Ads Right Header

6th to 12th - புதிய புத்தகம் திருக்குறள் அனைத்தும் அழகுத் தமிழில்...


நடுவுநிலைமை

1 . தக்கார் தகவிலர் என்பது அவரவர்             எச்சத்தால் காணப் படும் .

பொருள் : நடுவு நிலைமை உடையவர் , நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2 . சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி .

பொருள் : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும் . அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும் .

அணி : உவமை அணி .

கூடா ஒழுக்கம்

3 . வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று .

பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம் , புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது .

அணி : இல்பொருள் உவமை அணி .

4 . கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல் " .

பொருள் : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது . வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது . அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும் .

முழுத் தொகுப்பையும் காண
Click here to view pdf

⚓Whatsapp

tnkural.com group 26

⚓Telegram

Click here to join TG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY