Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் - (21/04/2020)


1 ) தேசிய நிகழ்வுகள்

லித்தியம் கொண்ட நட்சத்திரம்

பெங்களூர் இந்திய வானியல் நிறுவனத்தில் ஈஸ்வர் ரெட்டி என்பவர் தலைமையில் லித்தியம் கொண்ட மிகப்பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Covid FYI 

Covid FYI டிஜிட்டல் வழிகாட்டு தளமாகும். கொரோனா வைரஸ் பற்றிய சேவைகள் மற்றும் உதவி எண்கள் அடங்கிய தளம் ஆகும். கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த மாணவி சிம்ரன் சோனி தலைமையில் உருவாக்கப்பட்டது.

தேசிய பாரம்பரிய 
கலாச்சார பட்டியல் வெளியீடு

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலால் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தின் தேசிய பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த முன்னெடுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வை 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த பட்டியல் யுனெஸ்கோவின் மனிதநேயத்தின் தொட்டு உணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
13 கூறுகளையும் கொண்டுள்ளது.

புவிசார் சமூக சமையலறை

இந்தியாவில் முதன்முதலாக உத்தரப்பிரதேச மாநில அரசு 75 மாவட்டங்களில் 7368 சமூக
சமையலறை மற்றும் சமூக முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவு கிடைக்காதவர்களுக்கு உணவுகள் பெற இந்த சமையல் அறை உருவாக்கப்பட்டுள்ளது.

சமையலறை இடங்கள் பற்றிய தகவல்களை பெற உத்திரப்பிரதேச மாநில அரசு Google ன் geo map உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

2 ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

சி . எஸ் . ஐ . ஆர் மொத்த மேலங்கி 

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் இயங்கும் தேசிய வான்வெளி ஆய்வகமானது ஒரு சுய பாதுகாப்பு கொண்ட மேலங்கியை உருவாக்கியுள்ளது.

இந்த அடங்கியானது புரப்பலீன் கொண்டு நூற்கப்பட்ட பல அடுக்கு உடைய ஒரு நொய்யப்படாத துணியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .

இந்த அங்கியின் முக்கியமான பயன் என்னவெனில் இறக்குமதி செய்யப்பட்ட மற்ற அங்கிகளுடன் ஒப்பிடப்படும் பொழுது இது விலை குறைந்ததாக உள்ளது .

விண்வெளிப் பயணத் திட்டம் 

நாசா 9 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்வெளி பயணத்தை செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது .

இந்த திட்டமானது பால்கன் 9 விண்கலத்தை பயன்படுத்தி செலுத்தப்பட இருக்கிறது .

எலோன் மஸ்க் விண்வெளி நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்கள் செலுத்தும் முதலாவது திட்டம் இதுவாகும் .

Bug Sniffer

Bug sniffer நோய்க்கிருமிகளை விரைவாக கண்டறியும் கருவி.

 புனேவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது.

30 நிமிட கால இடைவெளியில் மில்லி லிட்டர் அளவு 10 வகையான நோய் கிருமி பாக்டீரியாவின் கண்டறியும் திறன் கொண்டது.

3 ) விளையாட்டு 

Team Mask Force 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்ட பிரச்சாரமாகும்.

நோக்கம்

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த துவக்கப்பட்டது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY