Ads Right Header

தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்!தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம்

●  தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் இராஜாஜி தலைமையில் நடை பெற்றது. ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. உச்ச கட்டப் போராட்டமாக உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது.

●    1930, ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சுவதற்காக இராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர்.

 ●   சத்யாக்கிரகிகள், பாரதியாரின் "அச்சமில்லை ” பாடலையும், இந்தய வேதாரண்யம் யாத்திரைக்கென்றே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புனைந்த "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற பாடலையும் பாடியவாறே நடந்து சென்றனர்.

●   தஞ்சை மாவட்ட கலெக்டராக அப்போதியிருந்த எ.ஜே.தார்ன் என்பவர் இப்போராட்டத்தை நசுக்க பல வழிகளில் முயன்றார். ஆனாலும்

●   போராட்ட வீரர்களுக்குத் திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

●  வேதாரண்யத்தை அடைந்து தடையை மீறி உப்புக் காய்ச்சிய ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 அவரைத் தொடர்ந்து சர்தார் வேதரத்தினம் பிள்ளை , டாக்டர் ராஜன், திருமதி.ருக்மணி லட்சுமிபதி போன்ற தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

●  திருச்சியிலிருந்து இராஜாஜி தலைமை யில் உப்பு சத்தியாக்கிரகிகள் புறப்பட்ட அன்றே ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் சென்னை நகரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப் பட்டது. போராட்டத் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

●   காந்தி 1930, மே 5-ம் தேதி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

●  சென்னை மாநில சட்டமன்ற நியமன உறுப்பினரான திருமதி. முத்துலட்சுமி ரெட்டி, காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

●  காந்தி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து ஆறுமாத காலத்திற்குத் தமிழ்நாட்டில் சட்டமறுப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது.

●  1932 ஜனவரி 26ல் சென்னையில் தடையை மீறி தேசிய சுயராஜ்ஜிய தினம் கொண்டாடப்பட்டது.

●  இறுதியாக, 1934-ல் சட்டமறுப்பு இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் படித்தவர் களிடம், பாமர மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேசிய இயக்கம் வளர்ச்சியடைய உதவியது.


தனிநபர் சத்தியாக்கிரகம்

●  வார்தாவில் 1940, அக்டோபர் 13 அன்று கூடிய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை வெளியிட்டார்.

●  அதன்படி, தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாக்கரகியாக டாக்டர்டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் சிறை சென்றார். இவரைத் தொடர்ந்து ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம், ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட பல தலைவர்கள் தனிநபர் சத்தியாக்கிரகத்தின் போது சிறை சென்றனர் .

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

●   1942, ஆகஸ்ட் 7,8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

●  1942 ஆகஸ்டு 9-ம் தேதி காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

● வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பியவர் காமராஜராவார்.
காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கல்விக் கூடங்கள் காலியாக இருந்தன.
தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் - கலகக்காரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

●   கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைக்குச்செல்லாமல் தடையை மீறி ஊர்வலம் சென்றனர்.


●  மதுரை மாவட்டம் முழுவதும் கடையடைப்புச் செய்யப்பட்டது. தீயிடல், தந்திக் கம்பங்களை அறுத்தல், பாலங்களைத் தகர்த்தல் போன்ற வன்முறைச் செயல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்தன.

●  வன்முறை அதிகமாகக் காணப்பட்ட இந்த ஆகஸ்ட் போராட்டம் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மூன்று மாதமே நீடித்ததது.

●  இந்தியா விடுதலை பெறல்

●  1947 ஆகஸ்ட 15 ஆங்கிலேய யூனியன் ஜாக் கொடி அகற்ற பட்டு மூவர்ணக்கொடி ஏற்றபட்டது

● அப்போது ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக இருந்தார்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY