Ads Right Header

UNIT 8 - சங்ககால ஆட்சியமைப்பு!


சங்க கால ஆட்சியமைப்பு

அரசுரிமை

அரசுரிமை பரம்பரையானது .
அரசர் ' கோ ' என அழைக்கப்பட்டார் . அது கோன் எனும் சொல்லின் சுருக்கமாகும் . வேந்தன் , கோன் , மன்னன் , கொற்றவன் , இறைவன் எனும் வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார் . பொதுவாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசரின் மூத்தமகனே அடுத்து அரியணை ஏறினார் .

பட்டம் சூட்டப்படும் விழா

' அரசுக்கட்டிலேறுதல் ' அல்லது முடிசூட்டுவிழா எனப்பட்டது . பட்டத்து இளவரசர் கோமகன் எனவும் அவருக்கு இளையோர் இளங்கோ , இளஞ்செழியன் . இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர் . அரசர் தினந்தேறும் அரசவையைக் ( நாளவை ) கூட்டினார் . அங்கு அவர் விவாதங்களைச் செவிமடுத்து அனைத்து வழக்குகளையும் தீர்த்து வைத்தார் .

அரசின் வருமானம் வரிகள் மூலம் பெறப்பட்டன . நிலவரியே வருவான் முக்கிய ஆதாரமாகும் . அது ' இறை ' என அழைக்கப்பட்டது . இதைத்தவிர அரசு சுங்கவரி , கப்பம் , அபராதம் ஆகியவற்றையும் வசூல் செய்தது , அரசர்களும் வீரர்களும் வீரக்கழல் அணிந்திருந்தனர் . அதன்மீது அணிந்திருப்பவரின் பெயரும் , அவரின் சாதனைகளும் பொறிக்கப்பட்டிருந்தன .

ஒற்றர்கள் நாட்டுக்குள் நடப்பனவற்றவை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடப்பனவற்றையும் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டனர் . " புறமுதுகில் காயமடைவது அவமானமாகக் கருதப்பட்டது . போரின்போது புறமுதுகில் காயம்பட்டதற்காக அரசர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிரை மாயத்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன .

சபை

அரசருடைய சபை அரசவை என அழைக்கப்பட்டது . அரசர் ' அரியணை ' என்றழைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது வழக்கம் . அரசவையில் அரசரைச்சுற்றி அதிகாரிகள் , சிறப்பு விருந்தினர்கள் , அவைப்புலவர்கள் ஆகியோர் அமர்ந்திருந்தனர் . தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் அரசர்கள் ஐந்து விதக் கடமைகளைச் செய்தனர் .

கல்விகற்பதை ஊக்குவிப்பது , சடங்குகளை நடத்துவது , பரிசுகள் வழங்குவது , மக்களைப் பாதுகாப்பது , குற்றவாளிகளைத்தண்டிப்பது ஆகியன அவ்வைந்து கடமைகளாகும் .

தூதுவர்கள் அரசரால் பணியில் அமர்த்தப்பட்டனர் . தூதுவர்கள் முக்கியமான பங்கு வகித்தனர் . அரசருக்கு நிர்வாகத்தில் பல அதிகாரிகள் உதவி செய்தனர் .

அவர்கள் ஐம்பெருங்குழு ( ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு எண்பேராயம் ( எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர் . படை அரசருடைய படை என்று அழைக்கப்பட்ட இராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது .

அவை காலாட்படை , குதிரைப்படை , யானைப்படை , தேர்ப்படை என்பனவாகும் . படைத்தலைவர்
' தானைத் தலைவன் என அழைக்கப்பட்டார் .

அக்காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆயுதங்கள் வாள் , கேடயம் தோமாரம் ( எறியீட்டி ஈட்டி , வில் , அம்பு ஆகியனவாகும் . தோமாரம் எனப்படுவது சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையைப் போன்று வீசப்படுவதாகும் .

ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் படைக் கொட்டில் ' என அழைக்கப்பட்டது . கோட்டைகள் அரண்களாலும் ஆழமான அகழிகளாலும் பாதுகாக்கப்பட்டன . போர்முரசம் கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது .

சட்டமும் நீதியும்

அரசரே இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆவார் . தலைநகரில் நீதிமன்றம் ' அவை ' என்றழைக்கப்பட்டது . கிராமங்களில் மன்றங்கள் என்பவை தீர்ப்பு வழங்கப்படும் இடங்களாயிருந்தன . உரிமையியல் வழக்குகளில் பின்பற்றப்பட்ட வழிமுறையின் படி நாகப்பாம்பு இருக்கும் ஒரு பானைக்குள் வாதி தனது கையை நுழைக்க வேண்டும் .

நாகம் அவரைத் தீண்டினால் குற்றவாளியாகக் கருதப்படும் அவருக்கு தண்டனை வழங்கப்படும் . பாம்பு அவரைத் தீண்டவில்லை எனில் அவர் குற்றமற்றவர் எனக் கருதப்பட்டு விடுவிக்கப்படுவார் . தண்டனைகள் எப்போதும் கடுமையாகவே இருந்தன . திருட்டு வழக்குகளில் மரணதண்டனை வழங்கப்பட்டது .

தலையைச் சீவுதல் , உடல் உறுப்புக்களைத் துண்டித்தல் , சித்திரவதை செய்வது , சிறையில் அடைப்பது , அபதாரம் விதிப்பது ஆகியவை குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகளாகும் .

உள்ளாட்சி நிர்வாகம்

ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும்
 ' மண்டலம் ' என்றழைக்கப்பட்டது . மண்டலங்கள் நாடுகளாகப் பிரிக்கப்பட்டன . நாடு பல கூற்றங்களாகப் ( கூற்றம் ) பிரிக்கப்பட்டன . ஊர் என்பது கிராமம் ஆகும் . அவை பேரூர் ( பெரிய கிராமம் ) , சிற்றூர் ( சிறிய கிராமம் ) , மூதூர் ( பழமையான கிராமம் ) என அழைக்கப்பட்டன . கடற்கரையோர நகரங்களுக்கப் பட்டினம் எனப் பெயர் புகார் என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும் .
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY