Ads Right Header

Central Govt Schemes - Suresh IAS Academy.

 தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்பு துவக்கம் : 25 - பிப்ரவரி 2015 நோக்கம் : கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மண்டல அளவிலான நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான இணைப்புச்சேவை இடைவெளியை களைதல் . குறிக்கோள் : குறைந்தபட்சம் 100 Mbps அலைவரிசையில் கண்ணாடி ஒளியழை வலையமைப்பு மூலமாக இரண்டு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அலைக்கற்றை இணைய வசதியை வழங்குதல் . நிதியளிப்பு : அனைத்து சேவை கடப்பாடு நிதியம் அமல்பாட்டு நிறுவனம் : இத்திட்டத்தின் அமல்பாட்டிற்காக சிறப்பு நோக்க செயல்பாட்டு அமைப்பான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனமானது ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது . திட்டவிளக்கம் : டெலிகாம் சேவை வழங்குநர்கள் ISP கள் , கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் தேசிய கண்ணாடி ஒளியிழை வலையமைப்பிற்கு பாகுபாடற்ற அணுகல் வழங்கப்படும் . மேலும் ஊரகப் பகுதிகளில் பல்வேறு சேவைகளை அவர்கள் துவங்கலாம் . இத்திட்டமானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ளது . குறிப்பு : உலகளாவிய சேவை பொறுப்பு நிதியானது 2002 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது . இந்தியா முழுவதும் குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அனைவருக்கும் டெலிகாம் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக திறனுடைய மானியத்தை இத்திட்டம் வழங்குகின்றது . இந்தியாவிற்கு USOF நிர்வகிப்பாளர் தலைமை வகிக்கிறார் . இவர் இந்நிதியத்தின் பயன்பாடு தொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறையின் செயலாளருக்கு அறிக்கை அளிக்கின்றார் .

முழுமையாக காண

Touch Here

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY