Ads Right Header

சங்ககாலப் பொருளாதாரம்!



சங்க காலத்தில்
வேளாண்மை முக்கியத் தொழில் ஆகும்.  நெல் முக்கியப் பயிர். கேழ்வரகு , கரும்பு பருத்தி , மிளகு , இஞ்சி , மஞ்சள் , இலவங்கம் , பல்வேறு பழவகைகள் போன்றவையும் பயிரிடப்பட்டன .

பலா , மிளகு இரண்டுக்கும் சேர நாடு புகழ் பெற்றதாகும் . சோழ நாட்டிலும் , பாண்டிய நாட்டிலும் நெல் முக்கிய பயிராகும் . சங்க காலத்தில் கைத்தொழில்கள் ஏற்றம் பெற்றிருந்தன.

நெசவு , உலோகத் தொழில் , தச்சுவேலை , கப்பல் கட்டுதல்,மணிகள் , விலையுயர்ந்த கற்கள் , தந்தம் ஆகியவற்றை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்தல் போன்றவை ஒருசில கைத்தொழில்களாகும் .

இத்தகைய பொருட்களுக்கு நல்ல தேவைகள் இருந்தன . ஏனென்றால் சங்ககாலத்தில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது . பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன . நீராவியைவிடவும் , பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன .

உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்தகம் சங்க காலத்தில் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது . சங்க இலக்கியங்கள் , கிரேக்க - ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும் , வணிகர்கள் பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்தனர் . உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையின் அடிப்படையிலேயே நடைபெற்றது.

தென்னிந்தியாவிற்கும் , கிரேக்க அரசுகளுக்கும் இடையே அயல்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது . ரோமானியப் பேரரசு தோன்றிய பிறகு ரோமாபுரியுடனான வாணிபம் சிறப்படைந்தது . துறைமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்தகமையமாகத் திகழ்ந்தது . விலை மதிப்பு மிக்க பொருட்களை ஏற்றிவந்த பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வந்து சென்றன.

தொண்டி , முசிறி , கொற்கை , அரிக்கமேடு , மரக்காணம் போன்றவை பிற சுறுசுறுப்பான துறைமுகங்களாகும் . அயல்நாட்டு வாணிபம் குறித்து ' பெரிப்புளூஸ் ' நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார் .

அகஸ்டஸ் , டைபீரியஸ் , நீரோ போன்ற ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட தங்கம் மற்றும் வெள்ளியாலான நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன .

சங்க காலத்தில் நடைபெற்ற வாணிகத்தின் அளவு மற்றும் தமிழ்நாட்டில் ரோமானிய வணிகர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை இவை வெளிப்படுத்துவதாக உள்ளன .

பருத்தியாடைகள் , மிளகு , இஞ்சி , ஏலக்காய் , இலவங்கம் , மஞ்சள் போன்ற நறுமணப் பொருட்கள் , தந்தவேலைப்பாடு நிறைந்த பொருட்கள் முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் போன்றவை சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களாகும் . தங்கம் . குதிரைகள் , இனிப்பான மதுவகைகள் ஆகியன முக்கிய இறக்குமதிகளாகும் .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY