Ads Right Header

நடப்பு நிகழ்வுகள்! (15/04/2020) (16/04/2020)


1. தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ தனி இட ஒதுக்கீடு .

ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது.

இதற்கான முதல் கட்ட கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
அரசு பள்ளியை சேர்ந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எத்தனை சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 2 தேசியநிகழ்வுகள்

கரோனா தொற்றுக்கு பணியாற்ற குழு அமைப்பு .

5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

1 . டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்புக்குழு
2 . விரிவான மற்றும் பொருளாதார கண்டறிதல் .

3. புதிய மருந்துகள் மருந்து உற்பத்தி செயல்பாடுகள்

4 .மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்

5 . உணவு பொருள் வழங்கல் சங்கிலியை மேம்பாடு அடையச் செய்தல் சூரிய மின் சக்தி நிலையம் .

ராஜஸ்தானில் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தை விக்ரம் சோலார் நிறுவனத்திடம் தேசிய அனல் மின் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

 மத்திய பிரதேச மாநிலம் மந்த்சௌரில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் ராஜஸ்தானில் பத்லா பகுதியில் 130 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் போன்றவற்றை என்டிபிசிக்காக அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் வௌவ்வால்களின் கரோனா வைரஸ்.

தமிழகம் கேரளா இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் வௌவ்வால்களின் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த பேட் கரோனா வைரஸ் இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .

இந்த வைரஸ்க்கும் கோவிட் 19 பாதிப்புக்குக் காரணமான கரோணா வைரஸ்க்கும் தொடர்பில்லை.

 உணவு வங்கி

மணிப்பூரை சேர்ந்த இம்பால் கிழக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வங்கி என்ற முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்கு உணவு அளிக்க இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

 3 ) அறிவியல்மற்றும் தொழில்நுட்பம்

தொலைதூர சுகாதார கண்காணிப்பு அமைப்பு .

இந்தியாவின் முதல் தொலைதூர சுகாதார கண்காணிப்பு அமைப்பை அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டுடன் இணைந்து ரிஷிகேஷில் அமைக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களை இவ்வமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது .

Collab CAD இணையதளம்

நிதி ஆயோக் , அடல் புதுமையான கண்டுபிடிப்பு மிஷன் , தேசிய தகவல் மையம் இணைந்து ஆய்வகத்தில்  இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளது .

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தங்கள் புதுமையான சிந்தனை , கற்பனை படைப்பாற்றலை collab CAD மூலம் முப்பரிமாண வடிவத்தில் உருவாக்கலாம்

4 ) சர்வதேச நிகழ்வுகள்

எந்திர துப்புரவு பணியாளர்

மிகப்பெரிய இடங்களிலுள்ள கரோணா நோய்த்தொற்று போன்ற நுண்கிருமிகளை மிக விரைவில் கிருமி நாசினி தெளித்து அளிக்கும் திறன் கொண்ட இயந்திர மனிதர்களை சிங்கப்பூர் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு கரோணோ நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்திற்கு எக்ஸ்ட்ரீம் டிஸின்ஃபெஷன் ரோபோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 உலக வணிக அமைப்பு அறிக்கை

உலக வணிக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகளாவிய பொருளாதாரத்தில் இந்த ஆண்டில் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

பொருளாதாரம்

இறையாண்மை தங்க
பத்திரங்கள் வெளியீடு

இந்திய அரசு ஏப்ரல் 20 முதல் இறையாண்மை தங்க பத்திரங்களை வெளியிடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 2 . 50 சதவீத வட்டி விகிதம் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

 இறையாண்மை தங்கப்பாத்திரங்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 செப்டம்பர் வரை ஆறு தவணைகளில் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 இறையாண்மை தங்க பத்திரத்தை அரசாங்கம் பத்திரங்கள் சட்டம் 2006 பிரிவு 3 கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

நோமூரா கணிப்பு

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஜப்பானை சேர்ந்த நோமூரா என்ற நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 . 1 சதவீதமும் மற்றும் செப்டம்பர் காலாண்டில் 0 . 51 சதவீதம் குறையும் எனவும் கணித்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் 1 , 4ரூ விரிவடையலாம் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் 3 . 2 சதவீதம் வளர்ச்சி அடையலாம் என்று கணித்துள்ளது

6 ) விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

 2021 ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

 கொரோனா வைரஸ் காரணமாக ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நவம்பர் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் என இந்திய குத்துச்சண்டை பெடரேஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா 1980ஆம் ஆண்டு மும்பையில் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையை நடத்தியது .

7 ) வெளிநாட்டு உறவுகள்

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஹர்பூன்ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மார்க் 54 ரக வெடிகுண்டுகள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

 அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்ற அந்தஸ்து இந்தியாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 Whatsapp
tnkural.com tnpsc

⚓ Telegram
Click here to join TG
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY