Ads Right Header

10th History full Test!


பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட பாளையக்காரர்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திய போது அந்தக் கூட்டமைப்பில் இணையாத பாளையக்கார அமைப்பு எது ?

A ) எட்டையபுரம் , சாத்தூர்
B ) எட்டையபுரம் , நாகலாபுரம்
C ) பாஞ்சாலங்குறிச்சி , எட்டையபுரம்
D ) பாஞ்சாலங்குறிச்சி , நடுவக் குறிச்சி

நெற்கட்டும் சேவல் , வாசுதேவநல்லூர் , பனையூர் ஆகிய பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யூசுப்கானின்
( கான்சாகிப் என்றும் தமது மத மாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர் ) கட்டுப்பாட்டுக்குள் வந்தநாள் ?

A ) 16.05.1767   B ) 16.05.1761
C ) 16.07.1761   D ) 14.05.1761.

கம்பெனி நிர்வாகத்திற்கு முறையான தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு ?

A ) 1767 B ) 1764 C ) 1763 D ) 1761

வேலுநாச்சியாரின் ஆட்சியில் உளவு கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்தவரின் பெயர்?

A ) உடையாள்
B ) குயிலி
C ) கோபால நாயக்கர்
D ) சிவசுப்ரமணி

சிவகங்கையின் மருதுபாண்டியர் , திண்டுக்கலின் கோபால நாயக்கர் , மலபாரின் கேரளவர்மா , மைசூரின் கிருஷ்ணப்பா ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் நடத்தப்பட்ட , பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிடப்படும் போர் நடைபெற்ற ஆண்டு

A ) 1800 B ) 1806 C ) 1799 D ) 1798

ஒண்டிவீரன் யாருடைய படை பிரிவுகளில் ஒன்றிற்கு தலைமையேற்று போரிட்டார் ?

A ) மருதுபாண்டியர்
B ) வேலு நாச்சியார்
C ) வீரபாண்டிய கட்டபொம்மன்
D ) பூலித்தேவர்

வேலு நாச்சியாரின் மன உறுதியைப் பார்த்து வியந்த ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டையில் படைத்தலைவராக இருந்த யாரிடம் வேலுநாச்சியாருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார் ?

A ) தாண்டவராயனார்
B ) யூசுப்கான்
C ) சையது
D ) கான்சாகிப்

திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல மே 1799 இல் உத்தரவிட்ட ஆளுநர் யார் ?

A ) வில்லியம் பெண்டிங்
B ) வெல்லெஸ்லி
C ) ஜார்ஜ் பார்லோ
D ) வாரன்ஹேஸ்டிங்

செப்டம்பர் 13 , 1799 அன்று கட்டபொம்மனின் அமைச்சரான சிவசுப்பிரமணியன் தூக்கிலிடப்பட்ட இடம் ?

A ) நாகலாபுரம்   B ) புதுக்கோட்டை
C ) கள்ளர்பட்டி     D ) பாஞ்சாலங்குறிச்சி

இராமநாதபுரத்தின் அருகே அமைந்த திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட ஆண்டு ? இதேபோல் ஊமைத்துரையும் சிறைபிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்ட ஆண்டு

A ) அக்டோபர் 22 , 1801 / நவம்பர் 16 , 1801 B ) அக்டோபர் 24 , 1801 / நவம்பர் 14 , 1801 C ) அக்டோபர் 22 , 1801 / நவம்பர் 14 , 1801 D ) அக்டோபர் 24 , 1801 / நவம்பர் 16 , 1801

முழுமையாகக் காண
Click here to view pdf

🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️
🏂Whatsapp
Click here to join tnkural.com

⛷️Telegram
Click here to join tnkural.com
🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️🥦🧚🏼‍♂️
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY