Ads Right Header

Group 1 & 2 - மாதிரி வினாத்தாள் விடையுடன்! (11/04/2020)



1. கிளைக்காலிசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் சேர்மம் எது?

A. சச்சினிக் அமிலம்
B. பைருவிக் அமிலம்
C. அசிட்டைல் CoA
D. சிட்ரிக் அமிலம்

2. கூற்று : ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் நடைபெறுகிறது.
 காரணம்:  சக்சினைல் CoA பாஸ்பரிகரணமடைந்து சக்சினிக் அமிலமாக தளப்போருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

A. கூற்று மற்றும் காரணம் சரி கூற்று காண சரியான விளக்கம் காரணம்
B. கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் அதற்கான சரியான விளக்கம் அல்ல காரணம்
C. கூற்று  சரி ஆனால் காரணம் தவறு
D. கூற்று மற்றும் காரணம் தவறு

3. ஆக்சாலிக் அமிலத்தின் சுவாச ஈவு மதிப்பு?

A. 4
B. 1.6
C. 0.36
D. 4.5

4. பல தாவர பகுதிகளில் சிவப்பு நிறம் இருக்க காரணம்?

A.  குயினோன்
B. சயனின்
C. ஆந்தோகுயினோன்
D. ஆந்தோசயனின்

5. காற்றில்லா நிலையில் குளுக்கோஸின் சுவாச ஈவு மதிப்பு?

A. ஒன்று
B. சுழி
C. முடிவிலி
D. இரண்டு

6.  வீரிய சுவாச பழங்களில் பொருந்தாதது எது?

A. பலா
B. ஆப்பிள்
C. வாழை
D. மா

7. ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் ஆக்சிஜனேற்றம் அடையும்போது எத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது?

A. 18
B. 6
C. 36
D. 48

8. எலக்ட்ரான்கள் ஏற்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. ஆக்ஸிஜனேற்றம்
B. ஒடுக்கம்
C. பதிலீட்டு வினை
D. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை

9.சைட்டோபிளாசத்தில் மட்டுமே இது நடைபெறுகிறது?

A.காற்று சுவாசம்
B.காற்றில்லா சுவாசம்
C. காற்று மற்றும் காற்றில்லா சுவாசம்
D.பெண்டாஸ் பாஸ்பேட்

10.EMP  வழித்தடம் என்றழைக்கப்படுவது?

A. கிளைக்காலிசிஸ்
B. கிரப்ஸ் சுழற்சி
C. TCA  சுழற்சி
D. பெண்டாஸ் பாஸ்பேட்

11. நேரடி ஆக்சிஜனேற்ற வழித்தடம் என்று அழைக்கப்படுவது?

A.EMP  வழித்தடம்
B.TCA  சுழற்சி
C. பெண்டோஸ் பாஸ்பேட்
D. கிளைக்காலிசிஸ்

12. அசையாத் தாடை என்று அழைக்கப்படும் நோய் எது?

A.புபோனிக் பிளேக்
B.ஷிஜெல்லாசிஸ்
C.டெட்டன்ஸ்
D.பொன்னுக்கு வீங்கி

13. பொருத்துக:
   (நோய்)              (நோய் உண்டாக்கும் பகுதி)

அ. பிளேக்                1.நிணநீர் முடிச்சுகள்
ஆ. டிப்தீரியா          2.  இழுப்பு
இ. டெட்டன்ஸ்         3. இனப்பெருக்க பாதை
ஈ.  டைபாய்டு.          4. குடல்

A.4321
B.1432
C.1324
D.1234

14. கருப்பு மரணம் என்று அழைக்கப்படும் நோய் எது?

A. பிளேக்
B. டிப்தீரியா (தொண்டை அடைப்பான்)
C. டெட்டன்ஸ்
D.  நிமோனியா

15. டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை எது?

 A.வைடால்
 B.பெஸ்டீஸ்
 C.வெஸ்டர்ன் பிளாட்
 D DPT

16. பொருந்தாதது எது?

A. டெங்கு                   -பிளேவி வைரஸ்
B. சிக்கன்குனியா   - டோகா வைரஸ்
C. தட்டம்மை             - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ்
D.பொன்னுக்கு வீங்கி- மம்ப்ஸ் வைரஸ்

17. RNA வைரஸ்களில் பொருந்தாதது எது?

A. சின்னம்மை
B. புட்டாலம்மை
C. தட்டம்மை
D. இளம்பிள்ளை வாதம்

18. பன்றி காய்ச்சல் நோய் ஏற்படும் தொற்று வைரஸ்?

A.A1H1
B.H1N1
C.H1A1
D.N1H1

19. மணல் பூச்சி என்ற நோய் கடத்திகள் மூலம் பரவும் நோய் எது

A. அமீபியாசிஸ்
B. காலா அசர்
C. ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
D. அஸ்காரிஸ்

20. க்ரூயிட்ஸ்ஃபெல்ட்-ஜேகப் நோய்  எவ்வாறு
அழைக்கப்படுகிறது?

A. லஸ்ஸா ஜுரம்
B. வெறிநாய்க்கடி நோய்
C. நாய்களுக்கு வரும் டிஸ்டம்பர் நோய்
D. மாடுகளில் வரும் மூளைக்கோளாறுநோய்

21. சரியான கூற்றை தேர்ந்தெடுக

A. வைரஸ்கள் ஓம்புயிரி செல்களுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் பெருக்கமடையக்கக் கூடியவை.
B. வைரஸ்கள் புரத உறையற்ற நியூக்ளிக் அமிலத்தை உள்ளடக்கியவை.
C. வைரஸின் நியூக்ளிக் அமிலம் RNA மற்றும் DNA வை  கொண்டிருக்கும்.
D. வைரஸின் தொற்று தன்மைக்கு நியூக்ளிக் அமிலம் காரணமாகிறது

22. சார்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிரமம் என்ன என்பதை தேர்ந்தெடு.

A.சார்ஸ் வைரஸ் தொடர்ந்து வடிவத்தை மாற்றிக் கொண்டிருக்கும்
B.இது ஓரிழை RNA  வை கொண்டது.
C.நியூக்ளியேகேப்சிட்  சுருள் வடிவம் உடையது
D.இது RNA மற்றும் DNA வைக் கொண்டது.

23. பொருத்துக

 (உயிர் எதிர்ப்பொருள்)      ( பயன்கள்)
அ. ஸ்ட்ரெப்டோமைசின்       1. கக்குவான் இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
ஆ.  ஆரியோமைசின்           2.மேக நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
இ. குளோரோமைசிட்டின்    3.சிலவகை பாக்டீரிய நோய்களை குணப்படுத்துகிறது.
ஈ. பேசிட்ராசின்                     4. சிறுநீரக குழாய் தொடர்பான நோய்கள்
உ. பாலிமிக்ஸின்                 5.  டைபாய்டு காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது

A.54123
B.51432
C.45312
D.41523

24. பின்வருவனவற்றுள் கால்நடைகளில் எலும்புருக்கி நோய்களை உண்டாக்கும் காரணி எது?

A. பேசில்லஸ் எம்பாஸிஸ்
B. புருசெல்லா அபோர்ட்ஸ்
C. மைக்கோபாக்டீரியம் போவைஸ்
D. கிளாஸ்ட்ரியம் சான்வி

25. பின்வருவனவற்றுள் எது பெண்களுக்கு மகப்பேறு வலியை தூண்டப் பயன்படுகிறது?

A. அலோவீரா
B. குளோரியோஸா சூப்பர்பா
C. கோல்சீக்கம் லூட்டியம்
D. ஸில்லா ஹையஸிந்தியானா

26."History of madras Army"-உடன் தொடர்புடையவர்?

A)j. பிளாக்கிஸ்டன்
B)w.j.வில்சன்
C)வில்லியம் பிளாக்பர்ன்
D)ஏதுமில்லை

27. " ராஜிவ்காந்தி ஆவாஸ் யோஜனா" திட்டத்தின் நோக்கம்??

A)  ஒவ்வொருவருக்கும் வீடு வழங்குதல்.
B) கிராமப்புறங்களில் பொதுகழிவறை அமைத்தல்
C) கிராம மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தல்.
D) தண்ணீர் வசதியுடைய கழிவறையை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்குதல்.

28. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

அ)காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கண்டறியப்பட்ட முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுகள் உள்ளாட்சி அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகின்றன்.
ஆ) ஒவ்வொரு ஊரிலும் சபை இருந்ததாகவும், அதில் ஊரில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் உறுப்பினராக இருந்ததை அறிய முடிகிறது.
இ) இச்சபைகள் "ஊர்" மற்றும் " மத்திய சபை" என்று இரண்டு விதமாக அழைக்கப்பட்டன.

A) (அ) மற்றும் (இ) சரி
B) (ஆ) மட்டும் சரி
C) (அ) மட்டும் சரி
D)  அனைத்தும் தவறு

29. ___________ சோழன் வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகாசபைக்கு நாட்டுக்கு துரோகமிழைத்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறிய முடிகிறது ?

A) இராஜராஜ சோழன்
B) இராஜேந்திர சோழன்
C) பரந்தாக சோழன்
D) விஜயாலயன்

30.1926ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த கிராம உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை??

A)  625
B) 1417
C)  141
D) 6250

31.  கீழ்கண்ட கூற்றுகளை அரைக்க.
அ) இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாக துறைகள் மத்திய அரசுக்கு
மாற்றியமைக்கப்பட்ட துறைகள் எனவும், மாகாண
அரசுகளுக்கு  ஒதுக்கப்பட்ட துறைகள்
எனவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
ஆ) ஒதுக்கப்பட்ட துறைகளான காவல் , சட்டம் ஒழுங்கு, போன்றவை ஆளுநர் வசம் இருக்கும்.
இ) கல்வி மற்றும் பிற துறைகள் மாற்றித் தரப்பட்ட துறைகள் ஆகும்.
ஈ) மாற்றித் தரப்பட்ட துறைகள் முதல்வர் வசம் இருக்கும்.

A) (அ)(ஆ)&(இ) தவறு.
B) (அ)&(ஆ) தவறு.
C) (அ) மட்டும் தவறு
D) (அ) மற்றும் (ஈ) தவறு

32. 1960ல் எத்தனை சதவீத இந்திய மக்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டனர் ??

A) 90 %
B) 80 %
C) 85 %
D) 75 %

33. சுதந்திர இந்தியாவிற்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான திட்ட வரைபடத்தை தயாரித்தவர்??

A) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
B) ஷர்மா நாராயணன்
C) மோகன் ஆச்சாரியா
D) ஸ்ரீமான் நாராயணன்

34. மக்கள்தொகை இருபது லட்சத்துக்கும்
மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்
பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும்
மாவட்டத்தைக் கொண்ட மூன்றடுக்கு
பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த
வேண்டும் எனக்கூறும் விதி??

A) 244
B) 243
C) 243(B)
D) 243(ZG)

35.2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை ?

A) 2,00,000
B) 2,50,000
C) 1,75,000
D) 2,75,000

36. பாளைய வாரியங்கள் சட்டம் ?

A) 1924
B) 1940
C) 1950
D) 1956

37."lex loci Act"-இயற்றப்பட்ட ஆண்டு?

A)1850
B)1852
C)1856
D)1800

38. நகராட்சியில் ஏற்படுத்தப்படும் நிலைக்குழுவின் பதவிக்காலம்??

A) ஐந்து ஆண்டுகள்
B) மூன்று ஆண்டுகள்
C) இரண்டு ஆண்டுகள்
D)  இவற்றில் எதுவுமில்லை

39. "கஜினி முகமதுவின் கொள்ளை 18முறையோடு நின்றுவிட, பிரிட்டிஷாரின் கொள்ளையோ  முடிவில்லாமல் தொடர்கிறது என்றவர் ?

A)R. C. தத்
B)அபே டுபாய்
C)தாதாபாய்  நவரோஜி
D)வில்லியம் பென்டிங்க் பிரபு

40. தென்னிந்திய கிளர்ச்சிக்கு பின் மலேயாவிற்கு நாடுகடத்தப்பட்ட கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கை?

A)73
B)75
C)72
D)80

41. கீழ்கண்ட கருத்துக்களை கொள்க.

1) மாநகராட்சி ஆணையரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும்.
2) இந்த கால அளவை மாநில அரசாங்கம் விரும்பினால் நீட்டிப்பு செய்யலாம்‌.
3) மாநகராட்சி சட்டத்தை  நடைமுறைப்படுத்துவதில்  அரசின் முழு அதிகாரம் பெற்றவர் மேயர் ஆவார்.

A) 1&2 தவறு
B) 1 மட்டும் தவறு
C) 1&3 தவறு
D) 2 மட்டும் தவறு

42.  மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக்காலத்தில் கடைசி பத்து ஆண்டுகளில் மொத்த வருவாயான 647 மில்லியன் பவுண்டுகளில் 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என யாருடைய மதிப்பீட்டின்படி தெரிய வருகிறது??

A)  தாதாபாய் நவரோஜி
B)  R.C  தத்
C. சார்லஸ் டிராவல்யன்
D. அபே டுபாய்

43. இந்தியாவில் இதுவரை எத்தனை மாநிலங்கள் தங்களது சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த இசைவு தந்துள்ளன ?

A) 18
B) 17
C) 22
D) 23

44. அரசமைப்பின் 74 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் 1922 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு?

A) ஆகஸ்ட் 1993
B) ஜுன் 1993
C) மார்ச்  1993
D) செப்டம்பர் 1993

45. பஞ்சாப் நகராட்சிகள் மசோதா கொண்டுவரப்பட்ட ஆண்டு?

A.1998
B.1999
C.1911
D.1992

46. 1992ஆம் ஆண்டு சட்டத்தின்படி மாவட்ட திட்ட குழுவில் மொத்த உறுப்பினர்களின் எவ்வளவு பங்கு குறையாமல் இருத்தல் வேண்டும்?

A.2/3
B.4/5
C.2/5
D.3/4

47. மாநகராட்சி நிலைக்குழுவின் தலைவர்?

A. மாநகராட்சி ஆணையர்
B. மேயர்
C. துணை மேயர்
D. தலைமை நிர்வாகி

48.  அசோக் மேத்தா குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்த ஆண்டு?

A.1977
B.1978
C.1978
D.1980

49. தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடைபெற்ற ஆண்டுகளில் பொருந்தாதது எது?

A.1881
B.1996
C.2001
D.2011

50. ஜவகர் ரோஜ்கர் யோஜனா?

A. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தல்
B. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுதல்
C. வீடு கட்டுதல்
D.வெளிநாட்டில் வேலை பெறுதல்

51. எப்போது சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது?

A.1870
B.1882
C.1687
D.1992

52. நகர்பாலிகா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

A.1989
B.1990
C.1991
D.1992

53. மாவட்ட திட்டக்குழு கீழ்வருவனவற்றால் உருவாக்கப்பட்டது?

A. 73-வது  அரசமைப்பு சட்டத் திருத்தம்
B. 74 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம்
C. 89 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம்
D. 94 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம்

54. புதிய தொழிற்சாலைகள் அமைகின்ற இடங்களில் ஏற்படுத்தப்பட்டது?

A. பாளைய வாரியங்கள
B. மாநகராட்சி
C. நகராட்சி
D. நகரியங்கள்

55. ஒரு கிராமப் பஞ்சாயத்தில் வாக்காளர்களை கொண்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. கிராம பஞ்சாயத்து
B. கிராமசபை
C. இடைநிலை பஞ்சாயத்து
D. ஊராட்சி ஒன்றியக் குழு

56. பேரூராட்சி கூட்டத்தை கூட்டுபவர் யார்?

A. ஆணையர்
B. மேயர்
C. துணை ஆணையர்
D. துணை மேயர்

57. கீழ்கண்ட எந்த மாநிலத்தில் உள்ள காடுகளின் ஒரு பகுதி பைரோடெவ் டாகவ் சொன்சூரி என்று அழைக்கப்படுகிறது?

A. அசாம்
B. மேகாலயா
C. ராஜஸ்தான்
D. மத்திய பிரதேசம்

58. இந்தியாவில் உள்ள தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை?

A.102
B.103
C.104
D.131

59. கீழ்க்கண்டவற்றில் எது நீலகிரி உயிர்க்கோளத்திற்குள் வராதது?

A. பந்திப்பூர் தேசிய பூங்கா
B. முதுமலை புலிகள் காப்பகம்
C. அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
D.  சரிஸ்கா புலிகள் காப்பகம்

60. யானைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?

A.1988
B.1987
C.1999
D.1975

61. உலக அளவில் உயிர்பன்மையின் பங்களிப்பு எத்தனை சதவீதம்?

A. 8
B. 14
C. 19
D. 22

62. தேசிய வனவிலங்கு செயல்திட்டம் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

A. 2002
B. 2006
C. 2014
D. 1992

63. 1960 இல் இருந்து இதுவரை எத்தனை உயிரின பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?

A.50,000
B.1,00000
C.1,50,000
D.2,00000

64. குள்ள காட்டுப்பன்றி பாதுகாப்பு அமைப்பு கௌதம் நாராயணன் என்பவரால் எந்த அரசின் உதவியோடு தோற்றுவிக்கப்பட்டது?

A. அசாம்
B. ராஜஸ்தான்
C. மேற்கு வங்காளம்
D. பீகார்

65. கீழ்கண்ட எந்த தீவு மக்கள் அலுவா என அழைக்கப்படும் ஒரு தாவர இனத்தை "கம்புமுட்டைகோஸ்" என்று அழைப்பர்?

A. பிலிப்பைன்ஸ்
B. மடகாஸ்கர்
C. உகாண்டா
D. ஹவாய்

66. இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச சங்கம்(IUCN)  நிறுவப்பட்ட ஆண்டு?

A.1932
B.1944
C.1964
D.1974

67. சர்வதேச உயிர் பாதுகாப்பு மையம் பற்றிய தவறான கூற்றை கண்டறிக?

a. இது ஒரு நிதிசார் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகும்.
b.இது 1987 ஆம் ஆண்டு வெர்ஜினாவில் ஆரம்பிக்கப்பட்டது.
c. இதனுடைய நோக்கம் நமக்கு நிதி உதவி மற்றும் ஒரு நிலையான காலநிலையை பாதுகாப்பதாகும்.

A. a மற்றும் b
B. a மற்றும் c
C. b மட்டும்
D. a ,b மற்றும் c

68. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பா பள்ளத்தாக்குகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்கு எது?

A. ஆசிய சிங்கம்
B. காஷ்மீர் கலைமான்
C. சிங்கவால் குரங்கு
D. கேப்பு முயல்

69. உயிரினப்பன்மை எனும் சொல்லை உபயோகப்படுத்தியவர்?

A. இ.ஒ. வில்சன்
B. ரேய்மண்ட் எப் டாஸ்மன்
C. நார்மன் மைர்ஸ்
D. ஐ.ஜி.சிமோன்ஸ்

70. அரேபிய பாலைவன பகுதியில் உள்ள நாடோடி மக்களை கீழ்கண்ட எவ்வாறு அழைப்பர்?

A.பெடோய்ன்ஸ்
B.பெர்பெர்ஸ்
C.டமாரா
D. புஸ்மென்

71. மிக கடினமான நடைப் பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதத்தில் எந்த பாலைவனத்தில் நடைபெறுகிறது?

A.   ஜூன், கோபி பாலைவனம்
B.   ஏப்ரல், சகாரா பாலைவனம்
C.  செப்டம்பர், தார் பாலைவனம்
D.  மார்ச், கலகாரி பாலைவனம்

72. பாலைவன சோலைப் பகுதியில் அதிகமாக வளரும் மரம் எது?

A. கருவேலமரம்
B. பாபுல்
C. பேரிச்சை
D. கிக்கார்

73. தென் அமெரிக்காவில் ஸ்டெப்பி புல்வெளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A.பிரெய்ரி
B.வெல்ட்ஸ்
C.புஸ்டா
D.பாம்பாஸ்

74. பிரேசிலில் சவானா புல்வெளிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A.காம்போஸ்
B.லானோஸ்
C.கொலம்பியா
D.டௌன்ஸ்

75.  கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

I. சதுப்பு நில காடுகள் அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன
II. இவை வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் காணப்படுகின்றன.
III. அலையாத்தி காடுகள் நன்னீரிலும் உவர் நீரிலும் அதிக அளவில் காணப்படுகின்றன
IV. சுந்தரவனக்காடுகள் உலகின் மிகப் பெரிய சதுப்பு நிலப்பகுதி ஆகும்.

A. I மற்றும் III தவறு
B. III மட்டும் தவறு
C.I, II மற்றும்  IV சரி
D.அனைத்தும் சரி

76. பிற சார்பு உயிரிகள் அழைக்கப்படுவது எது?

A. சிதைப்போர்கள்
B. அனைத்துண்ணிகள்
C. மட்குண்ணிகள்
D. மூன்றாம் நிலை நுகர்வோர்

77.  1793 இல் சாசுவதம் என்று நிலத்தின் அடிப்படையில் நிர்ணயம் நிரந்தரமாக்கப்பட்ட  பகுதிகளில் பொருந்தாதது எது?

A. வங்காளம்
B. அசாம்
C. பீகார்
D. ஒரிசா

78. வாரணாசியில் காரன்வாலிஸ் ஒரு சமஸ்கிருத கல்லூரி நிறுவிய ஆண்டு?

A. 1791
B. 1792
C. 1799
D. 1818

79. எனக்கு அரபு மொழியும் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் அரபு சமஸ்கிருத மொழிகளில் சிறப்பானதாக கருதப்படும் நூல்களை படித்திருக்கிறேன் என்று கூறியவர்?

A. சார்லஸ் ட்ராவல்யன்
B. மெக்காலே
C. வில்லியம் பெண்டிங்
D. மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்

80. பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக 1830 ல் வட இந்தியாவில் கீழ்கண்ட எந்த கால்வாய் வெட்டப்பட்டது?

A. கங்கை
B. காவிரி
C. யமுனா
D. பிரம்மபுத்ரா

81. "கவலையும் இறப்பும் எங்கெங்கும் நிறைந்து சென்னை மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்" இது யாருடைய கூற்று?

A. சார்லஸ் ட்ராவல் என்
B. வில்லியம் பெண்டிங்
C. அபே டுபாய்
D. மெக்காலே

82. இங்கிலாந்து மக்களவை தேர்வு குழுவில் சார்லஸ் ட்ராவல்யன்  அங்கம் வகித்த ஆண்டு?

A.1823
B.1799
C.1844
D.1840

83.  கீழ்க்கண்ட எந்த ஆங்கிலேய கவர்னர் நானாசாகிப்பிற்கு ஓய்வூதீயம் கொடுக்க மறுத்தார்?

A. வெல்லெஸ்லி பிரபு
B. வில்லியம் பெண்டிங் பிரபு
C. ஹேஸ்டிங்ஸ் பிரபு
D. டல்ஹவுசி பிரபு

84. கீழ்க்கண்ட எந்த கவர்னர் 1813 ஆம் ஆண்டு( மொய்ரா )முகலாய முத்திரையை பரிவர்த்தனைகளில் தவிர்த்தார்?

A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. ராபர்ட் கிளைவ்
C. காரன்வாலிஸ்
D. மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்

85. வட கிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநரான ஜேம்ஸ் தாமஸினால் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வி முறைக்கு ஆதரவு கொடுத்தவர்?

 A. மெக்காலே
 B. வெல்லெஸ்லி
 C. வில்லியம் பெண்டிங்
 D. டல்ஹௌசி

86. குற்றப் பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

A.1871
B.1875
C.1865
D.1884

87. சரியான கூற்றை தேர்ந்தெடு

I.மைசூர் பாமினி பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது.
II. ராஜா உடையார் 1578ல் அரியணை ஏறினார்.
III. 1610 இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மாற்றப்பட்டது.
IV. அப்போதிலிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி 1760 வரை தொடர்ந்தது.

A. II, IV சரி
B.I, II மற்றும் IV சரி
C.II,III,மற்றும் IV சரி
D.I II III சரி

88. ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களை தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை சுற்று வேலி கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தவர்?

A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. வெல்லெஸ்லி பிரபு
C. வில்லியம் பெண்டிங் பிரபு
D. டல்ஹௌசி பிரபு

89. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின்படி தவறானது?

I. திப்பு அவருடைய ஆட்சி பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்கு கொடுக்கவேண்டும்.
II. போர் இழப்பீடாக இரண்டு கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
III. அவருடைய மகன்களில் மூவரை பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்கவேண்டும்.
IV. திப்புவிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளும் இழப்பீட்டுத் தொகையும் ஆங்கிலேயருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டன.

A.I மற்றும் III
B.II மற்றும் IV
C.I, II மற்றும் IV
D.II, III மற்றும் IV

90. பிர்சா முண்டா எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?

A.அலிப்பூர்
B.அமராவதி
C.ராஞ்சி
D.வேலூர்

91. கிளர்ச்சியாளர்கள் இலட்சுமிபாய் மிகச்சிறந்த தைரியமிக்க தலைவரான லட்சுமியை பற்றி குறிப்பிட்டுள்ளனர்?

A. ஹக் ரோஸ்
B. ஹென்றி ஹேவ்லக்
C. நீல்
D. பிர்ஜிஸ் கத்ரா

92.1799 ஜூன் 1 ல் கட்டபொம்மன், மருதுபாண்டியரிடம்  ஆலோசனை நடத்திய இடம் ?

A) சொக்கம்பட்டி
B) சிவகிரி
C) பழையனாறு
D) செந்நல்குடி

93. பிரெஞ்சுக்காரர்களாலும் திப்புவாலும் பயிற்சியளிக்கப்பட்ட பாளையக்காரர்  யார்?

A) தீரன் சின்னமலை
B) செவத்தையா
C) வீரபாண்டிய கட்டபொம்மன்
D) கோபால் நாயக்கர்

94. சரியானதை தேர்ந்தெடு.

1) 1802-காவிரிக்கரைபோர்.
2) 1801 - ஆண்டு
ஓடநிலையில் நடந்த போர்
3)1804 - நடந்த
அரச்சலூர் போர்

A) 1&2 சரி
B) 1&3 சரி
C) 1 மட்டும் சரி
D) 3 மட்டும் சரி

95. கோல் பழங்குடியினரின் கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் ??

A) பாஜ் பகதூர்
B) புத்த பகத்
C) பிந்த்ராய் மன்கி
D)  போஸ் பகத்

96. டாமின் - இ -கோ என்பது எப்பழங்குடியினரின் நிலம் ஆகும் ??

A) கோண்டுகல்
B) கோல்
C) முண்டா
D)சந்தால்

97. “பெருமளவில் உண்மையான விடுதலைப்
போராட்டம்” என 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ புரட்சியை குறிப்பிட்டவர் ??

A) கர்னல் மல்லீசன்
B) ஜான் தாம்சன்
C) சாவர்க்கர்
D) கீன்

98. சரியானதை தேர்ந்தெடு.

1) இப்பெருங் கிளர்ச்சி மீரட்டுக்கு அருகேயுள்ள
பரக்பூரில் இராணுவக் கலகமாகவே
தொடங்கியது.
2) மங்கள் பாண்டே தனது
இராணுவ கீழ் அதிகாரியை சுட்டுக் கொன்றதை
தொடர்ந்து அங்கு இராணுவக் கலகம் வெடித்தது.
3) மே மாதம் 10
ஆம் நாளில் இரண்டு ரெஜிமெண்டுகளைச்
சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள்
உயர் அதிகாரிகளைக் கொன்று,சிறை கைதிகளை விடுதலை செய்தனர்.
4) கான்பூரை அடைந்த அவர்கள் இரண்டாம்
பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம்.

A) 1,2&3 சரி
B) 1&2 சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு

99. சந்தால்கள் கிளர்ச்சியின்
முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு
_____ என்னும் கிராமத்தைத் தாக்கித்
தீக்கிரையாக்கியது ?.

A) மோங்கபர்ரா
B) மகேஷ்பூர்
C) மஞ்சி
D) மசேக் அவுரி

100.பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தவர்??

A)  ஜான்சி ராணி லட்சுமி பாய்
B)  ஹஸ்ரத்  மஹால்
C)  கான்சாகிப்
D)  இரண்டாம் பகதூர் ஷா

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
Whatsapp ல் இணைந்திட
tnkural.com tnpsc 19
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY