Ads Right Header

செல்கள் பற்றிய சில தகவல்கள்!


செல்கள் பற்றிய சில தகவல்கள் :-

♨ செல் கண்டறிந்தவர் - ராபர்ட் ஹூக் (1665)
♨ செல்லின் உட்கரு கண்டறிந்தவர் - ராபர்ட் ப்ரௌன்
♨ உயிரினங்களின் மிக சிறிய செயல்படும் அலகு - செல்கள்
♨ ஒரு செல் உயிரினக் கூட்டங்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றன - புரோகேரியோட்டுகள்
♨ புரோகேரியோட்டா என்ற கிரேக்க சொல்லின் பொருள் - ஆரம்ப நிலை உட்கரு
♨ புரோகேரியோட்டுகளுக்கு எடுத்துகாட்டு - பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி
♨ பல மில்லியன் ஆண்டுகள் முன்பு புரோகேரியோட்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தன
♨ புரோகேரியோட்டுகள் செல்கள் தற்போது பல சிக்கலான பல அமைப்புடைய யூகேரியோட்டிக் செல்களாக பரிணமித்துள்ளன.
♨ யூகேரியோட்டிக் செல்கள் நன்கு வளர்ச்சி அடைந்த உட்கரு கொண்டுள்ளது.
♨ செல்லின் நுண்ணுறுப்பு என்று அழைக்கப்படும் மரபுபொருள் (அல்லது) குரோமோசோம் காணப்படும்
♨ யூகேரியோட்டிக் செல் அமைப்பு கொண்டவை - புரோட்டோசோவா, ஒரு செல் பாசிகள், பூஞ்சைகள், தாவரங்கள், விலங்குகள்

♨தாவர செல் விலங்கு செல் வேறுபாடுகள்:

🌱 தாவர செல்லின் செல்லுலோஸ் என்ற செல்சுவர் காணப்படும்.

🐰 விலங்கு செல்லில் காணப்படுவது இல்லை

🌱 விலங்கு செல்லைவிட பெரியது.

🐰 தாவர செல்லை விட சிறியது.

🌱 தாவர செல்லில் பெரிய வாக்கியோல்கள் கொண்டுள்ளது.

🐰 விலங்கு செல்லில் மிகசிறிய வாக்கியோல்கள் காணப்படும்

🌱 சில மேம்பாடு அடைந்த தாவர செல்லில் மட்டுமே சென்ட்ரோசோம் காணப்படும்.

🐰 அனைத்து விலங்கு செல்களும் சென்ட்ரோசோம் காணப்படும்

🌱 யூகேரியோட்டிக் தாவர செல்களின் மட்டுமே லைசோசோம் காணப்படும்

🐰 அனைத்து விலங்கு செல்களிலும் லைசோசோம் காணப்படும்

🌱 தாவர செல்லில் கணிகங்கள் காணப்படும்

🐰 விலங்கு செல்லில் காணப்படுவது இல்லை

🌱 சேமிப்பு பொருள் ஸ்டார்ச்
🐰 சேமிப்பு பொருள் கிளைக்கோஜன்

செல்லின் ஒரு பகுதியின் புரோட்டோ பிளாசம் பற்றிய சில தகவல்கள்:-

💢 செல்லில் உள்ள உயிர்பொருள் - புரோட்டோபிளாசம்
💢 புரோட்டோபிளாசம் பொதுவாக "உயிரின் இயற்பியல் தளம்" என்று அழைக்கப்படுகிறது.
💢 ஒரு செல், செல்சுவரையும், புரோட்டோபிளாஸ்ட்டையும். புரோட்டோபிளாஸ்ட் என்பது செல்லில் உள்ள மொத்த புரோட்டோபிளாசத்தை குறிக்கிறது.
1. பிளாஸ்மா (செல்சவ்வு):
💢 செல்லின் உள்ள அனைத்து பொருட்களையும் சூழ்ந்து காணப்படுகின்ற மெல்லிய நுண்ணிய உயிருள்ள சவ்வு - செல் சவ்வு
💢 செல் சவ்வு செல்லுக்கு ஒரு எல்லையாக உள்ளது.
💢 செல்சவ்வு மீள் தன்மை கொண்டது
💢 தொடர்ச்சியான இரட்டை அடுக்கு கொழுப்பு மூலக்கூறுகள் & புரத மூலக்கூறுகள் செல்சவ்வின் இரு புறங்களிலும் காணப்படுகிறது.

❤பணிகள்:

💢 பிளாஸ்மா சவ்வு குறிப்பிட்டசில பொருட்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செல்லுக்கு உள்ளேயோ (அ) செல்லுக்கு வெளியேவோ நுழைவதை (அ) வெளியேறுவதை முறைப்படுத்துகின்றன.
💢 இதையே தேர்வு கடத்து சவ்வு (அ) அரை கடத்து சவ்வு என்று அழைக்கப்படும்
💢 காயங்களிலிருந்து செல்லை பாதுகாக்கிறது.
💢 ஒரே செல்லின் பல நுண்ணுறுப்புகளுக்கும் இடையேயும், அருகாமையில் உள்ள செல்களுக்கு இடையேயும் பொருட்கள் (ம) செய்திகள் கடத்தப்படுவதை அனுமதிக்கிறது
💢 அருகமைந்த செல்களுக்கு இடையேயான சில கரிய இணைப்புகளை அளிக்கிறது.

செல்சுவர் மற்றும் சைட்டோபிளாசம் பற்றிய சில தகவல்களை:-
செல்சுவர்:
💢 செல்சுவர் தாவரசெல்லில் மட்டுமே காணப்படும்
💢 பிளாஸ்மா சவ்விற்கு வெளியே உள்ள உறுதியான பாதுகாப்பு அடுக்கு ஆகும்.
💢 பெரும்பாலான தாவர செல்சுவர்கள் செல்லுலோஸால் ஆனது.
⭕ செல்சுவர் அடுக்குகள் மூன்று
1. இடைத்தட்டு
2. முதன்மைச் சுவர்
3. இரண்டாம் நிலை சுவர்
⭕செல்சுவர் பணிகள்
💢 செல்லுக்கு குறிப்பிட்ட வடிவத்தை கொடுக்கிறது
💢 செல்லுக்கு உறுதியை கொடுக்கிறது
💢செல்லுக்கு உள்ளே உள்ள புரோட்டோ பிளாசத்தை காயங்களிலிருந்து பாதுகாக்கிறது
💢 செல்லுக்கு விறைக்கும் தண்மையை தருகிறது.

சைட்டோபிளாசம்:
💢 செல்லில் முழுவதும் நிரம்புயுள்ள கூழ்மம் போன்ற ஒளி கசியக்கூடிய ஒத்த தன்மை கொண்ட பொருள்
💢 அதிகமான நீரையும் சிறிதளவு கரைந்துள்ள அயனிகளையும் கொண்டது.
💢 சைட்டோபிளாசம் மெதுவாகச் சுழல்வதால் செல் நுண்ணுறுப்புகளும் இணைந்து இருக்கும்.
💢 இந்த நிகழ்ச்சி பெயர் சைட்டோபிளாச ஓட்டம்
💢 செல் சுவ்விற்குக்கீழ் காணப்படும் சைட்டோபிளாசம் கூழ்மம் போன்று உள்ளது பெயர் - எக்டோபிளாசம்
💢 எக்டோபிளாசத்திற்கும் உட்கரு சவ்விற்கும் இடையே உள்ள பகுதி திரவ வடிவில் உள்ள பொருள் - எண்டோபிளாசம்
💢 சைட்டோபிளாசமும் உட்கருவும் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது - புரோட்டோபிளாசம்

எண்டோபிளாச வலைபின்னல் மற்றும் கோல்கை உறுப்புகள் பற்றிய சில தகவல்கள்:-
💢எண்டோபிளாச வலைப்பின்னல் அமைப்பை வெளியிட்டவர் - போர்ட்டர் (1947)
💢 எண்டோபிளாச, நுண்குழாய்கள் & புழைகளை கொண்ட ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட தொகுப்பு.
💢 சைட்டோபிளாசம் முழுதும் பரவிக் காணப்படும்.
💢 எண்டோபிளாச வலைப்பின்னல் இருவகைபடும்
1. சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்
2. வழவழுப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்
1. சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்:
💢 புரதத்தை உருவாக்கும் செல்களில் காணப்படுவது சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்
💢 இது ரைபோசோம்கள் எண்டோபிளாச வலைச் சவ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
💢 இது புரத சேர்க்கைக்கு முக்கிய பங்காற்றுகின்றது
2. வழவழப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்:
💢வழவழப்பான எண்டோபிளாச வலையானது ஸ்டீராய்டுகள், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புகள் உற்பத்தி செய்யும் செல்களில் காணப்படுகிறது.
💢 இதன் சுவர் மென்மையானது மற்றும் குழல்களை உருவாக்குகிறது.
பணிகள்:
💢 எண்டோபிளாச வலை செல்லின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கான பெரிய பரப்பை அளிக்கின்றது.
💢 சொரசொரப்பான எண்டோபிளாச வலை புரத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
💢 வழுவழுப்பான எண்டோபிளாச வலையானது ஸ்டீராய்டுகள், ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புகள் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது.
⭕கோல்கை  உறுப்பு அல்லது கோல்கை  உடலங்கள்:
💢 கோல்கை உறுப்புகள் என்பது தட்டுபோன்ற பகுதிகளான கோல்கை உடலங்கள், வலைபோன்று ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
💢 கோல்கை உறுப்பு முதன் முதலில் காமில்லோ கால்ஜி என்பவரால் விவரிக்கப்பட்டது.
💢 கோல்கை உறுப்பு, எண்டோபிளாச வலைப்பின்னலுடன் இணைந்து செயல்பட்டு சிஸ்டர்னே அல்லது குமிழ்கள் போன்ற செல்லின் பகுதிகளை உருவாக்குகின்றது.
பணிகள்:
💢 கொல்கை உறுப்பு லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுகின்றது.
💢 செல் சுவர் மற்றும் செல் சவ்வின் உருவாக்கத்திற்கும் இது காரணமாக உள்ளது.

லைசோசோம் மற்றும் வாக்கியோல்கள் பற்றிய சில தகவல்கள்:-
💢 லைசோசோம் காணப்பிடித்தவர் - கிறிஸ்டியன் டி டுவே (1955)
💢 பலவகையான செரிக்கும் நொதிகளை கொண்ட சவ்வினால் குழப்பட்ட சிறிய நுண்குமிழ்கள் - லைசோசோம்
💢 லைசோசோம் செல்லாக செரிமானத் தொகுப்பாக செயல்படுகின்றன.
💢 தற்கொலைப்பைக்கள் அல்லது செரிக்கும் பைகள் என்று அழைக்கப்படுகிறது.
⭕பணிகள்:
💢 எண்டோசைட்டோசிஸ் என்ற நிகழ்வின் மூலம் செல்லினுள் ஈர்க்கப்பட்ட துகள்களைச் செரிமானம் செய்வதில் பங்கு வகிக்கின்றன.
💢 இரத்த வெள்ளையணுக்களின் லைசோசோம்கள் நோயூக்கிகளையும், அயல் துகள்களையும் அழித்து, இயற்கையாக உடலை பாதுகாப்பதில் பங்காற்றுகின்றன.
வாக்கியோல்கள்:
💢 ஒற்றைச் சவ்வினால் சூழப்பட்ட பெரிய திரவம் நிரம்பிய பைகள் வாக்கியோல்கள்
💢 இவை விலங்கு செல்களை காட்டிலும் தாவர செல்களில் அதிகம் காணப்படுகின்றன.
💢முதிர்ச்சி அடைந்த தாவர செல்களில், செல்லின் பெரும்பகுதி வாக்குயோலினால் நிரப்பப்பட்டுள்ளது.
💢 இது உணவுக்குமிழ்களாகச் செயல்பட்டு உணவுப் பொருள்களை வழுங்குவதிலும் பங்குபெறுகின்றன.
💢 எ.கா. அமீபா உணவுக் குமிழ் உணவுப் பொருள்களை விழுங்கிச் செரிக்கும் திரவங்களை கொண்டு அவற்றைச் செரிக்கின்றது.
⭕ பணிகள்:
💢 வாக்கியோல்கள் கனிம உப்புகளையும், ஊட்டப்பொருள்களையும் சேமிப்பதோடு மட்டுமல்லாமல் இப்பொருள்களின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
💢 செல்லின் விறைப்புத்தன்மைக்காகச் செல்லின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை ஒரே சீரான நிலையில் இருக்கும்படி செய்கிறது.

ரைபோசோம் பற்றிய சில தகவல்கள்:-
💢 ரைபோசோம் கண்டுபிடித்தவர் - பாலட் (1955)
💢 ரைபோசோம் என்பவை ரிபோ நியூக்ளிக் அமிலங்கள் & புரதங்களால் ஆன சிறிய துகள்கள் போன்ற அமைப்பாகும்.
💢 புரத உற்பத்தியின் போது பல ரிபோசோம்கள் தூது RNA உடல் இணைந்து பாலிரைபோசோம்கள் (அ) பாலிசோம்கள் என்ற அமைப்பை உருவாக்குகின்றன.
💢 ரைபோசோம் வகைகள் - 2
1. 70S ரைபோசோம்:
⭕ இவ்வகையான ரைபோசோம் 30 S & 50S என்ற இரண்டு துணை அலகுகளை கொண்டது.
2. 80S ரைபோசோம்:
⭕ இவ்வகையான ரைபோசோம் 40S & 60S  துணை அலகுகளால் ஆனது.
⭕ இது யூகேரியோட்டிக் செல்களில் காணப்படும்.
பணிகள்:
💢 புரத உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
💢 இவை செல்லின் புரத தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
💢 ஒற்றை சவ்வினால் சூழப்பட்ட திரவம் நிரம்பிய பைகள் வாக்குவோல்கள் ஆகும்.
💢 இவை தாவர செல்லில் காணப்படுகின்றது.
💢 வாக்குவோலைச் சுற்றி காணப்படும் தெளிவான உறை போன்ற சவ்வு டோனோபிளாஸ்ட் எனப்படும்.
💢 தாவர செல்லின் பெரும்பகுதி வாக்குவோல்கள் பெற்றுள்ளது.
செல்லின் முக்கிய உறுப்பான

 மைட்டோகாண்ட்ரியா பற்றிய சில தகவல்கள்:-
💢 அனைத்து உயிருள்ள செல்களும் தங்களுக்குத் தேவையான ஆற்றலை மைட்டோகாண்ட்ரியங்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.
💢 மைட்டோகாண்ட்ரியா உருளை வடிவமான செல் நுண்ணுறுப்பு ஆகும்.
💢 செல்லின் ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
💢 ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியா வும் இரண்டு சவ்வினால் (உட்சவ்வு, வெளிச்சவ்வு) சூழப்பட்டு இருக்கும்.
💢 உட்சவ்வு கிரிஸ்டே எனப்படும் பல உட்பகுதிகளை முழுமையற்ற முறையில் புரிக்கின்றன.
💢 உட்சுவற்றில் பல என்சைம்கள் உண்டு.
💢 என்சைம்கள் உதவியால் குளுக்கோஸ் ஆக்ஸிகரணமடைந்து சக்தி உண்டாகிறது.
💢 சுவாச நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் F1 துகள்கள் (அ) ஆக்ஸிசோம்கள்
💢 மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வின் உள்ளே காணப்படும் பகுதி தளப்பொருள் (matrix) எனப்படும்.
💢 கிரிஸ்டே மடிப்புகள் உட்பரப்பை அதிகரிக்கச் செய்து ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களான ATP (அடினோசின் ட்ரை பாஸ்பேட்) உருவாக்குகிறது.
⭕ பணிகள்:
💢 ATP போன்ற ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களை மைட்டோகாண்ட்ரியங்கள் உற்பத்தி செய்கின்றன.
💢 மைட்டோகாண்ட்ரியாவின் தளப்பொருளில் DNA மற்றும் ரைபோசோம்கள் காணப்படுகின்றன.
💢 மைட்டோகாண்ட்ரியா தனித்தன்மை வாய்ந்த செல் நுண்ணுறுப்பு ஆகும்.

கணிகங்கள் மற்றும் சென்ட்ரோசோம் பற்றிய சில தகவல்கள்:-
⭕ கணிகங்கள்: (பிளாஸ்டிகள்)
💢 தாவர செல்களில் மட்டும் காணப்படும் தட்டு வடிவ (அல்லது) முட்டை வடிவ நுண்ணுறுப்புகள் - கணிகங்கள்
💢 கணிகங்க வகைகள் - 3
1. வெளிர் கணிகங்கள் (லியூக்கோபிளாஸ்ட்டுகள்)

2. வண்ணக் கணிகங்கள் (குரோமோ பிளாஸ்டுகள்)

3. பசுங்கணிகங்கள் ( குளோரோ பிளாஸ்டுகள்)

1. வெளிர் கணிகங்கள்:
💢 இவை பணி சேமித்தல்
💢 இவை நிறமற்ற கணிகங்கள்
💢 தரசம்(ஸ்டார்ச்), கொழுப்பு, புரதங்கள் இவற்றை சேமிக்கின்றது.

2. வண்ண கணிகங்கள்:
💢 இவை மலர் மற்றும் கனிகளுக்கு நிறத்தை அளிக்கின்றது.
💢 இவை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுள்ள கணிகங்கள்

3. பசுகணிகங்கள்:
💢இவை ஒளிச்சேர்க்கை நிறமியான பச்சையத்தை பெற்றுள்ள பசுமை நிறக் கணிகங்கள்
💢 இவை பசுமை நிற குளோரோஃபில்கள் காணப்படுகின்றன.
💢 இவை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது.
💢 உட்சவ்வு கணிகங்களில் முழுநீளத்திற்கும் லேமல்லாக்களாக அமைந்து காணப்படுகிறது.
💢 சில பகுயில் லேமெல்லாக்கள் தடித்து, நாணயங்கள் அடுக்கி வைக்கப்பட்டது போல காணப்படும் அதற்கு பெயர் - கிரானாக்கள்
💢 ஒவ்வொரு கிரானாவும் தைலகாய்டுகள் என்று அழைக்கப்படும் தட்டு வடிவச் சவ்வினால் ஆன பைகளை பெற்றுள்ளது.
💢 ஒளிச்சேர்க்கை நிறமியான பச்சையம் தைலக்காய்டு சவ்வில் அமைந்துள்ளது.
💢 தளப்பொருளின் தைலக்காய்டுகளற்ற பகுதி ஸ்ட்ரோமா என்று அழைக்கப்படும்.
💢 ஒளிச்சேர்க்கையில் பங்குபெறும் எண்ணற்ற நொதிகளை ஸ்ட்ரோமா பெற்றுள்ளது.

சென்ட்ரோசோம்:
💢 விலங்கு செல்களிலும் சில மேம்பாடு அடையாதத்தாவரங்களிலும் சென்ட்ரோசோம் காணப்படும்.
💢 புரோகேரியோட்டுகள் செல்களிலும் இவை காணப்படுவதில்லை
💢 இவை சைட்டோபிளாசத்தில் உட்கருவுக்கு வெளியே மிக அருகில் காணப்படுகிறது. இவை சென்ட்ரியோல்கள் என்று அழைக்கப்படும்.
⭕பணிகள்:
💢 செல் பகுப்பின் போது ஸ்பின்டில் நார்கள் தோன்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY