Ads Right Header

Group 1&2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (100 வினாக்கள்)





1. ஓசோன் துளையானது முழுவதும் புற ஊதாக் கதிர்களை  அனுமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் பொருந்தாதது எது

A) கண்புரை
B) தோல் புற்றுநோய்
C) பார்வை இழப்பு
D) கன்ஜக்டிவிடிஸ்✓

2.  கூற்றுக்களை காண்க
 I. அதிகரிக்கும் உயரத்திற்கு ஏற்ப வெப்பநிலை அதிகரிப்பதை வெப்ப தலைகீழ் மாற்றம் என அழைக்கப்படும்.
 II. இந்நிலையில் வெப்ப காற்று மீது குளிர்காற்று காணப்படுகிறது

A) I மட்டும் சரி✓
B) II மட்டும் சரி
C) I மற்றும் II சரி
D)  இரண்டும் தவறு

3) வில்சன் சுழற்சி எதனுடன் தொடர்புடையது?

A) சூறாவளி
B) பெருங்கடல்✓
C) காற்றழுத்த தாழ்வு மண்டலம்
D) வளைகுடா

4) பசுபிக் பெருங்கடலில் காணப்படும் அகழிகளின் எண்ணிக்கை?

A)26
B)24
C)22✓
D)21

5) சுண்டா அகழியின் ஆழம்?

A)7450✓
B)7761
C)6531
D)10554

6) இந்தியாவில் ஓத ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இடங்களில் பொருந்தாதது எது?

 A)காண்ட்லா✓
 B)காம்பே வளைகுடா
 C)கட்ச் வளைகுடா
 D)சுந்தரவனம்

7)  மூன்றாம் நிலை காற்றுகள் என்று அழைக்கப்படுவது?

 A) வியாபார காற்று
 B) பருவக்காற்று
 C) வட்டாரக் காற்று
 D) தலக்காற்று✓

8)  அர்ஜெண்டினாவில் ஆன்ட்டிஸ் மலையின் கிழக்குச் சரிவில் வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A)  சிராக்கோ
B)  மிஸ்ட்ரல்
C)  ஹர்மாட்டன்
D)  சோண்டா✓

9) இந்தியாவில் கோதுமை பயிரிடுவதற்கு பெரிதும் உதவுவது கீழ்க்கண்ட எந்த காற்று?

A) தலக்காற்று
B) தென்மேற்கு பருவக்காற்று
C) ஜெட் காற்று✓
D) வடகிழக்கு பருவக்காற்று

10) மூடு பனியை எவ்வாறு அழைக்கின்றனர்?

A) மூடு மேகம்
B) தரை பனி
C) மழை மேகம்
D) தரை மேகம்✓

11) இது பார்ப்பதற்கு வெண்மையான உருண்டை வடிவம் கொண்ட கானாங்கெளுத்தி மீன் கூட்டம் போன்று காணப்படுகிறது?

A) கீற்று மேகம்
B) கீற்றுத் திரல் மேகம்✓
C) கீற்றுப் படை மேகம்
D) கார்படை மேகம்

12) கீழ்கண்ட எந்த மேகம் வான்வெளிப் போக்குவரத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது?

A) படை மேகம்✓
B) கார்படை மேகம்
C) தாழ் மேகம்
D) உயர் திரள் மேகம்

13) புகை + அடர் மூடுபனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) புகைப் பனி
B) மூடுபனி
C) அடர் பனி
D) பனிப்புகை✓

14) ராஸ்பி அலைகளுடன் தொடர்புடையது?

A) மிஸ்ட்ரல்
B) வியாபார காற்று
C) துருவ காற்று
D) ஜெட் காற்று✓

15) ராக்கி மலையில் இருந்து வீசும் மேற்கத்திய வறண்ட வெப்ப காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A)ஃபான்
B)சிரோக்கோ
C)மிஸ்ட்ரல்
D)சினூக்✓

16. தமிழ்நாட்டு மாநில மலரின் அறிவியல் பெயர்?

A) லிலியம் நீல்கிரியன்சிஸ்
B) ஸ்மைலாக்ஸ்
C) ரஸ்கஸ் டுலிப்பா
D) குளோரியோசா சூப்பர்பா✓

17. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் கீழ்கண்ட எந்த ஆண்டை பருப்பு வகைகளின் ஆண்டாக அறிவிக்க பரிந்துரைத்தது?

A)2015
B)2016✓
C)2017
D)2018

18. உலகெங்கிலும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும்  தாவரம் எது?

A) கேலிகா அஃபிசினாலிஸ்✓
B) கிளைட்டோரியா டெர்னேஷியா
C) லத்தரைஸ் ஓடோரேட்டஸ்
D)இன்டிகோஃபெரா டிங்க்டோரியா

19."தி ஹிஸ்ட்ரியா ப்ளான்டேரம்"  என்ற நூலின் ஆசிரியர்?

A) தியோஃப்ராஸ்டஸ்✓
B) கரோலஸ் லின்னேயஸ்
C)  பெந்தம் மற்றும் ஹீக்கர்
D) சார்லஸ் டார்வின்

20) இருசொற் பெயரிடும் முறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்?

A) காஸ்பர்ட் பாஹின்✓
B) கரோலஸ் லின்னேயஸ்
C) விட்டேக்கர்
D) பெந்தம் மற்றும் ஹூக்கர்

21)"தியரி எலிமெண்டரி டி லா பொட்டானிக்"(Theorie elementary de la botanique) என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

A) கரோலஸ் லின்னேயஸ்
B)  A.P. டீ காண்டோல்✓
C) எர்னஸ்ட் மேயர்
D) தியோஃபராஸ்டஸ்

22) தென் தமிழகத்தில் உசிலை என்றும் வட தமிழகத்தில் துரிஞ்சி என்றும் அழைக்கப்படும் தாவரம்?

A)கிளைசிரைசா கிளாப்ரா
B) குரோட்டலேரியா அல்பிடா
C)அம்பீஸியா அமாரா✓
D)செஸ்பானியா செஸ்பான்

23) ஜம்முவில் உள்ள தாவரவியல் பூங்கா யாருடைய பெயரில் அமைந்துள்ளது?

A) முத்துலட்சுமி ரெட்டி
B) கரோலஸ் லின்னேயஸ்
C) E.K ஜானகியம்மாள்✓
D) தர்மாம்பாள்

24) ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரங்கள் தோட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை
B) பாபிலோன்
C) ஊட்டி
D) திருவனந்தபுரம்✓

25) உலகிலேயே மிகப்பெரிய தாவரவியல் தோட்டமான ராயல் தாவரவியல் தோட்டம் எங்கு அமைந்துள்ளது?

A) கல்கத்தா
B) இங்கிலாந்து✓
C) பிரான்ஸ்
D)  மும்பை

26. 5 மீ× 3 மீ× 2மீ  அளவுள்ள ஒரு சுவர் எழுப்ப 50 செமீ× 30 செமீ× 20 செமீ அளவு கொண்ட செங்கற்கள் எத்தனை தேவை?

A) 1000✓
B  2000
C) 3000
D) 5000

27.10மீ×5மீ×1.5மீ  அளவுள்ள ஒரு நீர் தொட்டியின் கொள்ளளவு?

A) 75 லிட்டர்
B) 750 லிட்டர்
C) 7500 லிட்டர்
D) 75000 லிட்டர்✓

28) ஒரு கன செவ்வகத்தின் கன அளவு 660 செமீ^3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செமீ^2 எனில் அதன் உயரம்?

A) 10 செமீ
B) 12 செமீ
C) 20 செமீ✓
D) 22 செமீ

29) 10 செமீ× 6 செமீ × 5 செமீ  அழகுள்ள ஒரு கன செவ்வக பெட்டியின் மொத்த பரப்பு?

A) 280 செமீ^2✓
B) 300 செமீ^2
C) 360 செமீ^2
D) 600 செமீ^2

30. ஒரு கன சதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ^2  எனில் அதன் மொத்த பரப்பு?

A) 150 செமீ^2
B) 400 செமீ^2
C) 900 செமீ^2✓
D) 1350 செமீ^2

31. ஓர் இனிப்புகள் வைக்கும் பெட்டியானது 22cm×18cm× 10cm என்ற அளவில் உள்ளது. இதனை 1m× 88cm× 63cm அளவுள்ள ஒரு அட்டைப்பெட்டியில் எத்தனை எடுக்கலாம்?

A) 110
B)120
C)140✓
D)160

32)25, 36,49,64,81,__

A) 16
B) 9
C) 100✓
D)  125

33) மூன்று நாணயங்கள் ஒரே நேரத்தில் சுண்டப்படுகின்றன. பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு நிகழ்தகவினைக் காண்க.  இருபூக்கள் மட்டும் கிடைப்பது?

A)7/8
B)3/8✓
C)5/8
D)1/2

34.  ஒரு வருடத்திற்கு முன்பு ஒருவரின் வயது அவருடைய மகனின் வயதை போல் எட்டு மடங்கு. தற்போது அவருடைய வயது மகனின் வயதின் வர்க்கத்திற்கு சமம் எனில் அவர்களுடைய தற்போதைய வயதை காண்க.

A) 49 yrs, 7 yrs✓
B) 36 yrs, 6 yrs
C) 64 yrs, 8 yrs
D) 81 yrs, 9 yrs

35. முதல் 5 பகா எண்களின் இடைநிலை காண்க.

A) 3
B) 5✓
C) 7
D) 2

36. தொழில்துறை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.

I.  முதல் இயந்திரமாக்கப்பட்ட காகித ஆலை 1812 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் சொராம்பூரில் அமைக்கப்பட்டது.
II.  இந்தியாவின் முதல் வெற்றிகரமாக எண்ணெய் கிணறு 1859 ஆம் ஆண்டில் அசாமில் டிக்பாயில் தோண்டப்பட்டது.
 மேற்கூறியவற்றில் சரியானது எது/ எவை?
A) I மட்டும்✓
B) II மட்டும்
C) இரண்டும்
D)இரண்டுமில்லை

37. பின்வருவனவற்றில் தொழில் மூலதன காலம் என அழைக்கப்படும் காலகட்டம் எது?

A) 1757-1813
B) 1813-1858✓
C) 1858-1905
D) 1905-1947

38. பசுமைப்புரட்சியின் பிற பெயர்கள் யாவை?
I. புதிய விவசாய உத்தி
II. புதிய வேளாண் தொழில்நுட்பம்
III. விதை உரம் நீர் தொழில்நுட்பம்
IV. ரசாயன உர தொழில்நுட்பம்

குறியீடுகள்

A)I,III மற்றும் IV
B)I,II மற்றும் III✓
C)II,III மற்றும் IV
D) மேற்கண்ட அனைத்தும்

39. நிலவுடைமை முறைகள் பற்றி பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.
 I. நில உடைமை என்பது நில உரிமை மற்றும் மேலாண்மையை குறிக்கிறது.
II. இவை ஜமீன்தாரி, மகல்வாரி மற்றும் ரயத்துவாரி அமைப்புகளை கொண்டது.
 மேற்கூறியவற்றில் சரியானது எது/ எவை?

A) I மட்டும்
B) II மட்டும்
C) இரண்டும்✓
D) இரண்டும் இல்லை

40. எந்த ஐந்தாண்டுத்திட்டம் காட்கில் யோஜனா என்றழைக்கப்படுகிறது?

A)முதல் ஐந்தாண்டு
 B)மூன்றாம் ஐந்தாண்டு✓
 C)ஐந்தாம் ஐந்தாண்டு
 D)ஏழாம் ஐந்தாண்டு

41. பின்வரும் மாநிலங்களில் ரயத்துவாரி முறையின் கீழ் இருந்தவை யாவை?
I. தமிழ்நாடு
II. மகாராஷ்டிரா
III. கூர்க்
IV. அசாம்
 குறியீடுகள்:
A) II மற்றும் III மட்டும்
B) I மற்றும் IV மட்டும்
C) I,II மற்றும் III மட்டும்
D)  மேற்கண்ட அனைத்தும்✓

42) நிரந்தர நில வருவாய் ஜமீன்தாரி முறையின் கீழ் வசூலிக்கப்பட்ட வரியின் பங்கு என்ன?

A) 2/3
B) 5/6
C) 4/5
D) 10/11✓

43. பின்வரும் எந்த ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்துறை கொள்கை உருவாக்கப்பட்டது?

I. 1948
II. 1977
III. 1991
IV. 1980
 குறியீடுகள்
A) I,II மற்றும் III
B) II,III மற்றும் IV
C) I,III மற்றும் IV
D)  மேற்கண்ட அனைத்தும்✓

44. இரண்டாவது பசுமை புரட்சி இலக்கு ஆண்டு எது?

A) 2020✓
B) 2030
C) 2040
D) 2050

45. "நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சி" என்பதன் முக்கிய கவனம் எந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது?

A)ஒன்பதாம் ஐந்தாண்டு✓
 B)ஏழாவது ஐந்தாண்டு
 C)பதினொன்றாம் ஐந்தாண்டு
 D)பன்னிரண்டாம் ஐந்தாண்டு

46. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
 (எஃகு ஆலை)                    (உதவி)
A) ரூர்கேலா   -            ஜெர்மனி
B) பிலாய்        -            ரஷ்யா
C) துர்காபூர்.   -            பிரிட்டன்
D) பொக்காரோ-         அமெரிக்கா✓

47. முதல் நவீனமயமாக்கப்பட்ட சணல் தொழிற்சாலை பிரிவு எங்கு அமைக்கப்பட்டது?

A)ரேஷ்ரா✓
 B)ஹூக்ளி
 C)கல்கத்தா
 D)துர்க்காபூர்

48. வாழ்க்கை தர குறியீட்டினை உருவாக்கியவர் யார்?

 A)மோரிஸ் டி மோரிஸ்✓
 B) பிசுவாஜித்  குகா
 C)வில்லியம் எங்கின்ஸ்
 D)அமர்த்தியா குமார் சென்

49)  மனித மேம்பாட்டுக் குறியீட்டுக்காண கணக்கீடானது மனித வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களை புறக்கணித்துள்ளது என்று கூறியவர்?

A) பிஸ்வஜித் குஹா✓
B) D.மோரிஸ்
C) அமர்த்தியா சென்
D) கிரிகர் டிமிட்ரோவ்

50. வருடாந்திர திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு?

A) 1989-1991
B) 1990-1992✓
C) 2000-2001
D) 1981-1983

51." ஒரு இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான் என்று கூறியவர்?

A) தாதாபாய் நவரோஜி
 B) R.C தத்
 C) சர் மால்கம் டார்லிங்✓
 D) ஜஸ்டின் ஆஸ்வால்ட்

52. PURA தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.

I. உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்புறங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதாகும்.
II. ஏ.பி.ஜே அப்துல் கலாம் எண்ணத்தில் உருவான திட்டமாகும்.
  மேற்கூறியவற்றில் சரியானது எது எவை?
A) I
B) II
C) இரண்டும்✓
D) இரண்டும் இல்லை

53. பொருந்தாதது எது?                                                                                             

 A) 20அம்சத் திட்டம்-1975
 B) வேலைக்கு உணவு திட்டம்-1977
 C) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்-1989✓
 D) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை   உறுதியளிப்புச் சட்டம்-2006

54. பின்வரும் எந்த சட்டம் சிறிய அளவிலான தொழில்களை வரையறுத்து வகைப்படுத்துகிறது?

A) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டம் 2006✓
B) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டம் 2000
C) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி திட்டம் 2002
D) குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி திட்டம் 2010

55. பின்வரும் எந்த  நிதிநிறுவனங்கள் கிராமப்புறக் கடனை குறைக்க உருவாக்கப்பட்டுள்ளது?

 I.வட்டார ஊரக வங்கி(Rrb)
 II.முன்னோடி வங்கித் திட்டம்
 III.மறு நிதியளிப்பு முகவர் வங்கி( முத்ரா)
 IV.மைக்ரோ நிதி

குறியீடுகள்:

A)I,II மற்றும் III
B)II,III மற்றும் IV
C)I மற்றும் IV
D) மேற்கண்ட அனைத்தும்✓

56. இந்தியாவில் எத்தனை வட்டார வட்டார ஊரக வங்கிகள் உள்ளன?

A) 104
B) 64✓
C) 98
D) 215

57. இந்தியாவில் ஏறக்குறைய  எத்தனை பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளன?

A)5/3
B)3/4✓
C)3/2
D)4/2

58. தேசிய ஊரக நல அமைப்பு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

A)  மார்ச் 12,  2005
B) ஏப்ரல் 12, 2005✓
C) ஆகஸ்ட் 12, 2005
D) ஜூன் 12, 2005

59. சில தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

A) தாதாபாய் நவரோஜி
B) சர் மால்கம் டார்லிங்
C) R.C தத்
D) கில்பர்ட் சிலேட்டர்✓

60. லார்ட் காரன்வாலிஸ் ____ல் நிரந்தர சொத்துரிமை சட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு _____ முறையை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது??

A) 1793, மகல்வாரிமுறை
B) 1893, ராயத்துவாரி முறை
C) 1793, ஜமீன்தாரி முறை✓
D) 1693 , இனவாரி முறை

61.5ம் ஐந்தாண்டு திட்டத்தை கைவிட்டு தொடங்கப்பட்ட திட்டம் எது??

A) ஓராண்டு திட்டம்
B) நிதி அயோக்
C) சுழல் திட்டம்✓
D) காட்கில் திட்டம்

62.PQLIன் எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டின் மேல் எல்லையான 100 என்பது எவ்வயதை குறிக்கும்? மற்றும் அதனை முதலில் எட்டிய நாடு?

A) 66, நார்வே
B) 28, கயனா பிசாவு
C) 77, ஸ்வீடன்✓
D) 33, பின்லாந்து

63. குடிபெயர்ச்சி பற்றி ' இரட்டை நஞ்சாக்கல்' என்னும் கருத்தை தன்னுடைய "சிறியது அழகு" என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்?

A) காந்தி
B) மால்கம் டார்லிங்
C) சுமாசர்✓
D) மோரீஸ் டி மோரிஸ்

64. PURA வின் விரிவாக்கம்?

A) Provisional of Urban facilities for Ranking Areas
B) Provision of Union facilities for Rural Action
C) Provisional of Urban facilities for Rural Areas
D) Provision of Urban facilities for Rural Areas✓

65. பொருத்துக
அ. வடமலைபுரம்              1. ராமநாதபுரம்
ஆ. கங்கைகொண்டான் 2. திருநெல்வேலி
இ. பாலக்குறிச்சி.            3.  தஞ்சாவூர் 
ஈ. துசி.                              4.  வட ஆர்க்காடு

A) 4321
B) 3241
C) 1234✓
D) 2314

66. அக்பரின் மத நம்பிக்கை தொடர்பாக பின்வருவனவற்றில் தவறானது எது?

 A)அனைத்து மதங்கள் தொடர்பான கோட்பாடுகளை தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்
B) அக்பர் அவருடைய சமகால வரலாற்று அறிஞரான பதானி என்பவரால் பாராட்டப்பட்டார்✓
C) அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாடு கூடத்தை நிறுவினார்
D) தொடக்கத்தில் இபாதத் கானாவில் இஸ்லாமிய அறிஞர்கள் கூடி ஆன்மிக விஷயங்களை விவாதித்தனர்

67. ஷெர்ஷா சூரி குறித்த பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.

I. அக்பர் மற்றும் தோடர்மால் ஆகியோர் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை பின்பற்றினர்
II. இவர் தன்னுடைய கல்லறை மாடத்தை புராண கிலா என்னும் இடத்தில் கட்டினார்
 மேற்கண்டவைகளில் தவறானது எது ?எவை?
A)I மட்டும்
B)II மட்டும்✓
C) இரண்டும்
D) இரண்டுமில்லை

68. பின் வருபவர்களும் அக்பரின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ராஜபுத்திரர்கள் யார்?

I. ராஜா மான்சிங்
II. ராஜா தோடர்மால்
III. ராஜா பீர்பால்
IV.  தாரா சுகோ
 குறியீடுகள்:
A)I,II மற்றும் III✓
B)II,III, மற்றும் IV
C)I,II, மற்றும் IV
D)I,III,மற்றும் IV

69. பாபர் நாமாவை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

A) முகமது காசிம்
B) அப்துல் ரஹீம்✓
C) தபிஸ்கான்
D) அப்துல்ஹமீது லகோரி

70. கீழ்கண்டவற்றுள் அக்பருடைய ஆட்சியின் போது மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் நுழைவாயிலாக விளங்குகியது?

A) சூரத்✓
B) பம்பாய்
C) மங்களூர்
D) கொச்சி

71. கீழ்க்கண்டவற்றுள் மராத்திய அரசர்களால் தமிழக பகுதியின் பண்பாட்டு தலைநகரமாக உருவாக்கப்பட்ட இடம் எது?

A) மதுரை
B) தஞ்சாவூர்✓
C) காஞ்சிபுரம்
D) வேலூர்

72. எந்த பேஷ்வா போர்ச்சுகீசியர்களிடமிருந்து 1738 ஆம் ஆண்டு சால்செட் மற்றும் பேசினை கைப்பற்றினார்?

A) பாலாஜி விஸ்வநாத்
B) முதலாம் பாஜிராவ்✓
C) பாலாஜி பாஜிராவ்
D) இரண்டாம் பாஜிராவ்

73) வேலூர் மற்றும் செஞ்சியை கைப்பற்றிய பிறகு சிவாஜி அவர்களால் யார் தஞ்சாவூரின் அரசராக அமர்த்தப்பட்டார்?

A) வெங்கோஜி✓
B) ஷாஜி
C) சம்பாஜி
D) ஷாகு

74. சிவாஜி சூரத் நகர் மீது தாக்குதல் நடத்திய ஆண்டு?

A)1666
B)1664✓
C)1665
D)1671

75) பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் பேஷ்வா ஆக முடிசூட்டப்பட்ட மராத்தியர்?

A) பாலாஜி பாஜிராவ்
B) முதலாம் மாதவராவ்
C) அகமது ஷா அப்தாலி
D) இரண்டாம் மாதவராவ்✓

76) தவறான கூற்றை கண்டுபிடி.

 I.மராத்தியர்கள்  1752 இல் தில்லியில் நுழைந்தார்கள்.
 II.தில்லியை விட்டு ஆப்கானியரையும் ரோகில்லாக்களையும் விரட்டி அடித்தார்கள்.
III. மராத்திய உதவியோடு வைசிராயாக பொறுப்பேற்ற இமாத் உல் முல்க் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்படும் பொம்மை ஆனார்.
A) I  மட்டும்
B)I  மற்றும் II
C)I II III மூன்றும்
D) இவற்றுள் எதுவுமில்லை✓

77) மராத்தியர் இராணுவ பலத்திற்கு கடைசி கட்டமாக இந்த வெற்றி அமைந்தது?

A) தக்காணப் போர் 1676
B) புரந்தர் உடன்படிக்கை 1665
C) மூன்றாவது பானிபட் போர் 1761
D) உத்கிர் போர் 1760✓

78) மராத்திய நிர்வாகத்தில் சமூக சட்ட திட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு நீதிபதியாக இருந்தவர்?

A) பண்டிட் ராவ்✓
B) சாரி நௌபத்
C) வாக்கியநாவிஸ்
D) நியாயதீஷ்

79) சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகத்தில் பொருந்தாதது எது?

I) அஷ்ட பிரதான் என அழைக்கப்பட்ட இந்த சபையில் ஆறு அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.
II) குதிரைப் படையின் தலைமை தளபதி சாரிநௌபத் ஆவார்.
III) இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக 'ஹாஜிர்மஜ்லிம்'  அமைந்தது.
IV) பேஷ்வா என்ற அரேபிய சொல்லுக்கு முதன்மையான அல்லது பிரதம அமைச்சர் என்பது பொருள்.
A)I மற்றும் III
B)I மற்றும் IV✓
C)I II மற்றும் III
D)II மற்றும் III

80) மராத்திய ஆட்சியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 1739 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு  ஆட்சியிலிருந்து யாரை நீக்கியது?

A) பிரதாப் சிங்✓
B) ஷாகு
C)  இரண்டாம் சாம்பாஜி
D) இரண்டாம் ஷாஜி

81)  சிவாஜியைப் பற்றி 'மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியில் கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக சூளுரைத்தவர்?

A) பீஜப்பூர் சுல்தான்
B) அப்சல்கான்✓
C) அவுரங்கசீப்
D) ஜெய்சிங்

82) சிவாஜியுடன் நட்பு பாராட்டியவர்?

A) ராஜா மான்சிங்
B) ராஜா தோடர்மால்
C) ராஜா ஜஸ்வந்த் சிங்✓
D) ராம்தாஸ் மற்றும் துக்காராம்

83) இரண்டாம் புலிகேசியால்  முக்தம்பால் சத்திரம் நிறுவப்பட்ட ஆண்டு?

A)1802
B)1803✓
C)1804
D)1805

84) பேசின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?

A)1792
B)1772
C)1782
D)1802✓

85) பொருத்துக
( அக்பரை எதிர்த்து               இடங்கள்
போரிட்ட அரசர்கள்)   

a)ராணா உதய்சிங்          1. கோண்டுவானா
b)ராணி துர்கா தேவி.    2. மாளவம்
c)முசாபர் ஷா.                 3. மேவார்
d) பாஜ் பகதூர்.                4. குஜராத்

A)3142✓
B)2413
C)2412
D)4213

86. முகலாயர் காலத்தில் தோல் பதனிடும் தொழிலாளியாக செயல்பட்டவர்?

A) ரவி தாஸ்✓
B) கபீர்
C) சைன்
D) ராம்தாஸ்

87. அக்பர் காலத்தில்  ஒழிக்கப்பட்டவைகளில்/ ரத்து செய்யப்பட்டவைகளில் சேராதது எது?

A) ஜிசியா வரி (தலைவரி)
B) இந்து புனித யாத்திரை வரி
C) உடன்கட்டை ஏறுதல் முறை
D) இந்து திருமண முறை✓

88) அக்பர் மாளவத்தை பாஜ்பகதூரிடமிருந்து  கைப்பற்றிய ஆண்டு?

A)1560
B)1562✓
C)1576
D)1564

89) அக்பர் பரப்புரை செய்த தத்துவம் 'சுல்க்-இ-குல்' என்பதன் பொருள் என்ன?

A) அனைவருக்கும் அமைதி✓
B) அனைவருக்கும் அல்லாஹ்
C) அனைவருக்கும் மகிழ்ச்சி
D) எம்மதமும் சம்மதம்

90) தௌரா என்னுமிடத்தில் ஆப்கனியரைத் தோற்கடித்த ஹீமாயுன் பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்ட ஆண்டு?

A)1530
B)1537
C)1534
D)1532✓

91) எத்தனை மாதங்களுக்குப் பின்னர் முகலாயர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என பொய்யாக வாக்குறுதியளித்த ஷெர்ஷாவின் வார்த்தைகளை நம்பி உமாயூன் முற்றுகையை கைவிட்டார்?

A) ஆறு
B) ஏழு
C) ஐந்து
D) நான்கு✓

92)கர்நாடகத்தை சேர்ந்த பக்தி இயக்கமான 'தசருதா' இயக்கம் யாரால் பிரபலப்படுத்தப்பட்டது??

A) துளசிதாசர்
B) வியாசர்✓
C) ஏகநாதர்
D) துக்காராம்

93) ஷாஜகான் யாருடைய முயற்சியால் முகலாய அரசராக அரியணை ஏறினார்??

A) ஷாரியார்
B) குஸ்ரு
C) ஆசப் கான்✓
D) நூர்ஜஹான்

94) பிர்லோடி எவ்வாறு அழைக்கப்பட்டார்??

A) கான்-இ-கான்
B) கான்-இ-கானான்
C) கான்ஐகைன்
D)கான்ஜகான்✓

95) ஷாஜகானின் ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியரில் பிரெஞ்சு வைர வியாபாரி யார்??

A) பெர்னியர்
B) மனுச்சி
C) பீட்டர் முன்டி
D) தாவர்னியர்✓

96) ஔரங்கசீப் காலத்தில் நில வரியானது விளைச்சலில் எத்தனை பங்கு வசூலிக்கப்பட்டது??

A)1/3
B)1/6
C)1/2✓
D)1/4

97)  கோல்கும்பாஸ் கட்டிடம் பற்றி சரியான கூற்றை தேர்ந்தெடு.
a. கோல்கும்பாஸ் கட்டிடம் அடில்ஷாகி மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
b. அடர் நீலநிற கருங்கல்லால் கட்டப்பட்டது.
c. இதன் நான்கு முனைகள் எண்கோண வடிவில் அமைந்துள்ளது.
d. உலகின் முதல் உயரமான குவிமாட கட்டிடமாகும்.

A) a&b தவறு
B) a,b&c சரி
C)a&c சரி✓
D)a,c&d தவறு

98) முகலாயப் பேரரசில் கிராமத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்??

A) பஞ்ச்
B) முக்காடம்✓
C) ஊரார்
D) உக்காடம்

99) பிபீமக்பாரா(பெண்ணின் கல்லறை) எனப்படும் கல்லறை எங்கு அமைந்துள்ளது??

A) லாகூர்
B) ஔரங்காபாத்✓
C) ஷாஜகானாபாத்
D) பதேபூர் சிக்ரி

100)அக்பரின் வானியல் அறிஞரான _____ "தஜிகனிலகந்தி" என்னும் வானியல் ஆய்வு நூலை படைத்தார்?

A) துக்காராம்
B) ஜெகநாத பண்டிதர்
C) அப்துர் ரகீம்
D) நீலகண்டர்✓
               

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY