Ads Right Header

இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் பற்றிய சில தகவல்கள்!



🍕முதல் ஐந்தாண்டு திட்டம்1951 -
1956) ஹரார்டு டோமா மாதிரி
திட்டம்

● முன்னுரிமை வேளாண்மை
வளர்ச்சி (நீர்மின் திட்டம்,
நீர்ப்பாசன வசதிகளை
பெருக்குதல்)

● திட்டம் வெற்றியடைந்தது
சமுதாய முன்னேற்ற திட்டம்,
குடும்ப கட்டுப்பாட்டுத்
திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு
திட்டம்: (1956 - 1961)
மஹலனோபிஸ் மாதிரி

● முன்னுரிமை, அடிப்படை
மற்றும் கனரக தொழில்கள்
வளர்ச்சி.

● பிலாய், துர்காபூர்,
ரூர்கேலா இரும்பு எஃகு
தொழிற்சாலைகள்
உருவாக்கப்பட்டன.

● பெரம்பூர் இரயில் பெட்டித்
தொழிற்சாலை
உருவாக்கப்பட்டது.

🍣 மூன்றாம் ஐந்தாண்டு
திட்டம்: (1961 - 1966)

● முன்னுரிமை பெரும்
இயந்திரங்களை நம்
நாட்டிலேயே உருவாக்குதல்.

● வேளாண்மையில் சுய
தேவையைப் பூர்த்தி செய்தல்.

● பாகிஸ்தான், சீனாவுடன்
போர் மற்றும் பருவக்காற்று
பொய்த்ததால் வறட்சி
காரணமாக தோல்வி அடைந்து.

● தானியங்களை
பாதுகாப்போம் என்ற திட்டம்
தொடங்கப் பட்டது - 1965.

● பசுமை புரட்சி அறிமுகம்
செய்யப்பட்டது (1965)

🍲 மூன்று ஓராண்டு
திட்டங்கள் (1966 - 69)

● 1966 ரூபாயின் மதிப்பு
குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி
அதிகரித்து, இறக்குமதி
குறைந்தது.

● விலைவாசி குறைந்தது.

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்:
(1969 - 1974)

● தற்சார்பு அடைதல்,
ஏற்றுமதி அதிகரித்தல்.

● நீதியுடன் கூடிய வளர்ச்சி.

● விஜய நகரம், சேலம்,
விசாகப்பட்டினம் இரும்பு எஃகு
தொழிற்சாலைகள்
நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்:
(1974 - 1979)

● வறுமையை ஒழித்தல்.

● ஓராண்டு முன்னதாகவே
1978ல் ஜனதா அரசால்
நிறுத்தப்பட்டது.

● 20 அம்சத் திட்டம் (1975)
அறிமுகப்படுத்தப்பட்டது.

● தேசிய குறைந்தபட்சத்
தேவை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது.

● உருளல் திட்டம் (1978 - 80)
Rolling"Plan.

● TRYSEM - 1979 தேசிய
கிராமப்புற இளைஞர்களுக்கு
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
திட்டம் செயல்படுத்தப்பட்டது.

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்:
(1980 - 1985)

● ஏழ்மையை போக்க அதிரடி
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுதல்.

● தேசிய ஊரக
வேலைவாய்ப்பு திட்டம்.

● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி
திட்டம் (1980).

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்:
(1985 - 1990).

● வேலை வாய்ப்புகளை
அதிகப்படுத்துதல்.

● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா
(1989).

● வேலைக்கு உணவுத் திட்டம்
செயல்படுத்தப்பட்டது.

● ஓராண்டு திட்டங்கள் (1990 -
1992).

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்:
(1992 - 1997)

● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை
கட்டுப்படுத்துதல்.

● மொத்த உள்நாட்டு உற்பத்தி,
இலக்கை விட மிஞ்சியது.

● தாராளமயமாக்கப்பட்ட புதிய
பொருளாதாரக் கொள்கை
செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு
திட்டம்: (1997 - 2002)

● சமுதாய நீதி மற்றும்
சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.

● மக்கள் பங்கு பெறும்
அமைப்புகளை (மகளிர் சுய
உதவிக் குழு, கூட்டுறவுச்
சங்கங்கள்) முன்னேறச் செய்தல்.

🍫 பத்தாவது ஐந்தாண்டு திட்டம்:
(2002 - 2007)

● எட்டு சதவீதம் வளர்ச்சியை
எட்டுதல்.

● ஓராண்டுக்கு 10 மில்லியன்
வேலை வாய்ப்புகளை
உருவாக்குதல்.

● அனைவருக்கும் கல்வி
அளித்தல்.

● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச
திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு
திட்டம்: (2007 - 2012)

● வேளாண்மை வளர்ச்சி
விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்.

● 70 மில்லியன் வேலை
வாய்ப்புகள் உருவாக்குதல்.

● குழந்தை இறப்பு விகிதம்
1/1000 மாக குறைத்தல்.

● காடுகள் சதவீதம் 5% ஆக
உயர்த்ததுல்.

● அனைவருக்கும் சுத்தமான
குடிநீர் அளித்தல்.
Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY