Ads Right Header

Group 2 -முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் !


இந்திய அரசியலமைப்புக்கிணங்க , மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர்.

பாராளுமன்ற அரசாங்க முறை நிலவுவதால் , இரண்டு வகையான தலைவர்களை நாம் காண்கின்றோம்.

இவ்வாறு மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது .

விதி 163 ன் படி , 2 தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர , மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு , முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்க வேண்டும் . முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் .

முதலமைச்சரின் அதிகாரங்கள்

முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார் . அவர் அதிகமான பணிகளையும் , அதிகாரங்களையும் பெற்றுள்ளார் .

அமைச்சரவை தொடர்பானவை.
ஆளுநர் தொடர்பானவை.
மாநில சட்டத்துறை தொடர்பானவை.

 மற்ற பணிகளும் அதிகாரங்களும்

முதலமைச்சரவையின் அமைச்சரவை தொடர்பான அதிகாரங்கள்

ஆளுநரால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் நபர்களை முதலமைச்சர் பர்ந்துரைக்கிறார் .

அவர் அமைச்சர்களிடையே இலாக்காக்களைப் பகிர்ந்தளிக்கிறார் .

அவர் அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் மற்றும் மறுமாற்றமும் செய்கிறார் .

அவர் அமைச்சரவை கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறார் மற்றும் அதன் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துகிறார் .

முதலமைச்சர் ஆளுநர்
தொடர்பான அதிகாரங்கள்

விதி 167 - ன் படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார்.

மாநில தலைமை வழக்கறிஞர் .
மாநில தேர்தல் ஆணையர் .
மாநில பொதுப்பணி ஆணையத்தரின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் .
மாநில திட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் .
மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

முதலமைச்சரின் மாநில சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்

மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மற்றும் தள்ளிப்போடுவது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை கூறுகிறார் ,

சபையில் அரசாங்கக் கொள்கைகளை அவர் அறிவிக்கிறார் .

 சட்ட சபையில் அவர் மசோதாக்களை அறிமுகம் செய்யலாம் .

எந்த நேரத்திலும் சட்ட சபயைக் கலைப்பதற்காக ஆளுநரிரடம் அவர் பரிந்துரை செய்யலாம் .

முதலமைச்சரின் கடமைகள்

 அமைச்சரவை முடிவுகளை முதலமைச்சர் ஆளுநரை சந்தித்துத் தெரிவிக்க வேண்டும் .

ஆளுநர் மாநில நிர்வாகம் , சட்ட வரைவுகள் பற்றி தகவல்களைக் கேட்டும் போது தர வேண்டும் ,

அமைச்சர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளை அமைச்சரவையில் அறிவிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினால் அதை முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY