Ads Right Header

6th & 7th - Maths and Social Science QA...

 


Thanks to Effort - Tnpsc Team

 6 (ம) 7வது சமுக அறிவியல்    

                           மற்றும்

                   6 (ம) 7வது கணிதம்


🔹கேள்விகள் தயாரிப்பு  - தமிழ், Nataraj Natarajan, Mohamed Sikkandar Sait, Manikandan, Rajadurai, Veera, Sugumar JP


🔹தேர்வு நாள்  - 13.09.2020


                          

                                

 1. கண்டங்களை மக்கள் தொகை அடிப்படையில் ஏறுவரிசையில் குறிக்கும் போது நான்காம் இடம் பிடிக்கும் கண்டம் எது?


A. ஐரோப்பா✅

B. வட அமெரிக்கா

C. ஆஸ்திரேலியா

D. ஆப்பிரிக்கா


➠விளக்கம்

ஏறுவரிசை என்பதால்

1.ஆஸ்திரேலியா

2.தென் அமெரிக்கா

3.வட அமெரிக்கா

4.ஐரோப்பா

5.ஆப்பிரிக்கா

6.ஆசியா

(அண்டார்டிகா வராது)


2. பூம்புகார் நகர வாழ்வினை சிலப்பதிகாரத்தில் எக்காண்டத்தினை வாசித்து அறியலாம்?


A. மதுரை காண்டம்

B. புகார் காண்டம்✅

C. வஞ்சி காண்டம்

D. சுந்தர காண்டம்


3. குஜராத் மாநிலத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட தந்தத்தினால் ஆன அளவுகோல் எவ்வளவு வரையிலான சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது?


A. 1704 மிமீ✅

B. 1504 மிமீ

C. 1604 மிமீ

D. 1804 மிமீ


4.கூற்றைக் அறிந்து சரியானதைக் காண் :-


I.வெள்ளியின் சுற்றுதல் காலம் 224.7 நாட்களாகும்


II.சனியின் சுழலுதல் காலம் 16 மணி 3 நிமிடங்கள்


III.நெப்டியூன் சூரியனிடமிருந்து உள்ள தூரம் 2872.5 மில்லியன் கிலோமீட்டர்


IV.வியாழனின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 62


A. II, III சரி

B. I, II, IV சரி

C. I, III சரி

D. I மட்டும் சரி✅


➠விளக்கம்

2.சனி சுழலுதல் காலம் 24 மணி 14 நிமிடங்கள்

3.நெப்டியூன் சூரியனிடமிருந்து 4495.1 மி.கிமீ தொலைவில் உள்ளது

4.வியாழனின் துணைக்கோள்கள் 67


5. பக்தி இலக்கியங்களுள் தவறானதைக் காண்:-


A. தேவாரம்

B. திருவாசகம்

C. இராமாயணம்✅

D. நாலாயிர திவ்விய பிரபந்தம்


6. பொருத்துக:-

(2011 எழுத்தறிவு விகிதம்)


அ. நீலகிரி            - 90.18%

ஆ. விழுப்புரம்     - 71.46%

இ. சென்னை       - 71.88%

ஈ. கிருஷ்ணகிரி  - 85.20%


     அ ஆ இ ஈ

A.  4   3   2   1

B.  1   2   4   3

C.  4   3   1   2✅

D.  2   4   1   3


7. பாகிஸ்தானில் காணப்படும் தமிழ்பெயர் கொண்ட ஆறுகளின் பெயர்களில் சரியானதைக் காண்?


A. காவ்ரி

B. பொருன்ஸ்

C. பொருனை✅

D. பொதினே


8. தென்னிந்திய நடனங்களில் தவறானதைக் காண்?


A. யாஷ்கானம்

B. குச்சுப்பிடி

C. பரதநாட்டியம்

D. சத்ரியா✅


➠விளக்கம்

சத்ரியா அசாம் மாநில நடனம்


9. பொருத்துக:-


அ. பசிபிக் பெருங்கடல்  - ரீயூனியன், மொரீசியஸ்

ஆ. தென் பெருங்கடல் - நவோயா செமல்யா

இ. அட்லாண்டிக் பெருங்கடல் - பிலிப்பைன்ஸ், ஹவாய்

ஈ. இந்தியப் பெருங்கடல் - ஹெலனா, பாக்லாந்து

உ. ஆர்டிக் பெருங்கடல் - பெளமன், ஹார்ட்ஸ்


    அ ஆ இ ஈ உ

A. 3   5   4  1  2✅

B. 1   5   2  4  3

C. 2   4   1  3  5

D. 3   1   2  5  4


10. லோத்தல் எந்த நதியின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ?


A. சபர்மதி✅

B. ஷன்மதி

C. நர்மதை

D. பாகிரதி


11. சரியானதைக் காண்:-


1.ஹோமோ எரக்டஸ்  - நெருப்பின் பயனை அறிந்தவன்

2.குரோமேக்னான்ஸ் - குத்தீட்டி, நெம்புகோல்

3.ஆஸ்ட்ரோபிதிகஸ் - நடக்கக் கற்றுக் கொள்ளல்

4.நியாண்டர்தால் - இறந்தவர்களை புதைத்தல்


A. 1 2 4 சரி

B. 2 3 4 சரி

C. 1 4 சரி

D. அனைத்தும் சரி✅


12.பொருத்துக-(கற்கருவிகள்):-


அ. வெண்கலக் காலம் - ஹல்லூர்

ஆ. புதிய கற்காலம் - ஷான் ஷாகி பள்ளத்தாக்கு

இ. பழைய கற்காலம் - சிரண்ட்

ஈ. இரும்புக் காலம் - லோத்தல்


    அ ஆ இ ஈ

A. 4   1   2   3

B. 4   3   2   1✅

C. 4   2   3   1

D. 4   1   3   2


13.தவறானதைக் காண்க:-


1.தொண்டை நாடு காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளைக் கொண்டது


2.பாண்டியநாடு புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளைக் கொண்டது


3.சேரநாடு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, கர்நாடகத்தின் சில பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டது


4.சோழநாடு தஞ்சாவூர், நாகை, திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளைக் கொண்டது


A. அனைத்தும் தவறு

B. 1 2 4 தவறு

C. 2 4 மட்டும் தவறு

D. 2 3 4 தவறு✅


➠விளக்கம்

2.புதுக்கோட்டை சோழநாடு

3.கர்நாடகா தவறு கேரளா சரி

4.கரூர் சேர நாடு


14. பெருங்கடல்களை

அவற்றின் பரப்பளவு அடிப்படையில் ஏறுவரிசையில் அமைத்தால் இரண்டாவதாக உள்ள பெருங்கடல் எது?


A. ஆர்டிக் பெருங்கடல்

B. அட்லாண்டிக் பெருங்கடல்

C. தென் பெருங்கடல்✅

D. இந்தியப் பெருங்கடல்


➠விளக்கம்

ஏறுவரிசை

1.ஆர்டிக் - 15.56 மி ச.கிமீ

2.தென் பெருங்கடல் - 21.96 மி ச.கிமீ

3.இந்தியப் பெருங்கடல் - 70.56 மி ச.கிமீ

4.அட்லாண்டிக் - 85.13 மி ச.கிமீ

5.பசிபிக் - 168.72 மி ச.கிமீ


15. சென்னை மெரினா கடற்கரை எந்த வகையான நிலத்தோற்றத்தைச் சார்ந்தது?


A. முதல் நிலை நிலத்தோற்றங்கள்

B. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்

C. மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்✅

D. பீடபூமிகள் மற்றும் சமவெளிகள்


16. அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த சட்ட  வல்லுனர்களில் தவறானவர்


A. மாதவராவ்

B. அல்லாடி கிருஷ்ணசாமி

C. பட்டாச்சார்யா✅

D. சையது முகமது சாதுல்லா


17. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் வேலைகள் என்றிலிருந்து தொடங்கியது


A. 1946 டிசம்பர் 6

B. 1947 டிசம்பர் 9

C. 1947 ஆகஸ்ட் 15

D. 1946 டிசம்பர் 9✅


18. இந்திய தேசிய கொடியில் அமைந்துள்ள (கருநீல நிற) அசோகச் சக்கரம் எதனை வலியுறுத்துகிறது


A. அமைதி மற்றும் அறவழி✅

B. நேர்மை மற்றும் தூய்மை

C. வளம் மற்றும் செழுமை

D. தியாகம்


19. திருப்பூர் குமரனுக்கு 2004ல் இந்திய அரசு ........ அஞ்சல் தலையை வெளியிட்டது


A. 100 பைசா

B. 200 பைசா

C. 500 பைசா✅

D. 75 பைசா


20. நமது நாட்டின் தேசிய நாட்காட்டி எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது


A. அசோக் மேத்தா

B. மேக்னாத் சாகா✅

C. சந்தானம்

D. ஹோட்டா குழு


21. தமிழ்நாட்டில் ....... % மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்


A. 47✅

B. 49

C. 52

D. 37


22. சரியானதை கூறுக


அ. மணல் என்ற இயற்கை வளத்திலிருந்து இருந்து மெக்னீசியம் என்ற தனிமத்தை பிரித்து அதிலிருந்து ஒளி மின்னழுத்தகலம் தயாரிக்கப்படுகிறது


ஆ. ஒரு பவுண்டு என்பது 4.504 கிலோ கிராம்


இ. வெப்பமண்டல காடுகள் உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுகின்றன


ஈ. வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று அவனது தேவைக்கு மட்டுமே - மகாத்மா காந்தி


A. அனைத்தும் சரி

B. ஆ, இ, ஈ சரி

C. ஆ, இ சரி

D. ஈ மட்டும் சரி✅


➠விளக்கம்

அ.மணல் என்ற இயற்கை வளத்திலிருந்து இருந்து [சிலிக்கான் என்ற தனிமத்தை பிரித்து] அதிலிருந்து ஒளி மின்னழுத்தகலம் தயாரிக்கப்படுகிறது

ஆ. ஒரு பவுண்டு என்பது [0.454 Kg] கிலோ கிராம் 

இ. வெப்பமண்டல [மழைக்காடுகள்] உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுகின்றன


23. மகாவீரர் கூறிய கொள்கைகளில் அகிம்சை என்பது


A. உண்மையை மட்டும் பேசுதல்

B. பணம் பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொல்லாமை

C. உயிரினத்தை துன்புறுத்தாமல் இருப்பது✅

D. அமைதியாக இருப்பது


24. சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர்


A. வர்த்தமானர்

B. சித்தார்த்தர்✅

C. பார்சவநாதர்

D. இவர்களில் யாவரும் இல்லை


25. வேதகாலம் என்பது


A. கிமு1500 - கிபி 600

B. கிபி 1600 - கிபி 500

C. கிமு 1500 - கிமு 600✅

D. கிமு 1600 - கிபி 500


26. தவறானதை கூறுக


அ. பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் வேதகாலம் காலத்தைச் சார்ந்தவை


ஆ. பின் வேத காலத்தில் கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களை வணிகத்தில் பயன்படுத்தினர்


இ. ஸ்மிருதி என்பதன் பொருள் இறுதியாக எழுதப்பட்ட பிரதி


ஈ. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ரோம் நாட்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ளன


A. அ, ஈ

B. அ,ஆ

C. இவற்றில் எதுவுமில்லை✅

D. அ, இ


27. அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார் என்று கூறியவர்


A. சார்லஸ் மேசன்

B. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

C. ஜோசப் பிரின்செப்

D. வெல்ஸ்✅


28. சரியானதை கூறுக


அ. சீனப்பெருஞ்சுவர் குன்- சி - ஹங் என்னும் பேரரசர் தனது வட எல்லையைப் பாதுகாப்பதற்காக கிபி மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவரை இணைத்தார்


ஆ. தேவனாம்பிரியர் என அழைக்கப்பட்டவர் சந்திரகுப்த மெளரியர்


இ. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு அருகே சாஞ்சி உள்ளது


ஈ. ராஜகிரகம் எனும் ஊரின் தற்போதைய பெயர் ராஜ்கிர்


A. அனைத்தும் சரி

B. அ, ஆ, இ சரி

C. அ, ஈ சரி

D. இ, ஈ சரி✅


➠விளக்கம் :

அ. சீனப்பெருஞ்சுவர் குன்- சி - ஹங் என்னும் பேரரசர் தனது வட எல்லையைப் பாதுகாப்பதற்காக [கிமு] மூன்றாம் நூற்றாண்டில் இந்தச் சுவரை இணைத்தார்

ஆ. தேவனாம்பிரியர் என அழைக்கப்பட்டவர் [அசோகர்]


29. அசோகர் தனது கலிங்கப் போரின் பயங்கரத்தை பற்றி ....... பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்


A. 18 வது

B. 13வது✅

C. 11 வது

D. 33 வது


30. மூன்றாம் நிலை தொழில்களில் பொருந்தாதது


A. போக்குவரத்து

B. வங்கிகள்

C. வர்த்தகம்

D. இவற்றில் எதுவுமில்லை✅


31. சேரர், சோழர், 5 வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையலங்காலம் என்னும் இடத்தில் தோற்கடித்தவர் யார்?


A. நெடியோன்

B. நன்மாறன்

C. முதுகுடிமி பெருவழுதி

D. நெடுஞ்செழியன்✅


32. பொருத்துக:-

அ. சேரர்கள் - அத்திப்பூ மாலை

ஆ. சோழர்கள் - வேப்பம்பூ மாலை

இ. பாண்டியர்கள் - பணம்பூ மாலை


   அ ஆ இ

A. 3   2   1

B. 3   1   2✅

C. 1   2   3

D. 2   1   3


33. முதலாம் சந்திரகுப்தரின் போர் வெற்றிகளை பற்றி கூறும் கல்வெட்டு எது?


A. அலகாபாத் தூண் கல்வெட்டு

B. மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு✅

C. ஐஹோல் கல்வெட்டு

D. மண்டகப்பட்டு கல்வெட்டு


34. பொருத்துக (விக்ரமாதித்தியன் அவையில் இடம் பெற்றவர்கள்)

அ. தன்வந்திரி - ஜோதிடர்

ஆ. காகபானர் - மருத்துவர்

இ. சன்கு - மாய வித்தைக்காரர்

ஈ. விட்டல்பட்டர் - கட்டடக்கலை நிபுணர்


     அ ஆ இ ஈ

A.  4   3   2   1

B.  2   1   4   3✅

C.  1   4   3   2

D.  1   2   3   4


35. பொ.ஆ.மு.500 வாக்கில் களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?


A. இரண்டாம் சிம்மவர்மன்

B. சிம்மவிஷ்னு✅

C. முதலாம் மகேந்திரவர்மன்

D. முதலாம் நரசிம்மவர்மன்


36. தசகுமாரசரிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?


A. முதலாம் மகேந்தரவர்மன்

B. தண்டின்✅

C. பாராவி

D. வாத்ஸ்யானர்


37. உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?


A. அமெரிக்கா

B. சீனா

C. நியுசிலாந்து✅

D. இத்தாலி


38. நகராட்சிகள் அதிகம் உள்ள மாவட்டம் எது?


A. நீலகிரி

B. பெரம்பலூர்

C. காஞ்சிபுரம்✅

D. விழுப்புரம்


39. இந்தியாவில் சுனாமி முன்னறிவிப்பு மையம் (INCOIS) ஐதராபாத்தில் _____ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது


A. 2004

B. 2006

C. 2007✅

D. 2010


40. புவியின் வடிவம்___


A. சதுரம்

B. செவ்வகம்

C. ஜியாய்டு✅

D. வட்டம்


41. தீர்க்க கோடுகளின் எண்ணிக்கை


A. 370

B. 380

C. 360✅

D. 390


42. ஐரோப்பாவில் மிக குறைந்த மக்களடர்த்தி கொண்ட நாடு எது?


A. ஐஸ்லாந்து✅

B. நெதர்லாந்து

C. போலந்து

D. ஸ்விட்சர்லாந்து


43. ஐரோப்பியாவில் மிக உயரமான சிகரம் எது?


A. எல்பிராஸ்✅

B. தொட்டபெட்டா

C. எவரெஸ்ட்

D. ஆனைமுடி


44. உலகிலேயே பேரீச்சம் பழங்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடு எது?


A. ஈரான்✅

B. இந்தோனேசியா

C. மலேசியா

D. சிங்கப்பூர்


45. தேசிய ஊராட்சி தினம்____ஆகும்


A. ஜனவரி24

B. ஜூலை 24

C. நவம்பர் 24

D. ஏப்ரல் 24✅


46. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. சேரர்கள் காலம் பக்தி இயக்கத்தின் பொற்காலம் ஆகும்

B. சமண சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பிரம்மதேயம்

C. அடிமை வம்சத்தை சேர்ந்த சுல்தான் நசுரூதின் மாமூதுவால் ஆதரிக்கபட்டவர் மின்கஜ் உஸ் சிராஜ் என்பவர் ஆவார்✅

D. கோவில்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலம் பள்ளி சந்தம்


➠விளக்கம்

A. [சோழர்கள்] காலம் பக்தி இயக்கத்தின் பொற்காலம் ஆகும்

B. சமண சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் [பள்ளிசந்தம்]

D. கோவில்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலம் [தேவதானம்]


47.  கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. பிரதிகாரர்களின் முதல் அரசர் வத்சராஜா ஆவார்

B. கஜினி எனும் சிறிய அரசு து௫க்கியில் உள்ளது

C. அஜ்மீர் நகரை தோற்றுவித்தவர் சிம்மராஜா✅

D. கஜினி ஜெயபாலரை 1002 ஆம் ஆண்டு தோற்கடித்தார்


➠விளக்கம்

A. பிரதிகாரர்களின் முதல் அரசர் [முதலாம் நாகபட்டர்]

B. கஜினி எனும் சிறிய அரசு [ ஆப்கானிஸ்தானில் ] உள்ளது

D. கஜினி ஜெயபாலரை [1001] ஆம் ஆண்டு தோற்கடித்தார்


48. இராஜபுத்திர ஓவிய பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?


A. ராஜஸ்தானி✅

B. இந்துஸ்தானி

C. காந்தவர்வ

D. வசிஸ்டம்


49. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. சௌகான்களில் கடைசி அரசர் பிரித்விராஜ் சௌகான்

B. சோழ அரசின் மூத்த மகன் யுவராஜன்

C. விஜயலாய வழி வந்தோரின் கடைசி அரசர் அதிராஜேந்திரன்

D. சோழ அரசின் நிலவரியானது காணிகடன் ஆகும்

E. அனைத்தும் சரி✅


50. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. குற்றால நீர்வீழ்ச்சி சிற்றாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது

B.  பனியாற்றினால் கடத்தப்பட்டு படிய வைக்கப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் படிவுகள் பனியாற்று மொரைன்கள் எனப்படும்

C.  காற்று அரிப்பு தனிகுன்றுகள் தென் ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் காணப்படுகிறது

D. அனைத்தும் சரி✅


51. பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் குன்றுகள் எவ்வாறு  எனப்படுகின்றன.


A. மொரைன்கள்

B. தனிக்குன்றுகள்

C. பர்கான்கள்✅

D. காளாண்பாறைகள்


52. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. கென்யாவின் கரக்காட்டாவோ எரிமலை, 27 ஆகஸ்ட்

1883ஆம் ஆண்டு வெடித்து

B. செயல்படும் எரிமலை ஸ்ட்ராம்போலி ஆகும்✅

C. பசிபிக் நெருப்பு வளைய பகுதியானது

பசிபிக் பெ௫ங்கடலின் வடக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது

D. கார்ரி சர்க் என்ற பெயரில் அழைக்கப்படும் நிலத்தோற்றமானது ஜெர்மனியில் காணப்படுகிறது


➠விளக்கம்

A. [இந்தோனேஷியாவின்] கரக்காட்டாவோ எரிமலை, 27 ஆகஸ்ட் 1883ஆம் ஆண்டு வெடித்து.

C. பசிபிக் நெருப்பு வளைய பகுதியானது

பசிபிக் பெ௫ங்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது

D. கார்ரி சர்க் என்று அழைக்கபடும் நிலத்தோற்றமானது [ஸ்காட்லாந்தில்] காணப்படுகிறது.

கார் சர்க் என்று அழைக்கப்படும் நிலத்தோற்றமானது ஜெர்மனியில் காணப்படுகிறது.


53. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது


A. மின்சார பேட்டரிகள் தயாரிக்க சிலிகான் பயன்படுகிறது

B. அந்தமானில் உள்ள பேரென் தீவு கடைசியாக 2018ல் வெடித்து சிதறியது

C. உறங்கும் எரிமலைக்கு எடுத்துக்காட்டு மியான்மரின் போப்பா

D. எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கலாம்✅


➠விளக்கம்

A. மின்சார பேட்டரிகள் தயாரிக்க [மாங்கனீசு] பயன்படுகிறது

B. அந்தமானில் உள்ள பேரென் தீவு கடைசியாக [2017ல்] வெடித்து சிதறியது

C. [செயலிழந்த] எரிமலைக்கு எடுத்துக்காட்டு மியான்மரின் போப்பா


54. பொ௫த்துக


அ. செயலிழந்த எரிமலை - பினாடுபோ

ஆ. செயல்படும் எரிமலை - கிளிமாஞ்சரோ

இ. உறங்கும் எரிமலை  - வெசுவியஸ்


    அ ஆ இ

A. 1   2   3

B. 2   1   3✅

C. 3   2   1

D. 1   3   2


55. அனைத்து குடிமக்களுக்கும் சமமான தகுதியை அடைய உரிமை கொண்டவர்கள் என்பதினை எவ்வாறு அழைப்பர்?


A. சமூக சமத்துவம்✅

B. அரசியல் சமத்துவம்

C. நீதி சமத்துவம்

D. குடிமை சமத்துவம்


56. கீழ்காணும் கூற்றுகளை கவனி

I. இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது

II. சுவிட்சர்லாந்து நாட்டில் 1893 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது

III. நியூசிலாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது


A. I, II, III சரி

B. I மட்டும் சரி✅

C. I, II சரி

D. I தவறு, II மற்றும் III சரி


➠விளக்கம்

II. சுவிட்சர்லாந்து நாட்டில் [1971] ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது

III. நியூசிலாந்து நாட்டில் [1893] ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது


57. கீழ்காணும் கூற்றுகளை கவனி

I. அரசியல் கட்சிகள் என்பது தன்னார்வத்தோடு தனிமனிதன் ஏற்படுத்திய அமைப்பு

II. எந்த ஒரு அரசியல் கட்சியும் தலைவர் செயல் உறுப்பினர் தொண்டர் என மூன்று கூறுகளை கொண்டு இருக்கும்

III. மக்களாட்சியின் முதுகெலும்பு அரசியல் கட்சிகள்

IV. இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலைகளில் அமைந்துள்ளது


A. I, II, III சரி

B. II, III சரி

C. I, IV சரி

D. அனைத்தும் சரி✅


58. தேசிய கட்சி கீழ்காணும் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கிகரிக்கபடுகிறது:-

I. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒ௫ கட்சி  6% வாக்குகளை பெற்றி௫த்தல் வேண்டும்

II. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றி௫த்தல் வேண்டும்

III. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்த பட்சம் நான்கு மாநிலங்களில்  2% தொகுதிகளில் வெற்றி பெற்றி௫த்தல் வேண்டும்


A. I, II சரி ✅

B. I மட்டும் சரி

C. I, II, III சரி

D. I, II, III தவறு


➠விளக்கம்

III. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்த பட்சம் [மூன்று] மாநிலங்களில்  2% தொகுதிகளில் வெற்றி பெற்றி௫த்தல் வேண்டும்


59. பிராந்திய/மாநில கட்சிகள் கீழ்காணும் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கிகரிக்கபடுகிறது:-

I. மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்த பட்சம் 6% வாக்குகள் பெற்றி௫த்தல் வேண்டும்.

II. ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டபேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றி௫த்தல் வேண்டும்.

III. சட்டபேரவையில் மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்


A. I, II சரி

B. III மட்டும் சரி

C. I, III சரி✅

D. அனைத்தும் சரி


➠விளக்கம்

II. ஒவ்வொரு 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டபேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் [இரண்டு] தொகுதிகளில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.


60. சாதி, மதம், இனம், பிறப்பிடம் ஆகிய பாகுபாட்டை தடை செய்யும் விதி


A. 14

B. 15✅

C. 16

D. 17


61. கூற்றை ஆராய்க:-


I) துக்ளக் அரசர்களிடம் பணிசெய்து வந்த ஹரிஹரர் மற்றும் புக்கரை, சிருங்கேரி சைவ மடத்தின் தலைவரான வித்யாரண்யர் என்பார், அப்பணியைக் கைவிட்டு நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு

அறிவுறுத்தியாக ஒரு வாய்மொழி வரலாற்று மரபு கூறுகின்றது


II) விஜயநகர அரசானது,  ஹரிஹரர் மற்றும் புக்கரின் அரசியல் குருவான வித்யாரண்யருக்கு

மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது.


III) விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள்,ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்

பகுதியும், கிருஷ்ணா-கோதாவரி

நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான  பகுதியுமே காரணமாக அமைந்தன


IV) சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதரர்களான 

ஹரிஹரர்-புக்கர் ஆகியோரின் பெருந் 

துணிச்சலே விஜயநகர அரசை அதிக 

வலிமை மிக்க டெல்லி சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றியது. 


A. I , II & III சரி

B. I & II சரி

C. II, III & IV தவறு✅

D. III & IV தவறு


➠விளக்கம்

II) விஜயநகர அரசானது, ஹரிஹரர் மற்றும் புக்கரின்  [ஆன்மிக] குருவான வித்யாரண்யருக்கு

மதிப்பளிக்கும் விதத்தில் வித்யாநகர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது.

III) விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட [செழிப்பான]

பகுதியும், கிருஷ்ணா-கோதாவரி

நதிகளுக்கு இடைப்பட்ட [கழிமுகப்] பகுதியுமே காரணமாக அமைந்தன

IV) சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலிரண்டு சகோதரர்களான

ஹரிஹரர்-புக்கர் ஆகியோரின் பெருந்

துணிச்சலே விஜயநகர அரசை அதிக

வலிமை மிக்க [பாமினி] சுல்தானியத்திடமிருந்து காப்பாற்றியது.


62. பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் பச்சை கலந்த நீல வண்ணக் கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமென தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளவர் ?


A. இபின் பதூதா

B. மார்கோ போலோ

C. பிர்தௌசி✅

D. அப்துல் ரசாக்


63. தனது நேரத்தின் பெரும் பகுதியைத் தமது அரசவையைப் பண்பாட்டு, கல்வி மையமாக மாற்றுவதில் செலவிட்ட பாமினி அரசர் யார் ?


A. முதலாம் முகமது

B. ஹங்கு ஹசன்

C. சுல்தான் பெரோஷ்

D. இரண்டாம் முகமது✅


64. ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான ஷெஸ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்த ஆண்டு?


A. 1663✅

B. 1656

C. 1659

D. 1664


65. சிவாஜி தனது எத்தனையாவது

வயது? இராணுவப் பணியில் முதலடி எடுத்து வைத்த நேரத்தில், புனேக்கு அருகேயிருந்த கோண்டுவானா கோட்டையைக் கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார் ? ஆண்டு ?


A. 18 , 1645✅

B. 16 , 1643

C. 18 , 1654

D. 16 , 1634


66. முகலாயர்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?


A. திவான்-இ-சுதூர்

B. திவான்-இ-சாரியா

C. சதா-உஸ்-சுதூர்✅

D. சதா-உஸ்-சாரியா


67. மாறுபட்டதை கண்டறி:-


A. சர்-இ-நௌபத் - தலைமைத் தளபதி✅

B. அமிர்-இ-ஜூம்லா - நிதியமைச்சர்

C. வஷிர்-இ-அசாரப் - வெளியுறவுத்துறை அமைச்சர்

D. சதார்-இ-ஜகான் - தலைமை நீதிபதி


➠விளக்கம்

சர்-இ-நௌபத் என்பது சிவாஜியின் அஷ்டபிரதான் பொறுப்பாளர்.

மற்ற மூன்றும் பாமினி அரசின் பொறுப்பாளர்கள்.


68. மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுவது எது ?


A. நூலகம்

B. ரேடியோ

C. தொலைக்காட்சி

D. அச்சு ஊடகம்✅


69. பொருத்துக.


அ. குறு அளவிலான ஊடகம்- கூகுள் இணையம்

ஆ. சமூக ஊடகம் - சுவரொட்டிகள்

இ. அச்சு ஊடகம் - கருத்தரங்கு

ஈ. இணைய ஊடகம் - திரைப்படங்கள்

உ. ஒலிபரப்பு ஊடகம் - முகநூல்


    அ ஆ இ ஈ உ

A. 3   5   2   1  4 ✅      

B. 2   5   3   1  4

C. 3   1   2   4  5         

D. 4   5   2   1  3


70. தவறானது எது:-


I) மாநில அளவில், மிகப்பெரிய

நீதித்துறை அமைப்பாக இருப்பது

உயர்நீதிமன்றம். இவ்வமைப்பு,

சுதந்திரத் தன்மையுடன்

செயல்படுகிறது.


II) உயர்நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.


III) குடியரசு தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி, தமக்கு 65 வயது ஆகும்வரை, அந்தப் பதவியில் இருப்பார்


IV) மாவட்ட நீதிமன்றம் திருமணம்/குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துவைக்கின்றன


A. III மட்டும் தவறு

B. II & III தவறு

C. II , III & IVதவறு

D. III & IV தவறு✅


➠விளக்கம் ;

III) குடியரசு தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார். தலைமை நீதிபதி, தமக்கு 62 வயது ஆகும்வரை, அந்தப் பதவியில் இருப்பார்.

IV) குடும்பநல நீதிமன்றம் திருமணம்/குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துவைக்கின்றன.


71. உலகின் மிகப்பெரிய நீர் மின் சக்தி திட்டம் எது?


A. த்ரீகார்ஸ் அணை✅

B. பக்ராநங்கல்

C. இட்டைப்பு அணை

D. ஜிலுடு அணை


➠விளக்கம்

A. த்ரீகார்ஸ் அணை, 22500 MW


72. IATO விரிவாக்கம்

A. Indian Association of Technology Operations

B. Indernational Association of Tour Operators

C. Indian Association of Tour Operators✅

D. Indernational Association of technology Operations


73. பொருத்துக(பறவைகள் சரணாலயம்)

அ. உப்பளப்பாடு  - உத்திரப்பிரதேசம்

ஆ. மயானி  - குஜராத்

இ. நல்சரோவர் - ஆந்திரா

ஈ.  நவாப்கஞ்ச் - இராஜஸ்தான்

உ. பரத்பூர் - மகாராஷ்டிரா


    அ ஆ இ ஈ உ

A. 3   5   2  1  4✅    

B. 3   4   1  5  2

C. 3   5   1  2  4       

D. 3   4   2  5  1


74. இரண்டு மணல் திட்டுகள் இடையே தொட்டில் போன்ற அமைப்பில் அமைந்துள்ள கடற்கரை எது?


A. அகுதா கடற்கரை, கோவா

B. மராரி கடற்கரை, கேரளா✅

C. ஓம் கடற்கரை, கர்நாடகம்

D. வற்கலை கடற்கரை, கேரளா


75. பொருத்துக

அ. இட்டைப்பு அணை - ஜின்கா

ஆ.குரி அணை - டெகான்டின்ஸ்

இ. துக்குருயி அணை - பரானா

ஈ.  ஜிலுடு அணை - யாங்ட்சி

உ. த்ரிகார்ஜஸ் அணை - கரோணி


    அ ஆ இ ஈ உ

A. 3   4   2  1  5       

B. 4   1   2  5  3

C. 4   3   2  1  5      

D. 3   5   2  1  4✅


76. உலகின் மிக நீண்ட மலைத்தொடர்


A. ராக்கி மலைத்தொடர்

B. இமயமலைத் தொடர்

C. ஆல்ப்ஸ் மலைத்தொடர்

D. ஆண்டிஸ் மலைத்தொடர்✅


77. பின்வருவனவற்றுள் எது நேர்முக வரி ?


A. சேவை வரி

B. செல்வ வரி✅

C. விற்பனை வரி

D. வளர் விகித வரி


78. பேரிடர் மேலாண்மை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு


A. டிசம்பர் 10, 2005

B. டிசம்பர் 15, 2005

C. டிசம்பர் 25, 2005✅

D. டிசம்பர் 5, 2005


79. இந்தியாவில் மக்களவையில் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் யார்?


A. பாத்திமா பீவி

B. மீரா குமார்✅

C. அருந்ததி ராய்

D. கிருபாளினி


80. பொருத்துக


அ. கச்சேரா    - சிகைக்கோல்

ஆ‌. கடா           - வெட்டப்படாத முடி

இ. கிர்பான்   - உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை

ஈ.கேஷ்            - இரும்பு காப்பு

உ. கன்கா       - குறுவாள்

  

     அ  ஆ இ ஈ  உ

A. 3   5    4   2   1

B. 1   5    3   4   2

C. 3   5    4   1   2

D. 3   4    5   2   1✅


81. இரண்டு மிகப் பெரிய நிலப் பகுதிகளை இணைக்கும் சிறிய துண்டு______என்று பெயர்.


A. நிலச்சந்தி✅

B. நீர்ச்சந்தி

C. கால்வாய்

D. எதுவும் இல்லை


82. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.


i. குடைவரைக் கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்.


ii. பாண்டியர் காலத்து சிவன் கோயில்களில் லிங்கங்கள் மற்றும் நந்தி உருவம் தாய்ப்பாறையில் இருந்து செதுக்கப்பட்டது.


iii. முற்காலப் பாண்டியர்களின் கோயில் கட்டடக்கலை செம்பியன் மாதேவி பாணியை பின்பற்றி அமைந்ததாகும்.


iv. ஏழு கோயில்கள் என அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில்கள் பல்லவர் அரசர் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.


A. அனைத்தும் சரி

B. i, ii, iv சரி✅

C. i, ii, iii சரி

D. ii, iii, iv சரி


➠விளக்கம்

iii.முற்காலப் [சோழர்கள்] கோயில் கட்டடக்கலை செம்பியன் மாதேவி பாணியை பின்பற்றி அமைந்ததாகும்.


83. கீழ்க்கண்டவற்றுள் உள்ள இலக்கியங்களில் சமண இலக்கியம் எது?


A. மணிமேகலை

B. வீரசோழியம்

C. சீவக சிந்தாமணி✅

D. குண்டலகேசி


84._________என்பது நிலம் மூலதனம் உழைப்பு போன்ற உற்பத்தி காரணிகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்குமான சந்தையை குறிக்கும்.


A. பிராந்திய சந்தை

B. காரணி சந்தை✅

C. தயாரிப்பு சந்தை

D. சில்லறை சந்தை


85. பொருத்துக


அ. இந்திய தர நிர்ணய பணியகம்  -2009

ஆ. சாலைப் போக்குவரத்து சட்டம்   -1985

இ. சட்ட அளவிட்டு சட்டம்                    -1989

ஈ. அத்தியாவசிய பொருட்கள்

சட்டம்                                                       -1986

உ. மோட்டார் வாகன விதிமுறைகள்-1968


     அ  ஆ  இ  ஈ   உ

A.  4    1     3   2   5

B.  3    4     1   2   5

C.  2    1     3   4   5

D.  4    3     1   2   5✅


86. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு________என அழைக்கப்படுகிறது.


A. ஜியோகிராஃபி

B. காட்டோ கிராஃப்ட்✅

C. பிசியோ கிராபி

D. பௌதீக புவியியல்


87. கூற்று 1 - அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவான வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி தேய்வு வீத வரியாகும்.

கூற்று 2 - இம்மாதிரியான வரி விதித்தால் அதிக அளவு வருமானம் ஈட்டுபவர்களை காட்டிலும் குறைந்த அளவு வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரி விதித்தால் பாதிக்கப்படுகின்றன.


A. கூற்று 1 சரி கூற்று 2 சரி✅

B. கூற்று 1 சரி கூற்று 2 தவறு

C. கூற்று 1 தவறு கூற்று 2 சரி

D. கூற்று 1&2 தவறு


88. பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு, அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர்.


A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

B. பெரியார்

C. அன்னி பெசன்ட்

D. மகாத்மா காந்தி✅


89. இந்துக்களும் இசுலாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே என்ற கூற்றை கூறியவர்.


A. இராமானந்தர்

B. சூர்தாஸ்

C. ஹரிதாசர்✅

D. துக்காராம்


90. கீழ்க்கண்ட புயல்களை அவை ஏற்பட்ட வருடங்களை வைத்து ஏறுவரிசைப்படுத்துக.

I. ஆம்பன் புயல்

II. வர்தா புயல்

III. ஃபானி புயல்

IV. ஒக்கி புயல்

V. கஜா புயல்


A. II, IV, V, III, I✅

B. IV, V, II, III, I

C. II, IV, III, V, I

D. I, II, III, IV, V


➠விளக்கம்

வர்தா புயல் -2016

ஒக்கி புயல் -2017

கஜா புயல் -2018

ஃபானி புயல் -2019

ஆம்பன் புயல் -2020


91. ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4மீ அது 150 முறை சுழலும்போது கடந்த தொலைவு என்ன?


A. 220மீ

B. 660மீ✅

C. 440மீ

D. 550மீ


92. சுருக்குக (13^3)+(14^3)-(27^3)


A. பூஜ்ஜியம்

B. -27,322

C. 1.

D. -14,742✅


93. ஒரு சரிவக வடிவ சாளரத்தின் இணைப் பக்கங்களின் அளவுகள் முறையே 105செ.மீ மற்றும் 50செ.மீ. மேலும் இணைப் பக்கங்களுக்கிடைப்பட்ட தொலைவு 60செ.மீ. எனில் அந்த சாளரத்திற்கு ச.செ.மீ க்கு ரூ.100வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் செலவு?


A. ரூ.697.50

B. ரூ.39,750

C. ரூ.4,65,000✅

D. ரூ.66.750


94. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12செ.மீ மற்றும்

9செ.மீ மற்றும் சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?


A. 6 செ.மீ✅

B. 8 செ.மீ

C. 10 செ.மீ

D. 12 செ.மீ


95. பின்வரும் கூற்றுகளில் சரியாகப் பொருந்துவது?

ஒரு முக்கோணத்தின் எவையேனும் இரு பக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால்:


A. மூன்றாவது பக்கம் மற்ற இரு பக்க வித்தியாசத்துக்கு சமம்

B. மூன்றாவது பக்கம் மற்ற இரு பக்க கூடுதலுக்கு சமம்

C. மூன்றாவது பக்கம் மற்ற இரு பக்கங்களின் வித்தியாசம் மற்றும் கூடுதல் ஆகியவற்றின் இடையில் அமையும்✅

D. அனைத்தும் சரியே


96. பிபனோசி தொடரின் ஆறாவது மற்றும் ஏழாவது உறுப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடு?


A. 05✅

B. 06

C. 08

D. 03


97. வட்ட வடிவ மட்டை பந்துத் திடலின் ஆரம் 76மீ அத்திடலைச் சுற்றிலும் 2மீ அகலத்தில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டி இருந்தது. ஒரு ச.செ.மீக்கு

ரூ.100 வீதம் செலவானால் அவ்வடிகால் அமைக்க தேவையான மொத்த தொகை எவ்வளவு?


A. 98,600 ரூபாய்

B. 94,680 ரூபாய்

C. 94,860 ரூபாய்

D. 96,800 ரூபாய்✅


98. செல்வி என்பவர் மாத வருமானமாக ரூ.7,500 ஊதியம் பெறுகிறார். அவர் செலவு செய்த தொகை ரூ.2000 எனில் சேமித்த தொகை (சதவீதத்தில்)?


A. 67.33%

B. 73.33%✅

C. 78.75%

D. 71.67%


99. இடைநிலை அளவு காண்க   

       25, 18, 30, 17, 34, 21, 19, 16


A. 17.5

B. 19.

C. 20✅

D. 19.5


100. கிருஷ்ணவேணி என்பவர் மணிமேகலையிடமிருந்து ரூ.48,000 ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் பெறுகிறார். மூன்று ஆண்டுகள் கழித்து கிருஷ்ணவேணி ரூ.72,480ஐ மொத்த தொகையாகச் செலுத்துகிறார் எனில் ஆண்டு வட்டிவீதம் என்னவாக இருக்கும்?


A. 13%

B. 17%✅

C. 20%

D. 23%


🔹குறிப்பு - 91 முதல் 100 வரையிலான கணித கேள்விகளுக்கான விளக்கம் கீழே போட்டோவில் தரப்பட்டுள்ளது






          

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY