Ads Right Header

கட்சிகளின் அங்கீகாரம், செயல்பாடுகள்!


தேசியக் கட்சிகள்

ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது மாநிலக் கட்சி என்ற தகுதியை பெற்றிருக்குமானால் அது ' தேசியக் கட்சி ' என்ற தகுதியை பெறுகிறது .

அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் . இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாகப் பாவித்தப் போதிலும் , தேசியக் கட்சிகளுக்கும் , மாநிலக் கட்சிகளுக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

இக்கட்சிகளுக்கு தனித்தனிச் சின்னங்கள் வழங்கப்படுகிறது . ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகிக்க முடியும் . 2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை ஏழு ஆகும் .

மாநிலக் கட்சிகள்

ஏழு தேசிய கட்சிகளைத் தவிர ,
நாட்டின் பெரும்பான்மையான முக்கிய கட்சிகளை " மாநிலக் கட்சி " களாக தேர்தல் ஆணையம் வகைப்படுத்தி யிருக்கிறது . இக்கட்சிகள் பொதுவாகப்
" பிராந்தியக் கட்சிகள் " என்று குறிப்பிடுவர்.

 மக்களவை தேர்தலிலோ அல்லது மாநில சட்டசபைத் தேர்தலிலோ ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை வெற்றி பெற்ற அல்லது குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளிக்கிறது .


கட்சிகளின் அங்கீகாரம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி தேசியக் கட்சி எனும் பங்கு பெற பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருத்தல் வேண்டும் .

மக்களவை தேர்தலிலோ ( அ ) மாநில சட்டசபைத் தேர்தலிலோ குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பதிவான மொத்தச் செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 % பெற்றிருக்க வேண்டும் .

மக்களவையில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும் . மேலும் குறைந்தபட்சம் மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் .

குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் ' மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் .

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன . பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் இடையேதான் கடும் போட்டிகள் நிலவுகின்றன . கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும் , திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர் .

நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன . முறையாக சட்டங்கள் நாடாளுமன்றங்களிலும் , சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன . அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து , அவற்றை வழிநடத்துகின்றனர் . தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாகப் பங்களிப்புச் செய்கின்றன . இவை அரசின் குறைகள் மற்றும் , தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன , விமர்சனம் செய்கின்றன .

மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன . மேலும் அவை முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன . அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to view pdf

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY