Ads Right Header

POLITY - உச்சநீதிமன்றம் ( சரத்து - 124 ) குறித்த முழு விளக்கம்!


உச்சநீதிமன்றம் ( சரத்து - 124 )

நீதித்துறை

உச்சநீதிமன்றத்தை தலையாய நீதிமன்றமாகக் கொண்ட சுதந்திரமான , ஒருங்கிணைக்கப்பட்ட நிதித்துறை ஒன்றினை நமது அரசியலமைப்பு ஏற்படுத்தியுள்ளது .

இந்த நீதித்துறை மத்திய , மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவதாகும் .

ஒருங்கிணைக்கப்பட்ட நீதித்துறை என்பது நாடு முழுவதும் பல அடுக்குகளிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் செயல்படுவது என்று பொருள்படும் .

 இந்தியாவின் உச்சநீதிமன்றம் , அனைத்து நீதிமன்றங்களுக்கும் தலைமையானது .

இந்தியாவில் உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக உள்ளது .

இது புதுடெல்லியில் அமைந்துள்ளது .  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் , இந்தியாவின் வேறு எந்த ஒரு பகுதியிலும் அமர்வுகளை நடத்தி முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியத் தலைமை நீதிபதிக்கு உண்டு.

குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது . அது மட்டுமின்றி , அரசியலமைப்பு விதிகளை விளக்குவதிலும் , நிர்வாக , சட்டமன்றத் தலையீடுகளிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் , நீதித்துறை முக்கியப் பங்காற்றுகிறது.

உச்சநீதிமன்றத்தின் அமைப்பு  1950 - ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது , உச்சநீதிமன்றத்தில் , இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் இடம் பெற்றிருந்தனர் .

தற்போது ஒரு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளனர் .

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளை நியமிப்பது குடியரசுத் தலைவர் ஆவார் .

நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யப்படும் நீதிபதிகளைத் தவிர தற்காலிக அடிப்படையிலும் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கும் அரசியலமைப்பில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது .

 தலைமை நீதிபதி நியமனத்தின் போது மற்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவினை ஆலோசனைசெய்து குடியரசுத் தலைவர் நியமிப்பார் .

மற்ற நீதிபதிகளை நியமிக்கும் போது இந்தியத் தலைமை நீதிபதிகளை ஆலோசித்தல் வேண்டும் .

நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும் .

நீதிபதி ஒருவரை குடியரசுத் தலைவர் தனது உத்தரவு ஒன்றின் வாயிலாக நீக்கலாம் . ஆனால் அந்த நீதிபதியின் மெய்ப்பிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை குறித்து நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் , அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையினராலும் , அந்த அவையின் உறுப்பினர்களின் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையினராலும் ஆதரிக்கப்பட்ட ஒரு வேட்பாளரை ஒரே தொடர் அமர்வில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தகுதிகள்

*இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும் மற்றும்

*தொடர்ந்து குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களிலோ நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
அல்லது

*தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர் நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்குரைஞராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது

*குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதி அறிஞராக இருத்தல் வேண்டும் .

*நீதிபதிகளுக்கு பதவிப் பிராமாணம் செய்து வைப்பவர் குடியரசுத் தலைவர் ஆவார் .

பதவிக்காலம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் , பிற நீதிபதிகளும் 65 வயது நிறைவடையும் வரை பதவி வகிக்கலாம்

பதவிக்காலத்திற்கு முன்கூட்டியே தங்களது பதவி விலகலைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.

நாடாளுமன்ற குற்றச்சாட்டுகள் மூலமும் பதவி நீக்கம் செய்யலாம் .

ஓய்வு பெற்ற பிறகு இந்தியப் பரப்பெல்லையில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்காடக் கூடாது.

நீதிபதிகளின் ஊதியத்தினை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது . ஆனால் அது பதவிக் காலத்தில் குறைத்தல் கூடாது .

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தாலோ அல்லது பணியாற்ற இயலாத நிலையில் இருந்தாலோ , குடியரசுத் தலைவர் வேறு ஒரு நீதிபதியைத் தலைமை நீதிபதியாக
நியமிக்கலாம்.(சரத்து - 126).

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY