Ads Right Header

MODEL QUESTION & CA - TNPSC STUDY MATERIAL!




கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி
 ( கலிங்கம் + அத்து + பரணி )

சோழமன்னன் முதற்குலோத்துங்கச் சோழன் , கலிங்க நாட்டு மன்னன் அனந்தபதுமன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான் . ' அப்போது சோழ மன்னனின் படைத் தலைவன் கருணாகரன் ஆவான் . தோற்றவன் கலிங்க மன்னன் . எனவே கலிங்க நாட்டுப் பெயரால் இந்நூல் கலிங்கத்துப்பரணி என்னும் பெயர் பெற்றது .

 தமிழின் முதல் நூல் - கலிங்கத்துப்பரணி கலிங்கத்துப் பரணியை எழுதியவர் - செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி இரண்டிரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் ' பா ' வகையால் பாடப்பெற்றது.

 'அபயன் ' என்ற சிறப்புப் பெயர் பெற்ற மன்னன் முதலாம் குலோத்துங்கன் . செயங்கொண்டாரின் ஊர் திருவாரூரின் அருகே உள்ள தீபங்குடி .

செயங்கொண்டர் காலம் - கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு . முதன் முதலில் பரணி பாடியவர் . இவரே முதற்குலோத்துங்க அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் . குலிங்கத்துப் பரணிணை முதற் குலோத்துங்கச் சோழமன்னனின் அவையில் அரங்கேற்றினார் .

அப்பொழுது பாடல்களின் சிறப்பை வியந்து போற்றிய மன்னன் , ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன் தேங்காயைப் பரிசளித்தான் . " இந்நூல் மக்கள் உலகம் பேய் உலகம் என இரு பிரிவுகளை உடையது . மக்கள் உலகில் கடைதிறப்பு . அவதாரம் , இராச பாரம்பரியம் , போர் பாடியது என நான்கு உறுப்புகளும் பேய் உலகில் இந்திரசாலம் , பேய் முறைப்பாடு , காளிக்குக் கூளி கூறியது , களம் பாடியது என நான்கு உறுப்புகுகும் உள்ளன .

செங்கொண்டார் இயற்றிய நூல்கள் : இசை ஆயிரம் , உலா மடல் பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர் , " பரணிக்கோர் செயங்கொண்டான் " என . . . - செங்கொண்டாரைப் பாராட்டினாள் . பரணிக்கோர் . - " தென் தமிழ்த் தெய்வப் பரணி " எனக் கலிங்கத்துப் பரணியை போற்றி புகழ்ந்தவர் ஒட்டக் கூத்தர் .

ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் கொன்று வெற்றி பெற்ற வீரனின் சிறப்பைப் பாடுவது - பரணி எனப்படும் . " ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி " இலக்கண விளக்கப்பட்டியல் 700 யானைகளைக் கொன்றவனுக்குப் பாடப்படுவது பரணி எனக் கூறும் நூல் - பன்னிருபாட்டில் " ஏழ்தலைப் பெய்த நூறுபடை இபமே ஆடுகளத் தட்டாற் பாடுதல் கடனே " என்கிறது .

ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்று குவிக்கும் வீரம் பொருந்திய அரசன் வெற்றிச் சிறப்பைப் புகழ்ந்து பாடும் நூல் ' பரணி ' பரணி இலக்கியம் பெயர் பெறும் முறை : போரில் தோற்றவர் அல்லது தோற்றவர் நாட்டின் பெயரால் பரணி இலக்கியம் பெயர் பெறும் .

June 2020 - CA
Touch Here

Gr2 Model Question
Touch Here

History 6th to 12th
Touch Here

Unit 8
Touch Here

Tamilnadu HR
Touch Here

Gr1. Gr2 GK
Touch Here
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY