Ads Right Header

10th - சமூக அறிவியல் 25 + 25 முக்கிய குறிப்புகள்! (Part -1)


உலக இரும்பு உற்பத்தியில் இந்தியாவின் டாடா நிறுவனத்தின் இடம் எது ? 10.

இந்திய இரும்பு எஃகு குழுமம் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு எது ? 1972

இந்திய இரும்பு எஃகு குழுமம் ( IISCO ) எங்கு எப்போது துவங்கப்பட்டது ? பர்ன்பூர் , 1919

விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் துவங்கப்பட்ட ஆண்டு?
1923

விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் எங்குள்ளது ? அதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் என்ன ?
பத்ராவதி ( கர்நாடகா - ஷிமோகா ) , உலோகக்கலவை மற்றும் உயர்தர எஃகு.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கப்பல் கட்ட தேவையான எஃகு தகடுகள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய்

அதி நவீனமான கட்டுமான பொருட்கள் ரயில் தளவாடங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இடம் ? ஹிந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய்

இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய் எதற்கு புகழ்பெற்றது ? எஃகு தகடு ,
ரயில் தளவாட பொருட்கள் , அதி நவீன கட்டுமானப்பொருட்கள் , கப்பல் கட்டத்தேவையான பொருட்கள் .

இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - ரூர்கேலா எதற்கு புகழ்பெற்றது ? சூடேற்றிய மற்றும் குளிரச்செய்த எஃகு உருளைகள் , மின்முலாம் பூசப்பட்ட தகடு மற்றும் மின் எஃகு தகடுகள் .

இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - துர்க்காபூர் எதற்கு புகழ்பெற்றது ? உலோகக்கலவையிலான கட்டுமானப்பொருட்கள் , தண்டவாளங்களை தாங்கி பிடிக்கும் இரும்பு சட்டங்கள் .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பொகாரோ எதற்கு புகழ்பெற்றது ? எஃகு தயாரிப்பில் உருவாகும் கழிவுகளைக் கொண்டு சிந்திரி உரத் தொழிலகத்தில் உர உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

விஜய நகர் எஃகு ஆலை எங்குள்ளது ? டோர்நகல் ( கர்நாடகா - ஹோஸ்பட் )

கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட முதல் இரும்பு எஃகு ஆலை எது ?  INCLUDI விசாகப்பட்டைணம் எஃகு ஆலை.

முதல் வாகனத்தொழிலகம் எது ? பிரிமியர் ஆட்டோமொபைல் ( குர்லா )

மின்னியல் பொருட்கள் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் இடம் எது?
           .பெங்களூர்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மின்னியல் தலைநகரம் எது ?           
       பெங்களூர் .
கார்பன் புகையை வெளியேற்றும் காரணிகள் எவை ? வாகனங்கள் , அனல் மின் - நிலையங்கள் , தொழிலகங்கள் , சுத்திகரிப்பு ஆலைகள்

காற்று மாசடைதலுக்கு முக்கிய காரணம் என்ன ? - வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை .

 நிலக்கரியை பயன்படுத்தும்போது வெளியேறும் வாயு எது ?
கந்தக - டை - ஆக்ஸைடு

மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயு எது ?
நைட்ரஜன் ஆக்ஸைடு .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியாவின் இடம் எது?
5.

உலகில் நிகழ்ந்த தொழிலக பேரழிவில் மிக மோசமான நிகழ்வு எது ? எப்போது நடைபெற்றது ?
போபால் வாயுக் கசிவு , 1984 .

ஓசோனை சேதப்படுத்தும் வாயு எது ? குளிர்சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் குளோரோ புளுரோ கார்பன்.

பசுமை வீடு வாயு எது ?
கார்பன் - டை - ஆக்ஸைடு

முதன்முதலில் அமிலமழை அறியப்பட்ட ஆண்டு ?  1852
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அமிலமழைக்கு காரணமான வாயு எது ? கந்தக - டை - ஆக்ஸைடு , நைட்ரஜன் ஆக்ஸைடு .

கடல்மீன்களில் உணவு எது ?
பிளாங்டன்

கடலில் உள்ள கார்பனை சுண்ணாம்புக்களாக மாற்றுவை எவை? பவளப்பாறைகள் .

முருகைகள் வளர தகுந்த வெப்பம் எது ? 10 ' செல்சியஸ்க்கு மேல் .

புகையும் மூடுபனியும் கலந்த கலவை எது ? நச்சுப்புகை .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இரு நாடுகளுக்கிடையே உடன்பாட்டின்படி நடைபெறும் வணிகம் . ..................எனப்படும்.
நேரிணை வணிகம்

பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் ...............எனப்படும்.
பல்கிளை வணிகம் .

வணிகக்கூட்டமைப்புகளுக்கு
எ . கா ?
OPEC , ASEAN , SPATA .

நாணய மதிப்பிற்கும் இறக்குமதியாகும் நாணய மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு ?
வணிக சமநிலை

 ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு இறக்குமதியாகும் பொருட்களின் மதிப்பை விட அதிகமிருந்தால் அது . . . ஆகும் .
சாதகமான வணிக சமநிலை .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சாதக வணிக சமநிலை நிகழும் நாடு எது ? ஜப்பான் ,

இறக்குமதி பொருட்களின் மதிப்பு ஏற்றுமதி பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் அது . . . ஆகும் பாதகமான வணிக சமநிலை .

பாதகமான வணிக சமநிலை நிகழும் நாடு எது ?
இந்தியா.

நெடுஞ்சாலையில் குறைவான நீளமுடையது எது ?
NH47.

NH47 எந்த இரு இடங்களுக்கிடையே செல்கிறது ? எர்ணாகுளம் - கொச்சி துறைமுகம் .
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அதிக நீளமுடைய நெடுங்காலை எது ?
எந்த இரு இடங்களுக்கிடையே செல்கிறது ?
NH 7 வாராணாசி ( உ . பி ) - கன்னியாகுமரி .

உலகிலேயே மிக உயரமான் சாலை எங்குள்ளது ? மணாலி - லே ( காஷ்மீர் ) ,
4270 மீ .

உலகளவில் இந்திய ரயில்வே இன் இடம் என்ன ? 4.

ஆசிய அளவில் இந்திய ரயில்வே இன் இடம் என்ன? 2.

இந்திய ரயில்வே போக்குவரத்து
மண்டலங்களின் எண்ணிக்கை என்ன?
17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தேசிய நீர்வழி எண்ணிக்கை ?
 5

ஆசிய அளவின் இந்திய கப்பல் கட்டும் தொழிலின் இடம் என்ன ?
2.

உலகளவின் இந்திய கப்பல் கட்டும் தொழிலின் இடம் என்ன?
16.

இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளங்களின் எண்ணிக்கை?
4.

இந்திய துறைமுகச்சட்டம் ஆண்டு?
1908.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
⚓ Telegram
Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY