Ads Right Header

Box Questions - எட்டாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்!8 ஆம் வகுப்பு - முதல் பருவம்

7 . தாவர உலகம்

1 . இந்தியாவில் மிகப் பெரிய உலர்தாவரத் தொகுப்பு கொல்கத்தாவில் உள்ளது . இங்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான உலர்தாவரத் மாதிரிகள் உள்ளன .

2 . இரு சொற்பெயரிடுமுறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் ICBN ( அகில உலக தாவரவியல் பெயர்ச்சூட்டும் சட்டம் ) ல் உள்ளது , தற்போது இது ICN ( அகில உலக பெயர்ச்சூட்டும் சட்டம் ) என அழைக்கப்படுகிறது .

3 . உலகத்திலேயே மிகப்பெரிய உலர் தாவரத் தொகுப்பு பாரிசில் உள்ள தேசிய டி ஹிஸ்டாரிக் நேச்சுரல்லே என்னும் ஃபிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் தான் உலகத்திலேயே மிகப்பெரிய உலர் தாவரத் தொகுப்பு அருங்காட்சியகம் .

4 . RH விக்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் மூன்றாவது உலகமாக இடம்பெற்றுள்ளன . ஏனெனில் இவற்றில் பச்சையம் மற்றும் தரசம் இல்லை .

5 . கிளாவிசெப்ஸ் பாபூரியா என்ற பூஞ்சையானது இளந்தலை முறையினரை அதிக அளவு பாதிப்படையச் செய்கிறது . இது இளைஞர்களிடத்தில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது . இவ்வுலகில் ஒரு வித்தியாசமான மனநிலையை ஏற்படுத்தி அவர்கள் கனவுலகில் மிதப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்தும் .

6 . அஸ்பர்ஜில்லஸ் என்ற பூஞ்சையானது குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது . ஆனால் கிளாடோஸ்போரியம் என்ற பூஞ்சையானது ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது .

7 . மருந்துகளின் அரசி என்று கூறப்படுவது பெனிசிலின் ஆகும் . இதைக் கண்டுபிடித்தவர் சர் அலெக்ஸாண்டர் பிளெம்மிங் ஆவார்
( 1928 ) .

8 . ஸ்பாக்னம் மாஸ் , குழந்தைக்கு ஒரு முறை பயன்படுத்தும் அரைக் கச்சயிைல் பயன்படுத்தப்பட்டு வந்தது . ஏனெனில் இது நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும்

9 . லைக்கோபோடியம் , கிளப் பாசி என அழைக்கப்படுகிறது , ஈக்விசிட்டம் , குதிரை வால் என அழைக்கப்படுகிறது.

🌴🌱🌳🌲🌿🌱🌴🌳🌲🌱🌴🌳🌲🌿🌴🍃

8 ஆம் வகுப்பு முதல் பருவம்

8 . உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

1 . மூலச்செல் என்பது ஒரு அடிப்படைசெல் ஆகும் . இச்செல் தோல் , செல் , தசைச் செல் அல்லது நரம்பு செல் போன்ற எந்த வகை செல்லாகவும் மாறுபாடடையும் தன்மைக் கொண்டது . இவை மிக நுண்ணிய செல்கள் ஆகும் .

2 . மூலச் செல்கள் உடலில் பாதிப்படைந்த திசுக்களை குணப்படுத்த அல்லது மாற்றி அமைக்க உதவுகின்றன

3 . மனித உடலின் உள்ளேயே அமைந்த சரிசெய்யும் அமைப்பாக மூலச் செல்கள் கருதப்படுகின்றன . ஒரு மனிதனின் வாழ்நாள் இறுதிவரை இவை புதிய செல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன .

4 . நமது உடலானது கருமுட்டை
( சைகோட் ) என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது . கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு , வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது .

5 . கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும் , பணியிலும் மாற்றங்களை அடைகின்றன . இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடுடைதல் என்று பெயர் .

6 . ஓய்வு நிலையில் உள்ள ஒரு வளர்ந்த மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 15 - 18 முறை மூச்சை உள்ளிழுத்து வெளி விடுகின்றான் . கடும் உடற்பயிற்சியின் போது இச்சுவாச வீதம் நிமிடத்திற்கு 25 முறைகளுக்கும் மேலாக இருக்கும் .

7 . புகைபிடித்தல் நுரையீரல்களை சேதப்படுத்துகிறது . புகைப்பிடித்தல் புற்று நோய்க்கு காரணமாவதால் அதை தவிர்த்தல் நலம் .

8 . உங்களுக்கு தும்மல் ஏற்படும் போது நீங்கள் நாசித் துவாரங்களை மூடிக் கொள்ள வேண்டும் . இதன்மூலம் நோயுண்டாக்கும் அயல் பொருள்கள் அருகில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் .

9 . பரவல் முறையின் மூலம் உணவுப்பொள்ருகள் செரிமான நொதியுடன் கலத்தல் .

10 . சுவாச வாயுக்களான ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்கள் பரவுதல் செல்களினுள்ளும் , வெளியேயும் பரவுதல் .

11 . ஒரே அளவு குளுக்கோஸிலிருந்து காற்றுள்ள சுவாசம் காற்றில்லா சுவாசத்தினை விட 19 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது .

12 . காற்றுள்ள சுவாசத்தின் போது ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறும் 36 ATP மூலக்கூறுகளை உருவாக்கும் .

13 . ரொட்டி தயாரிக்கும் போது கோதுமை மாவில் ஈஸ்ட் சேர்க்கப்படுவதால் CO , வெளியிடப்படுகிறது . இதனால் ரொட்டி மிருதுவாகவும் , உப்பியும் காணப்படுகிறது .

14 . ஒருவர் பூரண ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அவருக்கு ஒரு குறைந்த அளவிலான ஆற்றல் தேவைப்படும் . அந்த ஆற்றலை அளப்பது அடிப்படை வளர்சிதை மாற்றம் எனப்படும் .

🌴🌱🌳🌲🌿🌱🌴🌳🌲🌱🌴🌳🌲🌿🌴🍃
Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY