Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் (22/04/2020) (23/04/2020)


1 ) தேசியநிகழ்வுகள்

மின்சார வாகனங்களின் விற்பனை

* மின்சார வாகனங்களின் விற்பனையாளர்கள் சங்கமானது மின்சார வாகனங்களின் விற்பனை குறித்த தரவை வெளியிட்டுள்ளது.

* இந்த அறிக்கையின்படி மின்சார வாகனங்களின் விற்பனையானது நேத்து 2019 20 ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது .

பெட்ரோலிய கார் இறக்குமதி

* அயல்நாட்டு வர்த்தகத்திற்கான பொது இயக்குநரகமானது பெட்ரோலிய கரி இறக்குமதிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது .

* இதற்கு முன்பு பெட்ரோலிய கரி இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.

* பெட்ரோல் கரி இறக்குமதியானது சுண்ணாம்பு சூளை சிமெண்ட் வளிமயமாக்கல் , கால்சியம் கார்பைடு தொழிற்சாலை ஆகியவற்றில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

* உலகில் பெட்ரோலிய நிலக்கரியை மிகப்பெரிய அளவில் நுகரும் நாடு இந்தியா ஆகும்.

பழுதுபார்க்கும் கடைகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

* சரக்குகளை கொண்டு செல்லும் பெரிய வண்டிகள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பழுதை சரி செய்து கொள்ள அருகில் ஏதேனும் பழுது கடைகள் உள்ளதா என அறிந்துகொள்ள இந்த அட்டவணையை உதவும்

* இந்த அட்டவணை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

* ஓட்டுனர்கள் உதவி பெற உதவி எண் 1033 ஐஅறிமுகம் செய்துள்ளது.

* இதன் மூலம் அருகில் பழுது கடைகள் உள்ளதா என்பதை பற்றிய தகவல்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

உபரி அரிசியை எத்தனாலாக
மாற்ற அனுமதி.

* மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற தேசிய உபரி எரிபொருள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உபரி அரிசியாக மாற்றும் செய்ய இந்திய உனாவு கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

* தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018 இன் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை.

* அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது .

* இந்த அவசர சட்டப்படி மருத்துவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

* சுகாதாரத் துறை பணியாளர்கள் மீது எந்த ஒரு தடையும் பிணையில் வெளிவர முடியாத குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 Tiranga

* கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டம் நிர்வாகம் Tiranga என்ற விரைவான பரிசோதனை வண்டியை அறிமுகம் செய்துள்ளது.

* இதன் மூலம் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு விரிவான பரிசோதனை மேற்கொண்டு தொற்று உள்ளவர்களை எளிதில் அடையாளம் கண்டறியும் முடியும்.

சுஜலாம் சுபலம் ஜல் சஞ்சய் அபியான்

* குஜராத் மாநில அரசு சுஜலாம் சுபலம் ஜல் சஞ்சய் அபியான் என்ற திட்டத்தின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளது

* ஏரிகள் ஆறுகள் அணைகள் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல் படிவுகள் அகற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் .

* ஜுலை 10 , 2020 அன்றுக்குள் மகாத்மா காந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் முடிக்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .

* கடந்த 2018 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது * மழைக்காலத்திற்கு முன்னர் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆழமாக்கி பாதுகாப்பதே திட்டத்தின் நோக்கமாகும்

பிளாஸ்மா ஆராய்ச்சியில் முதலிடம் வல்லபாய்படேல் நிறுவனம்

* வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பிளாஸ்மா ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

* கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சியில் முதலிடத்தில் இந்த நிறுவனம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ட்ரைமெருகரஸ் சாலன்

* இது சமீப காலத்தில் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊர்வன இனத்தில் ஐந்தாவது வகை ஆகும்.

* இது பக்கே கேசாங் மாவட்டத்திலுள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

* இந்தியாவிலிருந்து கண்டறியப்பட்ட இனங்களில் சாவரின் விரியன் பாம்பு கண்டுபிடிப்பதற்கு முன்னர் வடக்கில் ஏழு வகை பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

*விரியன் பாம்புகளானது கண் மற்றும் நாசிக்கு இடைப்பட்ட அதன் வெப்பம் உணர் உறுப்புகளினால் நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன .

Saiyam app

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சர்வதேச நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று குணமடைந்த வீடு திரும்புபவர்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்காக புனே மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் saiyam செயலி என்ற மொபைல் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது .

தொற்றுள்ளவர்களின் நடமாட்டத்தை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் குறித்து எச்சரிக்கை விடப்படும்.

Aayu செயலி

கரோனா வைரஸ் தொற்றையடுத்து கிராமப்புற மற்றும் நகர்புற பகுதியில் மக்களுக்கு தரமான சுகாதார சேவை வழங்க சுகாதார செயலியான Auyu உடன் ராஜஸ்தான் மாநில அரசு இணைந்துள்ளது.

மேலும் மருந்துகள் வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

c - sanjeevani - opd

 ஊரடங்கு உத்தரவினால் மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் அடையும் மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை பெற e - sanjeevani - opd என்ற இணைய சேவையை இமாச்சலப் பிரதேச மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

 e - sunjeevani - opd மூலம் ஏதேனும் தொற்று அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே இணைய சேவை மூலம் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்

3 ) நியமனம்

குடியரசுத்தலைவரின் செயலாளராக கபில்தேவ் திரிபாதி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் புதிய செயலாளராக கபில்தேவ் திரிபாதி நியமனம் செய்யப்படுவதாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .

I am badminton முகாமிற்கு பிவி சிந்து தூதுவராக நியமனம்.

 i am badminton முகாமிற்கு தூதுவராக பிவி சிந்துவை இறகு பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு நியமித்துள்ளது.

இளைஞர் மற்றும் பாரா பேட்மின்டன் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவும் தாக்கமருந்து கொள்வதை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்குவிக்கவும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4 ) சர்வதேச நிகழ்வுகள்

தோள் முதுகு ஆமை அல்லது பேராமை.

தோல் முதுகு ஆமைகள் உலகின் மிகப்பெரிய கடல் ஆமைகளாக விளங்குகின்றன .

இந்த இனத்தின் அதிக எண்ணிக்கையிலான கூடுகளானது சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது .

இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2020

 உலக பத்திரிகை சுதந்திரம் குறியீடு 2020 பட்டியல் ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்டது .

இதில் இந்தியா 180 நாடுகளில் 142 வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்தியா பத்திரிகையாளர் சுதந்திரத்தை பாதுகாப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

முதலிடம் நார்வே , இரண்டாம் இடம் பின்லாந்து , மூன்றாமிடம் டென்மார்க் கடைசி இடம் வடகொரியா.

கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கியது லெபனான் அரசு.

லெபனான் நாட்டு பாராளுமன்றம் கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கி மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

 மருத்துவ மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக அந்நாட்டு அரசு சட்டப்பூர்வமாக்கி உள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது.சாகுபடியை சட்டப்பூர்வமாக்கி உள்ளதால் அதிக மதிப்பு கூட்டப்பட்ட மருத்துவ தயாரிப்புகளை உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY