Ads Right Header

TNPSC 2022 - Group 1&2&4 - 50+50 Questions....

 

1. போஸ் ஐன்ஸ்டீன் நிலை எப்போது உறுதி செய்யப்பட்டது?


A. 1996

B. 1994

C. 1995

D. 1999


2. கீழ்காணும் கூற்றுக்களில் சரியானதை குறிப்பிடுக


A. ஒரு துளி நீரில் 10^23 நீர் துகள்கள் அடங்கியுள்ளது

B. பேனாவால் வைக்கப்படும் ஒரு புள்ளியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இருக்கும்

C. பாரிசில் உள்ள படிதர மீட்டர் கம்பியின் நகல் சென்னையில் உள்ளது

D. மிதிவண்டி சக்கரம் நேர்கோட்டு இயக்கத்தில் செயல்படுகிறது


3. ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கத்தின் பெயர்?


A. கால ஒழுங்கு இயக்கம்

B. கால ஒழுங்கற்ற இயக்கம்

C. தற்சுழற்சி இயக்கம்

D. அதிர்வுறுதல் இயக்கம்


4. துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள ஈர உடைகளில் இருந்து நீரினை வெளியேற்றும் முறை எந்த தத்துவத்தில் செயல்படுகிறது?


A. மைய விலக்கு விசை

B. மைய நோக்கு விசை

C. எதிர்நோக்கு விசை

D. நேரெதிர் விசை


5. பாகற்காய் தாவரங்களில் எந்த பாகம் பற்று கம்பிகளாக மாறியுள்ளன?


A. சிற்றிலைகள்

B. கோணமொட்டு

C. இலையின் நுனிப்பகுதி

D. விளிம்புகள்


6. பல்லிகள் பெரும்பாலும் எந்த பகுதியில் வாழ்பவை?


A. வெப்பமண்டல பகுதி

B. துருவப்பகுதி

C. பாலைவன பகுதி

D. மலை பகுதி


7. பென்குவின் 0°C வெப்பநிலையில் எங்கு பராமரிக்க படுகின்றன?


A. ஜீராங் பறவைகள் பூங்கா

B. ரத்தன்பூர் பறவைகள் சரணாலயம்

C. கன்ஹா தேசிய பூங்கா

D. கார்பெட் தேசிய பூங்கா


8. ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக உள்ள கீரை வகை?


A. புளிச்ச கீரை

B. பொதினா கீரை

C. முருங்கை கீரை

D. கருவேப்பிலை கீரை


9. சரியான இணையை தேர்வு செய்யவும்


A. இருமை பார்வை பெற்ற உயிரினம்=கங்காரு

B. குளிர்கால உறக்கம்=நத்தை

C. கோடை கால உறக்கம்=ஆமை

D. அமீபா உணவை = நீரில் இருந்து பெரும்


10. சரியான இணையை தேர்வு செய்யவும்


A. உடலுக்கு பாதுகாப்பு அளிப்பது=தாது உப்புகள்

B. எலும்பின் மீது தோல் மூடி போல் உள்ளது=மராஸ்மஸ்

C. நரம்பு பலவீனம் உடல் சோர்வு ஏற்படுதல்=பெரி பெரி

D. மேற்கண்ட அனைத்தும் சரி

 


11. கீழ்காணும் கூற்றுக்களில் எது தவறு?


A. ரோபோட் என்ற வார்த்தை சீன மொழியில் இருந்து பெறப்பட்டது

B. ரோபோட் என்றால் உத்தரவிற்கு படிந்த ஊழியர் என்று பொருள்

C.பருப்பொருளின் மிகச்சிறிய துகள் அணு ஆகும்

D. குடிநீரில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தம் செய்யும் முறை எதிர் சவ்வூடு பரவல் ஆகும்


12. கீழ்காணும் கூற்றுக்களில் தவறானது?


A. வேரின் அடிப்பகுதியில் வேர்முடி காணப்படுகிறது

B. ஆணிவேர் தொகுப்பு இருவித்திலை தாவரங்களில் காணப்படுகிறது

C. திண்ம திரவங்களை பிரிக்க பயன்படும் முறை வண்டலாக்குதல் ஆகும்

D. உலகில் 28% நீர்வாழ் உயிரிடங்கள் உள்ளது


13. வேர்கள் எத்தகைய புவிநாட்டம் உடையவை?


A. நேர் புவி நாட்டம்

B. எதிர் புவி நாட்டம்

C. நேரெதிர் புவி நாட்டம்

D. கீழ் புவி நாட்டம்


14. பாஸ்பரஸ், இரும்பு சத்து குறைவால் ஏற்படும் நோய்?


A. ஆஸ்டியோ மலேசியா,

     இரத்தசோகை

B. இரத்தசோகை, அனிமியா

C. ரிக்கட்ஸ், ஸ்கர்வி

D. அனிமியா, இரத்தசோகை


15. கீழ்காணும் கூற்றுக்களை சரியானதை தேர்ந்தெடு


A. தொடுதலின் அடிப்படையில் விசையின் வகை இரண்டு

B. இயக்கத்தின் வகைகள் நான்கு

C. தேசிய இயற்பியல் ஆய்வகம் டெல்லி

D. அனைத்தும் சரி


16.  நமது உடலின் சராசரி வெப்பநிலை ?


A. 27 டிகிரி செல்சியஸ்

B. 36 டிகிரி செல்சியஸ்

C. 37 டிகிரி செல்சியஸ்

D. 39 டிகிரி செல்சியஸ்


17. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை

ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு ___ ஆகும்?


A. சென்டிகிரேட்

B. ஜுல்

C. செல்சியஸ்

D. கலோரி


18. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் எது?


A. மின்கலன்

B. மின்மாற்றி

C. சூரிய மின்கலன்

D. தொலைகாட்சி


19. கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே____ எனப்படும்?


A. மின்சுற்று

B. மின்னோட்டம்

C. மின்னூட்டம்

D. மின்னாற்றல்


20. பொருத்துக

1. இயற்கையான மாற்றம் - இரப்பர் வளையத்தினை இழுத்தல்

2. விரும்பத்தகாத மாற்றம் - வெள்ளி ஆபரணம் கருமையாதல் 

3. விரும்பத்தக்க மாற்றம் - மழைபெய்தல் 

4. வேதியியல் மாற்றம் - பழம் அழுகுதல்

5. இயற்பியல் மாற்றம் - பால் தயிராதல்


A. 34251

B. 35412  

C. 34521

D. 35241


21. பனிக்கட்டி உருகுதல் என்பது எவ்வகை மாற்றத்திற்கு எ.கா?


A. மீள் மாற்றம்

B. மீளா மாற்றம்

C. இயற்பியல் மாற்றம்

D. வேதியியல் மாற்றம்


22. வளிமண்டலத்தின் எவ்வடுக்கில் ஓசோன் படலம் அமைந்துள்ளது ?


A. இடைவெளி மண்டலம்

B. புறவெளி மண்டலம்

C. அடுக்கு வெளி மண்டலம்

D. அயனி மண்டலம்


23. _____ வாயு சுண்ணாம்பு நீரை 

பால் போல் மாற்றும்?


A. ஆக்ஸிஜன்

B. நைட்ரஜன்

C. கார்பன் டை ஆக்ஸைடு

D. ஹைட்ரஜன்


24. நாம் சுவாசித்து வெளியேற்றும் காற்றில் எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் இருக்கும் ?


A. 16%

B. 18%

C. 21%

D. 0.01%


25. “காற்று என்பது ஒரு அடிப்படைப் பொருள் அல்ல; ஆனால் அது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை” என்பதைச் சோதனை மூலம் 

நிரூபித்தவர் ?


A. ஆண்டனி லவாய்சியர்

B. டேனியல் ரூதர்போர்டு

C. ஜோசப் பிரிஸ்ட்லி

D. ஜான் இன்ஜென்ஹவுஸ்


26. செல்லின் சேமிப்பு கிடங்கு என அழைக்கப்படுவது........


A. சென்டிரியோல்

B. நுண்குமிழ்கள்

C. உட்கரு(நியூக்ளியஸ்)

D. சைட்டோபிளாசம்


27. யூகேரியாட்டிக் செல்லின் அளவு ...... விட்டம் உடையது


A. 1 முதல் 2 மைக்ரான்

B. 10 முதல் 50 மிமீ

C. 1 முதல் 100 மைக்ரான் 

D. 10 முதல் 100 மைக்ரான்


28. பொருத்துக

1.பிட்யூட்டரி- கழுத்து

2.கணையம்-சிறுநீரகத்தின் மேல்

3.தைராய்டு-மார்புக் கூடு

4.தைமஸ் - மூளை அடிப்பகுதி

5.அட்ரினல்- வயிறு 


A. 45132

B. 45312  

C. 45231

D. 35241


29. மூளையில் ....... தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் ?


A. எண்ணற்றவை

B. 110 மில்லியன் 

C. 100 மில்லியன்

D. 1000 மில்லியன்


30. மனித இரத்த ஒட்ட மண்டலம் கடத்தும்  பொருள்கள்?


A. ஆக்ஸிஜன் 

B. சத்து பொருள்கள் 

C. ஹார்மோன்கள்

D. இவை அனைத்தும்


31. காந்த தன்மை உள்ள தனிமங்களில் தவறானது?


A. இரும்பு 

B. கோபால்ட்

C. நிக்கல்

D. காப்பர்


32. எத்தனை ஆண்டுகளுக்கு 

முன்பு சீனர்கள் காந்த கற்களைக் கட்டி 

தொங்கவிட்டால், அவை வடக்கு – தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர்?


A. 900

B. 600

C. 800

D. 1000


33. மின்காந்த தொடர் வண்டிகள் தண்டவாளத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படுகின்றன?


A. 10 மீ

B. 10 செ.மீ

C. 5 மீ

D. 3 செ.மீ


34. பொருத்துக (மனித உடலில் உள்ள நீரின் அளவு)

1. இரத்தம் - 94%

2. இதயம் - 75%

3. மூளை - 80%

4. நீணநீர் - 83%

5. நுரையீரல் - 79%


A. 54123

B. 12345  

C. 45213

D. 54231


35. நன்னீரில் எத்தனை சதவீத உப்புகள் கரைந்துள்ளது?


A. 0.3%

B. 0.5% - 1%

C. 0.05% - 0.1%

D. 0.05% - 1%


36. கூற்று : பனிக்காலங்களில் , 

குளிர்ந்த நாடுகளில் ஏரிகள் மற்றும் குளங்கள் குளிர்ச்சியடைந்து நீரின் மேற்பரப்பில் பனிப்படலங்கள் உருவாகின்ற போதும் அதில் வசிக்கும் நீர்வாழ் விலங்குகள் இறப்பதில்லை

காரணம் : ஏனெனில் மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப் 

படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதனை தடுப்பதில்லை.


A. கூற்று காரணம் இரண்டும் சரி

B. கூற்று சரி, காரணம் தவறு

C. கூற்று தவறு, காரணம் சரி

D. கூற்று காரணம் இரண்டும் தவறு


37. ELEMENTS OF CHEMISTRY என்னும் புத்தகத்தை லவாய்சியர் வெளியிட்ட ஆண்டு?


A. 1779

B. 1879

C. 1789

D. 1989


38. வேதியியலாளர் எதனை இயற்கை நிறங்காட்டி என அழைக்கின்றனர்?


A. மஞ்சள்

B. பீட்ரூட்

C. மலர்கள்

D. மிளகாய்


39. வெங்காயத்தினை நறுக்கும் போது நம்மில் பலருக்கும் கண்களில் எரிச்சலுடன் கண்ணீர் வருவதற்கு காரணமான வேதிப்பொருள் எது?


A. புரோபைல் தயால் S ஆக்ஸின்

B. புரோபைல் தயால் S ஆக்ஸைடு

C. புரோபேன் தயால்  S ஆக்ஸின்

D. புரோப்பேன் தயால் S ஆக்ஸைடு


40. பொருத்துக

1. சோப்பு - C6H5 OH 

2. சிமெண்ட் - CaSO4.2H2O

3. உரங்கள் - NaOH 

4. ஜிப்சம் - RCC 

5. பீனால் - NPK


A. 34521

B. 35412  

C. 34251  

D. 35241


41. எப்சத்தின் பயன்களில் தவறானது ;


A. மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கவும் அமைதிப்படுத்தவும் பயன்படுகிறது.

B. அறுவைச் சிகிச்சையில் எழும்பு முறிவுகளைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.

C. தோல்நோய் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகிறது.

D. விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.


42. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு ?


A. 1.69 kg

B. 0.45 kg

C. 0.63kg

D. 2.58 kg


43. உலக உணவு தினம் என்று கொண்டாடப்படுகிறது?


A. அக்டோபர் 16

B. செப்டம்பர் 16

C. செப்டம்பர் 15

D. அக்டோபர் 15


44. CDRI எங்கு அமைந்துள்ளது மற்றும் இதற்கு சரியான விரிவாக்கம் த௫க ?


A. Lucknow – Coalition for Disaster Resilient Infrastructure

B. Calcutta - Coalition for Disaster Resilient Infrastructure

C. Lucknow – Central Drug Research 

Institute 

D. Calcutta – Central Drug Research 

Institute 


45. கூற்று 1 : வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியாவினை இந்திய விஞ்ஞானிகள் 

உருவாக்கியுள்ளனர்.

கூற்று 2 : வேப்ப எண்ணெய் பூசப்பட்ட  யூரியா நைட்ரஜனை

விரைவாக வெளியிடுவதால் தாவரங்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன.


A. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

B.  கூற்று 1 சரி,  கூற்று 2 தவறு

C.  கூற்று 1 மற்றும் 2 தவறு

D. கூற்று 1 மற்றும் 2  சரி


46. ரூதர்போர்ட் தனது கொள்கையை வெளியிட்ட ஆண்டு


A. 1803

B. 1911

C. 1913

D. 1904


47. ஓர் ஆண்டில் உள்ள மொத்த வினாடிகளில் எண்ணிக்கை


A. 3.153x10^8 வினாடிகள்

B. 3.153x10^-8 வினாடிகள்

C. 315.3x10^-7 வினாடிகள்

D. 3.153x10^7 வினாடிகள்


48. கீழ்க்கண்டவற்றுள் எவை ஈரணு மூலக்கூறுகள் ஆகும்


A. சல்பர்

B. கார்பன் டை ஆக்சைடு

C. நைட்ரிக் ஆக்சைடு

D. பாஸ்பரஸ்


49. பொருள் லேசான அல்லது கனமான தான் என்பதனைத் தீர்மானிக்கும் அமைப்பு_____ எனப்படும்.


A. நிறை

B. அடர்த்தி

C. பருமன்

D. அழுத்தம்


50. ஓர் வானியல் அலகு 


A.9.46x10^15மீ

B.149.6x10^11மீ

C.1.496x10^11மீ

D.149.6x10^6மீ


51. கூற்று: விளக்கெண்ணையில் ஒரு துளி நீரை விடும்போது நீர்த்துளி மூழ்கும். ஆனால் நீரில் ஒரு துளி விளக்கெண்ணெய் இடும்பொழுது அது மிதந்து நீரின் மீது ஒரு படலத்தை உருவாக்கும்.


காரணம்: விளக்கெண்ணெய் நீருடன் ஒப்பிடும் போது குறைவான அடர்த்தி கொண்டது.


A. கூற்று சரி காரணம் தவறு

B. கூற்று தவறு காரணம் சரி

C. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு


52. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு

1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

2. எலக்ட்ரான்கள் எதிர் மின்சுமை கொண்டது.

3. ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மை கொண்டிருக்கும்.

4. ஓர் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை தனிமத்தின் நிறை எண் ஆகும்.


A. 2 மற்றும் 3 சரி

B. 1, 2 மற்றும் 4 சரி

C. 1, 3 மற்றும் 4 சரி

D. அனைத்தும் சரி


53. பொருத்துக

அ. ராபீஸ்  - சால்மோனெல்லா

ஆ. காலரா - மஞ்சள் நிற சிறுநீர்

இ. காசநோய் - கால் தசை

ஈ. ஹெபடைடிஸ் - ஹைட்ரோ போபியா

உ. டைபாய்டு   -மைக்கோபாக்டீரியம்


    அ ஆ இ ஈ உ

A.  4  2  5  3  1

B.  4  3  5  2  1

C.  5  4  2  1  3

D.  3  4  5  1  2


54. இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது.


A. பூஞ்சை

B. வைரஸ்

C. பாசிகள்

D. பிரையோபில்லம்


55. கீழ்கண்டவற்றுள் ரேபீஸ் நோயுடன் தொடர்புடைய விலங்கு எது?


A. குரங்கு

B. முயல்

C. A மற்றும் B

D. இவற்றில் ஏதுமில்லை


56. பிரகாசமான வண்ணத்துடன் பூச்சிகளை மகரந்த சேர்க்கைக்கு கவர்ந்திழுக்கும் மலரின் பாகம் எது?


A. அல்லி இதழ்

B. புல்லி இதழ்

C. சூலகம்

D. மகரந்தத் தாள்


57. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் அலோகம்.


A. பாதரசம்

B. நிக்கல்

C. புரோமின்

D. தங்கம்


58. ஒர் அணுவின் சராசரி விட்டம்


A. 1x10^9கிமீ

B. 1x10^-9செ.மீ

C. 1x10^9மீ

D. 1x10^-9மீ


59. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்க பின்வருவனவற்றுள் எம்முறையை பின்பற்றலாம்

1. பொருளின் உயரத்தை குறைத்தல்

2. ஈர்ப்பு மையத்தின் உயரத்தை குறைத்தல்

3. பொருளின் அடி பரப்பை அதிகரித்தல்

4. ஈர்ப்பு மையத்தின் உயரத்தை அதிகரித்தல்


A.1, 2 மற்றும் 3 சரி

B. 2 மற்றும் 3 சரி

C. 2 மட்டும் சரி

D. 3 மட்டும் சரி


60. ஒரு நேர்கோட்டுப் பாதையில் 8 மீட்டர்/ வினாடி என்ற திசை வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பந்தானது 10 விநாடியில் 2 மீட்டர் / வினாடி என்ற திசைவேகத்தை அடைகிறது எனில் அப்பொருள் பெரும் எதிர் முடுக்கம் ?


A. 0.6 மீ/வி^2

B. 6 மீ/வி^2

C. -0.6 மீ/வி^2

D. -0.06 மீ/வி^2


61. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. ஒ௫ நற்கடத்தியானது குறைந்த எண்ணிக்கையிலான கட்டுறா எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

2. மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர்மின் முனையையும் குறுகிய கோடானது எதிர்மின் முனையையும் குறிக்கும்.

3. பக்க இணைப்பில் மின்விளக்குகள் குறைந்த பிரகாசத்துடன் ஒளிரும் (ம) மின்விளக்குகள் மின்திறனை பகிர்ந்துகொள்ளும்.

4. இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிக அதிகமான மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று குறுக்கு மின்சுற்று ஆகும்.


A. 1,2,3,4 சரி

B. 1,3,4 தவறு

C. 1,4 மட்டும் சரி

D. 2,3,4 சரி


62. தவறான இணையைக் கண்டறிக.

1. திண்மத்தில் இருந்து திரவத்திற்கு மாறுவது - உருகுதல்

2. திரவத்தில் இருந்து வாயு நிலைக்கு

மாற்றமடைவது - ஆவி சுருங்குதல்

3. திரவத்தில் இருந்து திண்ம நிலைக்கு மாற்றம் அடைவது - உறைதல்

4. திரவத்திலிருந்து வாயுவிற்கு மாற்றமடைவது - பதங்கமாதல்

5. கொதித்தல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.


A. 4 மட்டும்

B. 4,5 மட்டும்

C. 2,4 மட்டும்

D. 1,3,5 மட்டும்


63. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. நொதித்தல் என்பது சர்க்கரைக் கரைசல் ஆல்கஹால் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடாக மாறுவதாகும்.

2. காற்றுள்ள சூழ்நிலையில் ஈஸ்ட் முன்னிலையில் நடைபெறும் நிகழ்வே நொதித்தல் எனக் கூறியவர் - லூயிஸ் பாஸ்டியர்.

3. சமையல் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் ஆகும்.

4. தாவர எண்ணெய்களில் நைட்ரஜன் சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாகும் வினையில் நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம் வினையூக்கியாகப் பயன்படுகிறது.


A. 2,4 தவறு

B. 1,2,3,4 சரி

C. 1,2,3 சரி

D. 1,4 தவறு


64. செல்களுக்கு அடினோசின் ட்ரை பாஸ்பேட் என்ற மூலக்கூறினை வழங்கும் செல் சுவாச உறுப்பு எது?


A. சென்ட்ரியோல்

B. ரிபோசோம்

C. மைட்டோகாண்ட்ரியா

D. சைட்டோபிளாசம்


65. பின்வருவனவற்றில் தவறான கூற்று எது?


1. உட்கரு அற்று காணப்படும் இரத்த சிவப்பு செல்கள் ஒரு நாளில் இரண்டு மில்லியன் என்ற அளவில் இறக்கின்றன.

2. மென்மையான எண்டோபிளாச வலைபின்னல் ரைபோசோம்களுடன் இணைந்து இருப்பதால் புரதச் சேர்க்கைக்கு உதவுகிறது.

3. கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதிலும் கடத்தலிலும் கோல்கை உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

4. உட்கரு மற்றும் செல் சவ்வின் உள்ளே காணப்படும் அனைத்தும் சேர்ந்து சைட்டோபிளாசம் எனப்படும்.


A. 1,2,3,4

B. 2,4 மட்டும்

C. 1,3 மட்டும்

D. எதுவுமில்லை


66. பொருத்துக

1. எக்கைனோ

    டெர்மேட்டா          -  அ)கணுக்காலிகள்

2. மொலஸ்கா         - ஆ)மெல்லுடலிகள்

3. ஆர்த்ரோபோடா - இ) தட்டைப் புழுக்கள்

4. பிளாட்டிஹெல்

                  மின்தஸ்  - ஈ) முட்தோலிகள்


A. 1-ஈ  2-ஆ 3-அ 4-இ

B. 1-ஆ 2-இ 3-ஈ 4-அ

C. 1-ஆ 2-அ 3-ஈ 4-இ

D. 1-இ 2-ஆ 3-அ 4-ஈ


67. கூற்று 1 :

நிலத்தில் முதன்முதலில் தோன்றிய நிலவாழ்த் தாவரங்களான பெரணிகள் நிழலான, ஈரப்பதம் மிகுந்த குளிர்ந்த பகுதிகளில் வாழ்பவை. (எ.கா காரா)

கூற்று 2 :

ஜிம்னோஸ்பெர்ம்கள் திறந்த விதைகளை உடையவை மற்றும் கனிகளை உண்டாக்குவதில்லை.

கூற்று 3 :

தற்காலத்தில் வாழும் தாவரங்களில் மிகவும் மேம்பாடு அடைந்த தாவரங்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் ஆகும்.

கூற்று 4 :

அனைத்து புரோகேரியாட்டு உயிரினங்களும் மொனிரா உலகத்தில் அடங்கும்.


A. கூற்று 1 தவறு

B. கூற்று 2 தவறு

C. கூற்று 3 தவறு

D. கூற்று 4 தவறு


68. மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச அளவீடு என்ன?


A. 35° C

B. 37° C

C. 36 °C

D. 34 ° C

E. மேற்கண்ட எதுவுமில்லை.


69. தவறான கூற்றைத் தேர்க.

1. உட்கருவுக்கு அருகிலேயே காணப்படும் சென்ட்ரியோல்கள் விலங்கு செல்களில் மட்டுமே  காணப்படுகின்றன.

2. செல்லின் முதன்மையான செரிமான பகுதியான லைசோசோம்கள் செல்லிற்கு வெளியே சிதைவடைகின்றன.

3. ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுவதே காய் கனியாவதற்கான இரகசியமாகும்.

4. சூரிய ஆற்றலில் இருந்து உணவு தயாரிக்கக்கூடிய ஒரே நுண்ணுறுப்பான பசுங்கணிகத்தில் பச்சையம் எனும் நிறமி காணப்படுகிறது.


A. 1

B. 4

C. 2

D. 3


70. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.

1. விலங்கு செல்களில் செல்சுவர் காணப்படுவது இல்லை.

2. ஐந்துலக வகைப்பாடு 1969 இல் RH.விட்டேக்கர் என்பவரால் முன்மொழியப்பட்டது.

3. ஐந்துலக வகைப்பாட்டில் வைரஸ்கள் முறையான முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

4. இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்திய கரோலஸ் லின்னேயஸ் நவீன வகைப்பாட்டியலின் தந்தை எனப்படுகிறார்.


A. 2,3,4 சரி

B. 1,2,3,4 சரி

C. 1,3,4 சரி

D. 1,4,3 சரி


71. கீழ்கண்டவற்றில் தவறான கூற்று எது?


A. மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு அதிகமாகும்.

B. சிக்மா என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படும் மின்கடத்துத்திறனின் அலகு சீமென்ஸ்/ மீட்டர்.

C. மின்னழுத்த வேறுபாடு (V) இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும்.

D. முதன்மை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.

E. மேற்கண்ட எதுவும் இல்லை


72. 32°F என்பது?


A. நீரின் கொதிநிலை

B. நீரின் உறைநிலை

C. மனித உடலின் சராசரி வெப்பநிலை

D. தனிச்சுழி வெப்பநிலை


73. தவறான கூற்றைத் தேர்க.

1. அம்மோனியம் குளோரைடு ஒரு பதங்கமடையும் சேர்மமாகும்.

2. எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் காணப்படுகிறது

3. மெக்னிசியம் நாடா எரிதல் ஒரு வெப்ப உமிழ்தல் மாற்றமாகும்.

4. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பின், துருப்பிடித்தல் விரைவாகவே நடக்கும்.


A. 2 

B. 1,3

C. 3,4

D. எதுவுமில்லை


74. உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாப்பவை எவை?


A. தசை செல்கள்

B. நரம்பு செல்கள்

C. இரத்த சிவப்பு செல்கள்

D. எபிதீலிய செல்கள்


75. தவறான இணை எது?


A. அல்லியம் சட்டைவம் - வெங்காயம்.

B. அசாடிரேக்டா இண்டிகா - வேப்ப மரம்

C. காக்கஸ் நியுசீபெரா - தேங்காய்

D. கொலம்பா லிவியா - எலி

E. மேற்கண்ட எதுவுமில்லை.


76. உலக ORS (oral rehydration salts) தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


A. ஜூலை 9

B. ஜூலை 29

C. ஜூன் 9

D. ஜனவரி 29


77. உயர்ந்த ரக புரதத்தை கொண்டுள்ள முட்டையின் எடை எவ்வளவு இருக்கும்?


A. 25 கிராம்

B. 10 கிராம்

C. 6 கிராம்

D. 18 கிராம்


78. சங்க இலக்கியங்களில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்னும் அரசரைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்ட புறநானூற்றுப்  பாடல் எது?


A. 56

B. 65

C. 44

D. 39


79. நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்பவெப்பநிலை மற்றும் மாற்றம் சார்ந்த அமைச்சகம் விலங்குகளை துன்புறுத்துவதில் இருந்து பாதுகாக்க நான்கு புதிய சட்டங்களை எப்போது இயற்றியது?


A. 1992

B. 1993

C. 1960

D. 1970


80. வியாழன் கிரகம் எப்போது தன்னுடைய சுற்றுப்பாதை திசையை மாற்றிக்கொண்டது?


A. மார்ச் 9 2018

B. ஜூன் 28 2018

C. ஆகஸ்ட் 28 2017

D. ஜூலை 11 2018


81. மனித உடலில் நோய்த் தொற்று ஏற்பட்ட உடன் நோய் எதிர்ப்பு அமைப்பு வெளியிடும் வேதிப்பொருளின் பெயர் என்ன?


A. பைரோஜன்

B. சிமெடிடின்

C. டைக்ளோ பினாக்

D. கோடீன்


82. ரெசின் குறியீடு எண் #6 என்பதைக் குறிக்கும் பிளாஸ்டிக்கில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருளின் பெயர் என்ன?


A. ஸ்டைரீன்

B. எத்திலின் 

டெரிப்தாலேட்

C. பாலி லாக்டிக் அமிலம்

D. சோடியம் கார்பனேட்


83. பொருத்துக?


1.சால்மோனெல்லாசிஸ் - பலவீனம்

2.ரானிகெட் நோய் - கேப்ரினே

3.ஆஸ்பரஜில்லஸ் - அம்மை நோய்

4. கம்பளி - வயிற்றுப்போக்கு


A. 4 3 1 2

B. 14 3 2

C. 3 4 2 1

D. 4 3 2 1


84. கீழ்காணும் கூற்றுகளில் தவறானதைக் காண்?


1. தேய்பிறையானது நள்ளிரவிலும் வளர்பிறையானது நடுப்பகலிலும் தோன்றும்.


2. இன்று நிலவு, அஸ்வினி நட்சத்திரத்தின் அருகில் இருந்தால் 27 நாட்கள் கழித்து அது பரணி நட்சத்திரத்தின் அருகே வரும்.


3. தொலைநோக்கியை கலிலியோ கண்டுபிடித்து இருந்தாலும் அதை முதன் முறையாக வானத்தை ஆய்வு செய்ய  பயன்படுத்தியவர் ஹான்ஸ் லிப்பர்ஷே.


4. வெள்ளி கிரகம் கிப்பஸ் வடிவத்தில் சிறியதாகவும் பிறை வடிவத்தில் பல மடங்கு பெரியதாகவும் காணப்படும்.


A. 1 2 4 தவறு

B. 1 3 4 தவறு

C. 2 3 தவறு

D. 1 4 தவறு


85. பொருத்துக

(சுடர் சோதனை)


1.ஊதா சுடர் - லித்தியம் உப்பு

2.பச்சை சுடர் - போராக்ஸ் பவுடர்

3.ஆரஞ்சு சுடர் - சமையல் உப்பு

4.நீலச் சுடர் - ப்ளீச்சிங் பவுடர்

5.மஞ்சள் சுடர் - கால்சியம் குளோரைடு


A. 5 4 1 2 3

B. 1 2 3 4 5

C. 5 1 4 3 2

D. 4 3 1 2 5


86. கூற்றை அறிந்து சரியானதைத் தேர்வு செய்க?


1.மல்பெரி இலையை உணவாக உண்ணும் பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு இழைகள் பெறப்படுகிறது.


2.பட்டுப்பூச்சி வளர்ப்பு முறைக்கு எபிகல்சர் என்று பெயர்.


3.முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் 5000 முட்டைகளை இடும்.


4.பட்டுபூச்சியின் லார்வாக்கள் 35 நாட்கள் மல்பெரி இலைகளை உணவாக உட்கொள்ளும்.


A. 1 4 தவறு

B. 2 3 தவறு

C. 1 3 4 சரி

D. அனைத்தும் சரி


87. இஸ்ரோ எந்த ஆண்டு ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது?


A. 2008 அக்டோபர் 22

B. 2014 செப்டம்பர் 24

C. 2016 ஜூன் 18

D. 2017 பிப்ரவரி 15


88. ஹிஸ்டாமைன் என்பது என்ன?


A. நிமோனியா

B. காலரா

C. ஒவ்வாமை

D. புற்றுநோய்


89. பச்சை நிற கண்ணாடி உருவாக்க சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் என்னென்ன?


A. இரும்பு, போரான்

B. சிலி்கான், குரோமியம்

C. நிக்கல், ஈய ஆக்ஸைடு

D. இரும்பு , குரோமியம்


90. அப்துல் கலாம் அவர்கள் 1980 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய துணைக்கோளின் பெயர் என்ன?


A. SLV - 3

B. INSAT - 3

C. ரோகினி - 1

D. ஆகாஷ் - 1


91. ₹1600ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்துகொடுத்தால், Bக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு ?


A.  480 ரூ

B.  800 ரூ

C.  200 ரூ

D.  1000 ரூ


92. சுருக்குக.100 + 8 ÷ 2 + {(3 X 2) - 6 ÷ 2 }


A. 109

B. 107

C. 117

D. 212


93. பரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ₹50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ₹100 இலாபம் பெறுகிறார் . குறித்த விலை₹800 எனில் சட்டையின் அடக்கவிலை .......


A. 650

B. 600

C. 700

D. 450


94. சங்கர், சுரேஷ், மற்றும் தமிழ் ஆகியோர் ஒரு வட்டவடிவிலான ஒடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15, மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாக சுற்றத்தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்


A. 8.00 PM

B. 8.20 PM

C. 7.50 PM

D. 8.00 AM


95.  60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்


A. 12 நாட்கள்

B. 8 நாட்கள்

C. 10 நாட்கள்

D. 13 நாட்கள்


96. மேகலா, கலா மற்றும் அமுதா வாங்கிய தர்பூசணி பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி , 13.52 கி.கி. மற்றும் 13.56 கி.கி  எனில் எவர் குறைவான எடை கொண்ட தர்பூசணி பழத்தை வாங்கியவர்?


A. மேகலா

B. கலா

C. அமுதா

D. ஆப்சன் சும்மா😊


97.  கடிகாரத்தில் 56 மி.மீ. நீளமுள்ள வினாடி முள்ளின் முனை ஒரு நிமிடத்தில் கடக்கும் தொலைவு.....


A. 360 மி.மீ.

B. 356 மி.மீ

C. 352 மி.மீ

D. 180 மி.மீ


98. 10 மதிப்புக்களின் கூட்டுச்சராசரி 22 என கண்டறியப்பட்டது. மேலும் ஒரு புதிய மதிப்பு 44 ஐ அந்த மதிப்புடன் சேர்த்தால், புதிய சராசரி என்னவாக இருக்கும்.


A. 28

B. 24

C. 30

D. 25


99.  ஆண்டுக்கு 13% வட்டிவீதத்தில்  ஒரு தொகை ₹16,500 லிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹22,935 ஆக உயரும்


A. 2 வருடம்

B. 3 வருடம்

C. 2 வருடம் 6 மாதம்

D. 2 வருடம் 4 மாதம்


100. வட்ட வடிவ மட்டைப்பந்துத் திடலின் ஆரம் 76 மீ. அந்த திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் அமைக்க வேண்டியிருந்தது . ஒரு சதுர மீட்டருக்கு ₹180 வீதம் செலவானால் , அந்த வடிகால் அமைக்கத் தேவையான மொத்தத் தொகையைக் காண்க


A. ரூ 1, 76, 240

B. ரூ.1,74,260

C. ரூ 1, 74,240

D. ரூ 1, 75,000.

விடைகள் காண

இங்கே சொடுக்கவும்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY