Ads Right Header

CURRENT AFFAIRS MAY 22-2020!


நடப்பு நிகழ்வுகள் 22 மே 2020

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவரானார் டாக்டர் ஹர்ஷ்வர்தன்.

சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீடுதோறும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் ' நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம் ' என்ற பெயரிலான சிறப்புத் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி . விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் .

ராஜஸ்தான் மாநிலத்தில் புலம்பெயர்வு தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல பேருந்து வசதி ( அ ) போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர ' தட்பர் ' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .

மகாராஷ்டிராவில் விவசாயிகள் மற்றும் நில உடைமையாளர்களின் நலனுக்காக " மீ அன்னப்பூர்ணா ' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .

COVID - 19 தொற்று பற்றிய பயம் , மன அழுத்தம் போக்கவும் , ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பது பற்றியும் ஜம்மு - காஷ்மீரில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி ' SUKOON ' என்ற நிகழ்ச்சியில் உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்குகிறது .

காசநோய் கண்டறியும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் - ICMR தெரிவித்துள்ளது . 

காற்றில் கரியமில வாயு மாசுபாடு 17 % குறைவு - கரோனா பரவலால் .

ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்துக்கு ரூ.1000 கோடி உடனடி நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்தால் நாடு திரும்ப அனுமதி.

புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்கள் : சிங்கப்பூரில் வலம்

புற ஊதாக் கதிர்களால், கொரோனா வைரஸை அழிக்கும் புதிய ரோபோக்கள், சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளில் வலம் வருகின்றன.
ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பதால், பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த ரோபோக்கள் இயக்கப் படுகின்றன. மேலும், மனித நடமாட்டம் தென்பட்டால், கதிர் வீச்சு வெளியிடுவதை நிறுத்தும் வண்ணம் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY