Ads Right Header

06/08/2020 Current Affairs...

 

தேசிய நிகழ்வுகள் 

ஏக் மாஸ்க் அணேக் ஜிண்டாகி 

 மத்திய பிரதேச அரசு ஏக் மாஸ்க் அனேக் ஜிண்டாகி என்ற ஒரு பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது .

இதன் பொருள் ஒரு முக கவசம் பல உயிர்கள் என்பது ஆகும் * இந்த பிரச்சாரம் கரோணா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது . 


பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம் 

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திருவேந்திர சிங் ராவத் இந்தியாவின் முதல் பெண் சிறுத்தை பாதுகாப்பு மையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

உத்தரகாசி மாவட்டத்தில் பைரோங்கதி என்ற பாலத்தின் அருகே லங்கா என்ற பெயரில் அமைய உள்ளது.

மாநில வனத்துறை மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது 

பரிவார் பேச்சன் பத்ராஸ் .

ஹரியானா மாநில முதலமைச்சர் பரிவார் பேச்சன் பத்ராஸ் என்ற திட்டம் அறிமுகம் செய்துள்ளார்.

நோக்கம் : மத்திய மாநில திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.

 வித்யார்த்தி விஜியன் மந்தன் 2020-21 

 வித்யார்த்தி விஜியன் மந்தன் 2020-21 எனும் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

நோக்கம் : 6 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே அறிவியலை பிரபலப்படுத்துவது.

 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

Aji - Neo கருவி.

நோக்கம் 

பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவினை மதிப்பிடுவது.

 பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக இருந்தால் மூளை சேதமடையும் வாய்ப்பும் , மஞ்சள்காமாலை ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

இதற்காக புதிய Aji - Neo கருவி உபகரணம் ஒன்றை கொல்கத்தாவில் உள்ள அடிப்படை அறிவியலுக்கான தேசிய மையம் உருவாக்கியுள்ளது . 

இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி - பி.சி.ஆர் * Mobile Infection Testing and Reporting ( MITR ) lab என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி - பி.சி.ஆர் ஆய்வகத்தை ( RT - PCR lab ) கர்நாடக மாநில அரசு பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது . 

இந்த ஆய்வகத்தை பெங்களூவின் இந்திய அறிவியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது . 

கோவிட் -19 நோய் பரிசோதனை மட்டுமல்லாது HCV , HINI , TB , HIV , HPV போன்ற நோய்களை சோதிக்கவும் இந்த நடமாடும் சோதனை மையத்தைப் பயன்படுத்தலாம் . 

COVID 19BWM Qaul 

நகராட்சி கழகம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உயிரி மருத்துவ கழிவுகளை கண்காணிக்க COVID 19BWM என்ற செயலியை பயன் படுத்துமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்படி மத்திய மாக கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது.

கழிவுகள் சேகரித்து கொண்டு செல்லப்பட்டு பொதுவான உயிரியல் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறது.

சர்வதேச நிகழ்வுகள் 

லெபனான் வெடிப்பு

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அம்மோனியம் நைட்ரேட் மருந்து 4-8-2020 அன்று வெடித்தது . 

இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . * அம்மோனியம் நைட்ரேட் ஒரு வெள்ளை நிற , படிக வேதிப்பொருள் ஆகும்.இது தண்ணீரில் கரையக்கூடியது . வணிக வெடிபொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுத்தப்படுகிறது .

 நியமனங்கள் 

ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர்

 ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா 6-8-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார் . 

முன்னதாக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநார் கிரீஷ்சந்திரர் தனது பதவியை 5-8-2020 அன்று ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது . 

நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையர் * அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார ஆணையராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் தவே ஏ . சோக்ஷி ( 39 ) நியமிக்கப்பட்டுள்ளார் . 

வெளிநாட்டு உறவுகள்

 India - UN Development Partnership Fund 

 கரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிகொண்டிருக்கும் நிலையில் , வளரும் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்திய - ஐ.நா . வளர்ச்சி கூட்டு நிதியத்துக்கு ( India - UN Development Partnership Fund ) இந்தியா ரூ .115.95 கோடி பங்களிப்பு செய்துள்ளது . 

ரூ .45 கோடி இதில் அங்கம் வகிக்கும் அனைத்து வளரும் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் , ரூ .70.95 கோடி காமன்வெல்த் நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன . 

பைடு சர்ச் தடை 

பைடு சர்ச் எனப்படும் சீனாவின் மிகவும் புகழ்பெற்ற இணைய தேடல் இயந்திரத்திற்கு ( Baidu Search Engine ) இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது .  இது சீனாவின் கூகுள் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY