Ads Right Header

நடப்பு நிகழ்வுகள் (24/04/2020)தமிழ்நாடு

கொரோனா நடவடிக்கைகள் தமிழ்நாடு

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முன் களப்பணியாளர்கள் இறந்தால் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையானது தற்போது உள்ள 10 லட்சம் என்ற தொகையில் இருந்து 50 லட்சம் என அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் .

இந்த கருணை தொகையானது சுகாதாரம் காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாக துறைகளுக்கும் பொருந்தும் .

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு அரசு வேலை வழங்கப்படும் .

தமிழ்நாடு ஆரோக்கியம் சிறப்பு திட்டம்

பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார் .

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தேசியநிகழ்வுகள்

பழங்குடியின் ஆசிரியர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு இல்லை.

நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பழங்குடியின ஆசிரியர்களுக்காக 100 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று 5 நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு கூறியுள்ளது.

 நீதிமன்றமானது 50 சதவீதம் என்ற அளவிற்கு இட ஒதுக்கீடு உச்சவரம்பை அனுமதிக்கும் . இந்திரா சகானி வழக்கை தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது.இந்த வழக்கு 2000 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று உயர்நீதிமன்ற அமர்வினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஒரு வழக்காகும்.

மருத்துவர்கள் தியாகிகள் அந்தஸ்து

ஒடிஷா மாநில முதல்வரான நவீன் பட்நாயக் வைரஸ் தொற்று போராட்டத்தின் போது இறக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதார நலப் பணியாளர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர்களுடைய குடும்பத்தினர் 50 லட்சம் நிதியை நிவாரணமாக பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் அவர் மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மீது  தாக்குதல் நடத்தும் நபர்களின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நடமாடும் ஆய்வகம்

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வகத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் ஹைதராபாத்தில் உள்ள இ . எஸ் . ஐ மருத்துவமனை , தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்த ஆய்வகத்தை டி . ஆர் . டி . ஓ வடிவமைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது .

பொருளாதாரம்

வங்கிகள் சேவை ஆறு மாதங்களுக்கு பொது சேவைகளாக அறிவிப்பு.

வங்கி சேவைகளை ஆறு மாதங்களுக்கு பொது பயன்பாட்டு சேவைகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழில்சார் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

அடுத்த ஆறு மாதங்களுக்கு வங்கி ஊழியர்கள் , அதிகாரிகள் எந்த ஒரு வேலை நிறுத்த போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட முடியாது. அக்டோபர் 21 - ஆம் தேதி வரை இந்த அறிவிப்பை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 0.8 சதவீதமாக சரியும் ஃபிட்ச்

 நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0 . 8 சதவீதமாக சரிவு தரக்குறியீடு நிறுவனம் அறிவித்துள்ளது .முந்தைய நிதியாண்டில் இந்த வளர்ச்சி 4 . 9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 - 22 நிதியாண்டில் பொருளாதார மீண்டெழுந்து 6 . 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஃபிட்ச் தெரிவித்துள்ளது .

அறிவியல்மற்றும் தொழில்நுட்பம்

வித்தியான் தான் 2.0

மின்னணு சாதனங்கள் மூலம் கற்றலுக்கான பங்களிப்புகளை பெறுவதற்கு வித்தியா தான் 2.0 என்ற தேசிய அளவிலான திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.

 மாணவர்களுக்கு மின்னணு சாதனங்கள் வழியாக கற்பதற்கான பாடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .

வாஷ்கரோ

இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வாஷ்கரோ என்ற மொபைல் பயன்பாட்டை வெளியிட்டுள்ளது . இந்த பயன்பாட்டின் மூலம் அருகில் ஏதேனும் வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க பட்டிருந்தால் அது குறித்த எச்சரிக்கையை மக்களுக்குத் தெரியப்படுத்தும்.

அப்தாமித்ரா செயலி

கர்நாடக மாநில அரசு அப்தாமித்ரா என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது * கோவிட் - 19 குறித்த மருத்துவ வழிகாட்டுதலையும் ஆலோசனை வழங்குவதே இந்த செயலியை நோக்கமாகும்.

டெலிமெடிஷன் ஆலோசனை முறையில் கொரோனா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

NanoBlitz 3Dகருவி

சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் மற்றும் நானோ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமெரிக்கா மூன்றும் இணைந்து நானோ ஃபிலிட்ஸ் 3d என்ற மேம்பட்ட கருவியை உருவாக்கி உள்ளனர்.

இந்த கருவி உலோக கலவைகள் பலதரப்பட்ட கலவைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி இயந்திர பண்புகளை அடையாளம் கண்டு அளவிடுவதற்கு மேம்பட்ட தரவுகளை பகுப்பாய்வு மேற்கொள்ள உதவும்.

Feluda வைரஸ் சோதனைக் கருவி

ஜுனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து Feluda என்ற குறைந்த விலையிலான கொரோனா வைரஸ் சோதனை கருவியை உருவாக்கி உள்ளனர்.

தேபோஜித் சக்கரவர்த்தி மற்றும் சோவிக் மைத்தி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கருவி ஒரு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவை தெரிவித்துவிடும் .

சர்வதேச நிகழ்வுகள்

நூர் செயற்கைக் கோள்

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையானது முதன் முறையாக விண்வெளியின் சுற்றுவட்டப் பாதைக்குள் ஒரு ராணுவச் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த செயற்கை கோளானது
நூர் ( ஒளி ) என பெயரிடப்பட்டுள்ளது.

 ஊரடங்கு காலத்தில் கற்றல்

ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள்கள் மற்றும் குழந்தைகளை தடுக்கும் அலுவலகம் கல்விக்கான நிதி முயற்சியின் கீழ் ஊரடங்கு காலத்தில் கற்றல் என்ற இணையதள உரையாடல் தொடரை தொடங்கியுள்ளது .

இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கோவிட் - 19 மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் , அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் உள்ள குறைகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க இந்த உரையாடல் தொடரை தொடங்கியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின்
நிர்வாக குழு தலைமை பொறுப்பு

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவுக்கான தலைமை பொறுப்பை இந்தியா மே மாதம் ஏற்க உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மாநாடு மே மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

மே மாதம் 22ஆம் தேதி நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.தற்போது நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பை ஜப்பான் வகித்து வருகிறது . அந்நாட்டின் ஓராண்டு அவகாசம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிர்வாக குழுவில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இடம் பெறவும் இந்தியாவுக்கு தென்கிழக்காசிய குழு ஆதரவு தெரிவித்திருந்தது.
Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY