Ads Right Header

7th New book Questions with Answer...

7 ஆம் வகுப்பு குடிமையியல் முதல் பருவம்

#சமத்துவம் & #அரசியல்_கட்சிகள்

 #உற்பத்தி


1) “சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான

வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும்.” என்றவர் ?

🦄 பேராசிரியர் லாஸ்கி


2) சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உருவாக்கியவர் ?

🦄ஏ‌.வி.டைசி


3) எந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு உள்ளது ?

🦄 இங்கிலாந்து


4) சுவிட்சர்லாந்து நாட்டில் எந்த ஆண்டில் தான்பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ?

🦄 1971


5) பெண்களை மேம்படுத்தும் 

விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.?

🦄 50%


6) 2017ஆம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் _____ என்பது ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது ?

🦄 பாலின சமத்துவம்


7) மனித மாண்பு என்பது _____ ஆகும் ?

🦄 சுயமரியாதை


8) _________ முதல் _________ 

வரையிலான இந்திய அரசியலமைப்புச் 

சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப்

பற்றி குறிப்பிடுகின்றன.?

🦄 பிரிவு 14- 18 வரை


9) பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்யும் சட்டப்பிரிவு?

🦄பிரிவு 18


10) பொது வேலைவாய்ப்பில் 

அனைவருக்கும் சம வாய்ப்பு 

அளிக்கும் சட்டப்பிரிவு?

🦄 பிரிவு 16


11) ____ உரிமை என்பது சட்டத்தின் முன்

அனைவரும் சமம் என்பதை குறிக்கிறது.

🦄 குடியியல்


12) அனைவருக்கும் சட்டத்தின்படி சமமானபாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு ___ மேலும் வலிமை படுத்தப்பட்டுள்ளது?

🦄 பிரிவு 21ல்


13) இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு ?

🦄 1952


14) பாலின சமத்துவம் என்பது பெண்கள், ஆண்கள் சிறுவர், சிறுமியர், ஆகியோர்சமமான உரிமைகள் வாய்ப்புகள் பெற வேண்டும் என்று கூறுவதோடு அவர்கள்ஒன்று போல நடத்தப்பட வேண்டும் எனஎந்த நிறுவனம் கூறுகிறது.?

🦄 யூனிசெப்


7ம் வகுப்பு முதல் பருவம் 2ம் பாடம்

#அரசியல்_கட்சிகள்


1) இந்தியா மக்களாட்சி நாடாக மாறிய ஆண்டு ?

🤗 1950


2) ____ என்பவை தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு ஆகும்.?

🤗 அரசியல் கட்சிகள்


3) இருகட்சி ஆட்சி முறையை கொண்டுள்ள நாடுகள் எவை?

🤗 பிரிட்டன்/ அமெரிக்கா


4) இந்திய தேர்தல் ஆணையம் எங்குள்ளது ? அதன் பெயர் ?

🤗 புதுடெல்லி/ நிர்வாச்சன் சதன்


5) தேர்தல் சின்னங்கள் சட்டம் ?

🤗 1968


6) தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு அடுத்து இரண்டாவது அதிக எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

🤗 எதிர் கட்சி


7) எதிரக்கட்சித் தலைவர்  எந்த அமைச்சரின் அந்தஸ்தை கொண்டிருப்பார் ?

🤗 கேபினட் அமைச்சர் 


8) வில் மற்றும் அம்பு சின்னத்தை பயன்படுத்தும் கட்சிகள் யாவை ?

🤗 ஜார்கண்ட் முக்தி மோட்சா & சிவசேனா


9) மக்களாட்சியின் முதுகெலும்பாகத் 

திகழ்வது _____

🤗 அரசியல் கட்சிகள்


10) அரசியல் கட்சிகள் ____________ 

மற்றும் _____________ இடையே

பாலமாக செயல்படுகின்றன.

🤗 குடிமக்கள் & கொள்கை வகுப்பாளர்கள்


11) தேசிய கட்சியாக அங்கிகாரம் பெற ஒரு கட்சி இறுதியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் எத்தனை மாநிலங்களில் 2% வாக்கு பெற்றிருக்க வேண்டும் ?

🤗 மூன்று 


12) தேர்தல் ஆணையம் எந்த விலங்குகளை மட்டுமே தேர்தல் சின்னங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது?

🤗 யானை சிங்கம்


13) யானையை தேர்தல் சின்னமாக கொண்டுள்ள கட்சி எது ?

🤗 பகுஜன் சமாஜ் கட்சி


7ம் வகுப்பு முதல் பருவம் பொருளாதாரம்

பாடம் 1 #உற்பத்தி


1) நம் இந்தியாவில்____  

பொருளாதார நிலை

காணப்படுகிறது?

💢 கலப்பு பொருளாதாரம்


2) முதன்மை நிலை உற்பத்தியை எவ்வாறும் அழைப்பர் ?

💢 வேளாண்மைத் துறை உற்பத்தி


3) நமது நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில், பெரும்பங்கு வகிப்பவை?

💢 சேவைத் துறை (அ ) மூன்றாம் நிலை உற்பத்தி


4) “பொருளியலின் தந்தை” 

என அழைக்கப்படுபவர்?

💢 ஆடம் ஸ்மித்


5) "நாடுகளின் செல்வமும், அவற்றை

உருவாக்குகின்ற காரணிகளும் ஓர்

ஆய்வு” என்னும் நூலை ஆடம்ஸ்மித் வெளியிட்ட ஆண்டு?

💢 1776


6) வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன்கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு என உழைப்பிற்கு விளக்கம் கொடுத்தவர் ?

💢 ஆல்பிரட் மார்சல்


7) உற்பத்தியில் ____ என்பது ஓர்

செயற்படு காரணியாகும்.?

💢 உழைப்பு


8) _____ முறையை, ஆடம்ஸ்மித், 

தனது “நாடுகளின் செல்வமும்” அவற்றைஉருவாக்குகின்ற காரணிகளும், என்ற நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்?

💢 வேலை பகுப்பு முறை


9) “இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களேமூலதனம் ஆகும்.” என்றவர் ?

💢 மார்ஷல்


10) தற்காலத்தில், தொழில் முனைவோர், _____ என அழைக்கப்படுகிறார்.?

💢 சமுதாய மாற்றம் காணும் முகவர் 


11) நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, 

மூலப்பொருளையும், மூலப்பொருள் 

அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, 

ஒரு பொருளை உருவாக்கும் செயலே ___ ஆகும் ?

💢 உற்பத்தி


12) உற்பத்தியில் எத்தனை வகைகள் உள்ளன? அவை ?

💢 3/ முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தி.


13) பலஉற்பத்திக் காரணிகளை (நிலம், உழைப்பு, மூலதம்) ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் யார் ?

💢 தொழில் முனைவோர்


14) முதல்நிலைஉற்பத்திக்காரணிகளில்  ___&____ அடங்கும். ?

💢 நிலம் மற்றும் உழைப்பு


15)  வாணிகம், வங்கி, காப்பீடு, ஆகியவை எந்நிலை உற்பத்தியில் அடங்கும் ?

💢 மூன்றாம் நிலை உற்பத்தி


16) இயற்கையின் நன்கொடை ____

💢 நிலம்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY