Ads Right Header

படிப்பதற்கு முன் இதையும் படிங்க...


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு நீண்ட காலம் படிக்கும் போது நம்மை அறியாமல் ஒரு வித சோர்வு, வெறுமை, மனமுறிவு மற்றும் சலிப்பு ஏற்படும். அதை ஆங்கிலத்தில் Fatigue என்பார்கள். பொதுவாக போட்டித் தேர்வு என்பது மற்ற தேர்வுகளை விட முற்றிலும் மாறுபட்டது. இதற்கு கால எல்லை கிடையாது. குறிப்பிட்ட எல்கை வரை உள்ள பாடத்திட்டமும் கிடையாது. எனவே தேர்வுக்கு படிப்பவர்கள் இதை  சரியான முறையில் இனங்கண்டு களைய வேண்டும்.

1.தினந்தோறும் படிக்க வேண்டியுள்ளதால் ஒரு வித Monotonous மனநிலை ஏற்படும். இதை தவிர்க்க கொஞ்சம் subject-யை மாற்றி மாற்றி படிப்பதன் மூலமும் நண்பர்களுடன் கலந்துரையாடல் மூலமும் தவிர்க்கலாம்.

2.மேலும் இசை கேட்பதன் மூலமும் நல்ல இலக்கிய நயமுள்ள புத்தகங்களை படிப்பதன் மூலமும் கொஞ்சம் Refresh செய்து கொள்ளலாம். நகைச்சுவையான விஷயங்களை பேசுவதன் மூலமும் படங்களின் நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதன் மூலமும் போக்கலாம்.

3.படிப்பதை மிக சோர்வாக உணரும் சமயத்தில்  ஏதாவது விளையாட்டுகளில் [Indoor Game] ஈடுபடுவதன் மூலமும் போக்கலாம்.

4.முக்கியமாக நம்மிடம் எப்போதும் நேர்மறையான சிந்தனை இருக்கவேண்டும். இந்த மாதிரி சமயங்களில் மற்றவர்களிடம்  பகிர்ந்து கொள்ளும் போது சுற்றியுள்ளவர்கள் நம்மை குழப்ப வாய்ப்புள்ளது. அப்பொழுது உங்களின் Positive thoughts vibration உங்களை காப்பாற்றி கரையேற்றும். போட்டித் தேர்வை விட்டு விலக மாட்டீர்கள்.

5.சக்திமிக்க உணவுகளை [Nutritious Food] எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடம்பும் மனதும் திடப்படுவதல் Fatigue-ஐ தவிர்க்கலாம். அடிக்கடி Healthy Beverage எடுத்துக் கொண்டாலும்  ok.

6.சில பேர் தேர்வுக்கு படிக்கிறேன் என்று எல்லாவற்றையும் துறந்து படிப்பை மட்டும் ஒன்றே மேற்கொள்வார்கள். அது மிகவும் ஆபத்து. ஒரு கால கட்டத்தின் பின் அவர்கள் டயர்டாகி எதிர் திசையில் பயணிக்கூடும். எனவே படிக்கும் காலகட்டத்தில் மற்ற விசயங்களில் பங்கு கொள்வது அவசியம். அது உங்களை புத்துணர்வாக்கும்.

7.இதையும் தாண்டி நமக்கு ஒரு Fantasy அவசியம். அது நாம் எதிர்காலத்தில் நமது பணி குறித்த அனுமானம், லட்சியம் மற்றும் குறிக்கோள் சார்ந்த வாழ்க்கைகான ஆசை [Desire]. அந்த நினைப்பே உங்களை எப்போதும் Fresh ஆக வைத்திருக்கும்.

8. அரசாங்க வேலைகளில் பல சிரமங்கள் இருந்தாலும் பல நன்மைகளும் கூடவே இருக்கின்றன. இது போன்ற குவாரன்டைன் நேரங்களில் அதன் மதிப்பை நாம் உணர முடியும். வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் சிரமங்களை பார்க்கும்  நாம் எவ்வளவு Comfort Zone -ல் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளும் போது மனஅயர்ச்சி என்பதே இருக்காது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY