Ads Right Header

சிற்றிலக்கியங்கள் - 50 முக்கியக் குறிப்புகள்!


01 . நாயக்கர் காலம் என்ன ?
கி.பி. 1350 முதல் 1750 வரை

02. மதுரையில் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியவர் யார் ? குமாரகம்பண்ணன்

03 . சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ? 96

04 . தமிழில் முதன்முதலாகத் தோன்றிய உலா நூல் எது ?
திருக்கயிலாய ஞான உலா

05 . திருக்கயிலாய ஞான உலாவின் ஆசிரியர் யார் ?
சேரமான் பெருமாள் நாயனார்

06 . ஆளுடையபிள்ளையார் திரு உலா மாலையின் ஆசிரியர் யார் ? நம்பியாண்டார் நம்பி

07 . திருக்குற்றாலநாதர் உலாவின் ஆசிரியர் யார் ?
திரிகூட இராசப்பகவிராயர்

08 . அந்தக்கவி வீரராகவமுதலியார் இயற்றிய உலா நூல்கள் யாவை ? திருவாரூர் உலா
திருக்கழுக்குன்றத்து உலா

09 . ஏகாம்பரநாதர் உலாவின்
ஆசிரியர் யார்?
இரட்டைப்புலவர்கள்

10 . தூது இலக்கியம் எவ்வகைப் பாவால் பாடப்பெறும் ?
கவிவெண்பாவால்

11 . தூது இலக்கியங்களில் தலைச்சிறந்ததாகக் கருதப்படுவது எது ? தமிழ்விடுதூது

12 .காக்கை விடு தூதின் ஆசிரியர் யார் ? வெள்ளைவாரணனார்

13 . மீனாட்சி சுந்தரம்பிள்ளை எழுதிய தூதுநூல் எது ? தசவிடுதூது

14 . தூதின் வகைகளைக் கூறுக ?
அகத்தூது , புறத்தூது

15 . தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார் ? பெயர் கிடைக்கப்பெறவில்லை

16 . நெஞ்சுவிடுதூதின் ஆசிரியர் யார் ? கொற்றவன்குடி உமாபதி

17 . சிவாச்சாரியார் அழகர் கிள்ளைவிடுதூதின் ஆசிரியர் யார் ? பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

18 . வண்டுவிடு தூதின் ஆசிரியர் யார் ? கச்சியப்ப முதலியார்

19 . சுப்ரதீபக்கவிராயர் இயற்றிய தூதின் பெயர் என்ன ?
கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது

20 . பிள்ளைத்தமிழின் வேறுபெயர்கள் யாவை ?
பிள்ளைக்கவி , பிள்ளைப்பாட்டு

21 . பிள்ளைத்தமிழின் இருவகைகள்
யாவை ?
ஆண்பால் பிள்ளைத்தமிழ் ,
பெண்பால் பிள்ளைத்தமிழ்

22 . பிள்ளைத்தமிழின் பருவங்கள்
எத்தனை ? 10

23 . ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் யாவை ?
காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர்

24 . பெண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் யாவை ?
காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வருகை , அம்புலி , கழங்கு
( அம்மானை ) , நீராடல் , ஊசல்.

25 . பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி யார் ? பெரியாழ்வார்

26 . பிள்ளைத்தமிழ் எந்தச் சந்தத்தால் ஆனவை ? கழிநெடிலாசிரியச் சந்தவிருத்தத்தால்

27 . அம்புலிப் பருவம் எவ்வெவ் வகைகளால் பாடப்படும் ? சாம , தான , பேத , தண்டம் எனும் நான்கு வகைகளில்

28 , குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் யாவை ? மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

29. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார் ? பகழிக் கூத்தர்

30 . காந்திமதியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார் ? அழகியப் பலபட்டடைச் சொக்கநாதர்

31 . மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் நூல்கள் யாவை ? சேக்கிழர் பிள்ளைத்தமிழ் . முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்

32 . கலம்பகத்தின் உறுப்புகள்
எத்தனை ?  18

33 . கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர்கள் யார் ? இரட்டையர்கள்

34 . கலம்பக இலக்கியங்களுள் தலைசிறந்தது எது ? நந்திக்கலம்பகம்

35. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத்தலைவன் யாவர் ? மூன்றாம் நந்திவர்மன்

36 . கலம்பகத்தின் செய்யுள் தொகை என்ன ? கடவுளார்க்கு - 100 , முனிவர்க்கு - 95 , அரசர்க்கு - 90 , அமைச்சர்க்கு - 70 , வணிகர்க்கு - 50 , வேளாளர்க்கு - 30

37 . ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தின் ஆசிரியர் யார் ? நம்பியாண்டார் நம்பி

38 . திருவரங்கக் கலம்பகம் பாடியவர் யார் ? பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

39 . மதுரைக் கலம்பகம் பாடியவர் யார் ? குமரகுருபரர்

40 . இரட்டையர் பாடிய கலம்பக நூல்கள் யாவை ? திருவாமாத்தூர்க் கலம்பகம் , தில்லைக் கலம்பகம் TNPSC வினா - விடை கையேடு 641

41 . வீரமாமுனிவர் பாடிய கலம்பக நூல் எது ? திருக்காவலூர்க் கலம்பகம்

42. நந்திக் கலம்பகத்தில் காணப்படும் பாடல்கள் எத்தனை ? 144

43. குறவஞ்சி இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது எது ? குறவஞ்சி நாடகம் , குறவஞ்சி நாட்டியம்

44. குறவஞ்சி இலக்கியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது எது ? திருக்குற்றாலக் குறவஞ்சி

45. திருக்குற்றாலக் குறவஞ்சியன் ஆசிரியர் யார் ? திரிகூட இராசப்பக் கவிராயர்

46 . வரத நஞ்சையப்ப பிள்ளை இயற்றிய குறவஞ்சிய நூல் எது ? தமிழரசி குறவஞ்சி

47. சரபேந்திர பூபாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார் ? கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்

48. பெத்தலேகம் குறவஞ்சியின் ஆசிரியர் யார் ? வேதநாயக சாஸ்திரியார்

49 . பள்ளு - எந்த நில மக்களுக்கு உரிய நூல் ? மருத நில மக்களுக்கு

50 . பள்ளு இலக்கியம் எந்த வனப்பு வகையைச் சார்ந்தது ? புலன் பள்ளு.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY