Ads Right Header

திறன்மிகு இந்தியா ( Skill India ) அல்லது Pradhan Mantri Kausal Vikas Yojana.



திறன்மிகு இந்தியா ( Skill India ) அல்லது Pradhan Mantri Kausal Vikas Yojana

1 . இந்தியாவில் தயாரிப்போம் , டிஜிட்டல் இந்தியா போன்ற பலத்திட்டங்களின் மூலம் இந்தியாவில் அந்நிய முதலீடும் தொழிற்சாலைகளும் அதகரிக்கும் .

2 . இந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்கி தருவது மற்றும் இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் .

 3 . இதற்காக மத்திய அரசால் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன .

4 . இதற்காக 1600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 24 இலட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

5 . இதில் 10 ஆம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு பள்ளிக்கு செல்லாமல் நின்றோர் குறைந்த வருமானம் உடைய குடும்பத்தைச் சார்ந்த இளைஞர் குறிப்பாக தேர்வு செய்யப்பட்டு இப்பயிற்சி  அளிக்கப்படும் .

6 . இத்திட்டம் வேலையின்மையை ஒழிப்பதிலும் , வறுமையை ஒழிப்பதிலும் முக்கிய பங்காற்றும் .

7 . இவர்களுக்கு கொடுக்க வேண்டிய பயிற்சிக்குறித்து தேசிய திறன் வளர்ச்சி கழகம் முடிவு செய்யும் .

8 . இக்கழகம் சந்தையில் எந்தத் துறையில் தொழிலாளர் தேவை அதிகம் என்று கண்டறிந்து அத்துறையில் பயிற்சி அளிக்க முன்மொழிவு அளிக்கும்.

9 . மேலும் , இந்நிறுவனம் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் மூலம் இப்பயிற்சியை வழங்கும் .

10 . தற்போது வரை 107 பயிற்சி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு இவற்றின் 2300 பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டு உள்ளன .

11 . வழக்கமாக பயிற்சி தரும் துறைகளான வெல்டிங் , பிளம்பர் , நகை தயாரித்தல் , கட்டிடம் கட்டுதல் , துணி தைத்தல் , நெய்தல் , மரவேலை மட்டுமின்றி புதிய துறைகளான போக்குவரத்து , ஜவுளித் துறை , ஆபரண கற்கள் தயாரித்தல் , நிதி நிறுவனம் , சுற்றுலா , ரியல் எஸ்டேட் , போக்குவரத்து , நகை வடிவமைப்பு , உடைவடிவமைப்பு போன்ற துறைகளிலும் பயிற்சி அளிக்கப்படும் .

12 . இதற்கான பாடத்திட்டம் தொழிற்சாலைகளை கலந்து ஆலோசித்து தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தால் முடிவு செய்யப்படும் .

13 . பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலை செய்யும் வண்ணம் சர்வதேச தரத்திற்கு இப்பயிற்சி அமையும் .

14 . இப்பயிற்சியுடன் மேலாண்மைப்பயிற்சி , ஆளுமைத்திறன் வளர்ப்பு பயிற்சி , மொழிப்பயிற்சி போன்றவையும் வழங்கப்படும் .

15 . இப்பயிற்சியின் முடிவில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கற்றுக்கொண்ட திறளை அறிந்து , அதற்கு ஏற்ப சான்றுகளும் வழங்கப்படும் .

16 . மேலும் , இவர்களுக்கு தேவையான திறன் பெற்றுள்ளனரா என்பதை மூன்றாவது நபரை கொண்டு அறிந்து உறுதிப்படுத்தப்படும் .

17 . பயிற்சி முடித்தவர்களுக்கு பண உதவியாக சுமார் 8000 ரூபாய் வழங்கப்படும் .

18 , ஒவ்வொரு துறையிலும் அளிக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய அமைச்சகத்தின் மூலம் பயிற்சி அளித்தலும் புதிய துறைகளில் பயிற்சி அளித்தலும் இதன் பாடத்திட்டத்தை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்தலாலும் இத்திட்டமானது முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது .

எழுந்திடு இந்தியா திட்டம்
 Stand Up India Scheme

நோக்கம்

1 . தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் , பெண்கள் ஆகிய பிரிவுகளில் உள்ள தொழில் முனைவோரை ஊக்குவித்தல்.

 2 . 08.04.2018 ல் தொடக்கம் .

3 . இதன் கீழ் ஒவ்வொரு வங்கி கிளையும் மேற்கண்ட வெவ்வேறு வகுப்பை சார்ந்த இரு தொழில் முனைவோருக்கு குறைந்தபட்சம் கடன் அளிக்க வேண்டும் .

4 . இதன் மூலம் 36 மாதங்களில் 2.5 லட்சம் நபர்கள் பயன்பெறுவர் .

5 . கடளாளது தொழில் தொடங்கவும் , ஆரம்பிக்கப்பட்ட தொழிலை தொடர்ந்து நடத்தவும் வழங்கப்படும் .

6 . கடனானது 10 இலட்சம் முதல் 1 கோடி வரை 7 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வழங்கப்படும் .

7 . இக்கடனுக்கான பாதுகாப்பை National Credit Guarantee Trustee Company வழங்கும் .

8 . இக்கடனுக்கான மறுநிதியமாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி செயல்படும் .

9 . இதன் தொடக்க முதலீடு ரூ . 10 , 000 கோடி நிதியை SIDBI பெற்றுள்ளன .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY