Ads Right Header

07/08/2020 Current Affair...

தேசிய நிகழ்வுகள் 

வியாபர் மாலா விரைவு ரயில் 

வடக்கு ரயில்வேயானது டில்லியிலுள்ள கிஷான்காஞ்சிலிருந்து திரிபுராவில் உள்ள ஜிரணியாவை இணைக்கும் வகையில் தனது முதலாவது வியாப்பர் ரயிலை இயக்கி உள்ளது .

நோக்கம் 

சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் எளிதாக சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையில் கொண்டு செல்ல அவர்களுக்கு உதவுவது ஆகும்.

டெண்டு இலைகள் சேகரிக்க திட்டம் 

 சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பஹல் டெண்டு இலைகள் சேகரிக்க திட்டத்தை தொடங்கியுள்ளார் .

நோக்கம் : பீடி -இலை பொருத்தப்பட்ட சிகரெட்டுகள் தயாரிக்க பயன்படும் டெண்டு இலைகள் வனவாசி களிடமிருந்து மாநில அரசால் கொள்முதல் செய்யப்படும்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 

உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதி போட்டியில் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் முதல் பரிசை வென்றது * ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2020 போட்டியின் மாபெரும் இறுதி சுற்று 2020 ஆகஸ்ட் 1 முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது * இந்த ஹேக்கத்தான் போட்டி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை , அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் , பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

OVERHEAD EQUIPMENT 

இந்திய ரயில்வே துறை இரயிலின் நிகழ்நேர வருகை பற்றி அறிந்துகொள்ள Overhead equipment ஆய்வு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

 நியமனங்கள்

 SEBI தலைவர் பதவி காலம் நீட்டிப்பு 

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் “ ( Securities and Exchange Board of India ( SEBI ) ) தலைவராகப் பதவி வகித்துவரும் அஜய் தியாகியின் பதவி காலம் 01-9-2020 முதல் 28-02-2022 வரையிலான 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . 

இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி : 

இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக ஜி.சி.முர்முவை மத்திய அரசு 6-8-2020 அன்று நியமித்துள்ளது . * இப்போது சிஏஜி - யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 7 - ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முர்மி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் . * 60 வயதாகும் முர்மு குஜராத்தைச் சோர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார் * பிரதமர் நரேந்திர மோடி , குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு தலைமைச் செயலராக முர்மு பணியாற்றினார் . 

வெளிநாட்டு உறவுகள் 

மாலத்தீவு - இந்தியா 

மாலத்தீவு நாட்டில் செயல்படுத்தப்படும் மீன் தொழிற்சாலை கட்டமைப்பு திட்டங்களுக்காக இந்தியா 18 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை " Export - Import Bank ( EXIM ) " வங்கி வழியாக வழங்குகிறது .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY