலண்ட் தொழிற்சாலை , டி . ஐ . சைக்கிள் தொழிற்சாலை , சிம்சன் , இந்தியா பிஸ்டன்ஸ் , டி . வி . எஸ் , லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான்.

 1951 - ல் தமிழகத்தில் 71 - ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை , 1962 முடிவில் 134 - ஆகப் பெருகியது . அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன.

சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது . இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன் . மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது , கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது.

 ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது .

அதே போன்று , மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது .

கோவை மாவட்டம் மதுக்கரை , திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் , ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன .

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ' மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட் ' என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது .

1962 - ல் சேலம் , சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும் , வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை , கிண்டி , விருதுநகரில் தொடங்கப்பட்டன .

இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம் , விருத்தாசலம் , கிருஷ்ணகிரி , தேனி , திண்டுக்கல் , கோவில்பட்டி , ராஜ பாளையம் , நாகார்கோவில் , சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ . 4 . 08 கோடி ஒதுக்கப் பட்டது .

இவற்றைத் தவிர மதுரை , திருநெல்வேலி , திருச்சி மற்றும் மார்த்தாண்டம் ( கன்னியா குமரி ) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன . சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1 , 200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன .

காமராஜர் ஆட்சியில் தொடங்கப்பட்ட பொதுத்துறை தொழில் நிறுவனங்கள்

1 . நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம் ( கிழக்கு ஜெர்மனி முதலீட்டைப் பெற்று தொடங்கப்பட்டது )
2 . பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை ( சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன் )
3 . திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் 4 . ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
 ( பிரஞ்சு தொழில்நுட்ப உதவியுடன் )
5. ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6 . கல்பாக்கம் அணுமின் நிலையம்
7 . கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை 8 . சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9 . மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10 . கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11 . துப்பாக்கித் தொழிற்சாலை
12 . நெய்வேலி அனல் மின் திட்டம்
 ( ரஷிய உதவியுடன் நிறைவேற்றப்பட்டது . )
13 . சேலம் இரும்பு உருக்காலை
14 . பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15 . அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16 . சமய நல்லூர் அனல்மின் நிலையம் 18 . நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை 19 . இந்துஸ்தான் டெலி பிரிண்டர் தொழிற்சாலை ( இத்தாலிய நிறுவனத்தின் ஒத்துழைப்போடு )

காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் துவங்கப் பட்ட சில முக்கியமான தனியார் தொழிற்சாலைகள் * ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் , சென்னை . ஆண்டொன்றுக்கு 5000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது . * அசோக் லேலண்ட் சென்னை . ஆண்டொன்றிற்கு 5400 சேசிஸ் தயாரிக்கும் திறன் கொண்டது * டி . ஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா , சென்னை . ஆண்டொன்றிற்கு சுமார் 30 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்தது . * பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சிம்சன்ஸ் , இந்தியா பிஸ்டன்ஸ் , டி . வி . எஸ் மற்றும் திருச்சித் துப்பாக்கித் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகளும் அமைக்கப் பட்டன . * 1962ல் சவுத் இந்தியா விஸ்கோஸ் என்ற கூட்டுறவு ஆலை கோவை சிறுமுகையில் நிறுவப்பட்டது , * காமராஜர் ஆட்சிக்கு முன் 3 ஆக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது * பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன.

Whatsapp ல் இணைந்திட
https://chat.whatsapp.com/GONlwS7zjkqADfD30FTJgb

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY