Ads Right Header

வீட்டிலிருந்தே ஐ.ஏ.எஸ் ஆகலாம் - ஆட்சியர் IAS.

 


வீட்டிலிருந்தே ஐ.ஏ.எஸ் ஆகலாம்

------------------------------------------------


 தமிழக அரசு இலவசமா All India Civil Services Coaching Centre என்ற பெயரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான  UPSC தேர்வுக்கு வருடந்தோறும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் . 


கொரோனா பொது முடக்கம் காரணமாக  தற்போது AICSCC TN  YouTube சேனல் வழியாக தலை சிறந்த ஆசிரியர்களை கொண்டு UPSC தேர்வுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள்..


சென்னையில் மிகப்பெரிய தனியார் கோச்சிங் சென்டரில் படித்தால் மட்டுமே ஐஏஎஸ் ஆக முடியும் என்ற ஒரு மிகப்பெரிய போக்கை இந்த வணிக நிறுவனங்கள் உருவாகிவிட்டது..


வருடந்தோறும் லட்சக்கணக்கில் சென்னை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம் தனியார் கோச்சிங் சென்டர்களில் சித்து விளையாட்டுகளால் அவர்களின் கனவு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது...


உங்களுக்கெல்லாம் வெற்றி பெற்ற ஒரு சிலர் மட்டும்தான் தெரியும் ஆனால் தோல்வி பெற்ற பலர் இங்கே உண்டு.. ஐஏஎஸ் கனவுடன் சென்னைக்கு வரும்  பல பெண்கள் தனியார் கோச்சிங் சென்டர்களை நம்பி ஏமாந்து..IAS ,IPS கனவை விட்டுவிட்டு திரும்பவும் ஊருக்கு சென்று  ஐஏஎஸ் கனவை அடையாதவர்கள்  பலர் உண்டு...


1966 இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் .. தனியார் பயிற்சி நிறுவனங்களில் சூழ்ச்சியால் இடம் தெரியாமல்  மறைக்கப்பட்டது..( இதைப் படிக்கும் பொழுது இப்படி ஒன்னு இருக்கா என்று நீங்கள் நினைப்பீர்கள்)


என்னுடைய பல நாள் கனவுகளில் ஒன்று தேர்வர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களை நம்பி ஏமாந்து போகாமல் இருக்க தமிழக அரசின் 

All India Civil Services Coaching Centre பலம் அடைய வேண்டும் என்று நினைத்தேன்..


ஒரு கட்டத்தில் All India Civil Services Coaching Centre என்பது தனியார் கோச்சிங் சென்டர்களில் சொந்த வீடாக மாறியதைக் கண்டு கோபமும் எரிச்சலும் அடைந்தேன்...


All India Civil Services Coaching Centre பலம் அடைந்தால் கிராமப்புறத்தில் இருந்து யாரும் சென்னைக்கு வர தேவை இருக்காது . மாதம்தோறும் ரூம் வாடகை,  உணவு என 10,000 ரூபாய்க்கு மேல் செலவும் இருக்காது..


மேலும் ஐஏஎஸ் ,IPS  கனவு பல கிராமப்புற மாணவர்களுக்கு எளிமையாக நிறைவேறும்..


இத்தகைய அரசு பயிற்சி நிறுவனம் மேலே கொண்டு வருவதற்கு நாம்தான் ஆர்வம் காட்ட வேண்டும்..


*அதற்கு நீங்கள் செய்யவேண்டியது*  :-


*AICSCC TN என்ற பெயரில் All India Civil Services Coaching Centre உருவாக்கிய யூடியூப் சேனலை எல்லோரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்*


You tube Link :-


இங்கே சொடுக்கவும்


 இணையதளம் :- 


இங்கே சொடுக்கவும்


ஆன்லைன் வகுப்பு வரும்போது கண்டிப்பாக அனைவரும் தவறாமல் அட்டன் செய்யவும்..


உங்களது சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கமெண்டில் கேட்க்கவும்..


நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதுபடியே இந்த இணையதள கல்வி அடுத்த கட்டத்திற்கு செல்லும்...


இன்னும் தனியார் கோச்சிங் சென்டரில் நோக்கிதான் செல்வோம் என்றால்  நம்முடைய பலரின் கனவுகள் இடம் தெரியாமல் தொடர்ந்து கலைக்கப்படும் நசுக்கப்படும்...


 ஆகவே அரசு பயிற்சி நிறுவனம் இப்பொழுதுதான் விழித்துள்ளது அதை ஆக்கபூர்வமாக மாற்றும் சக்தி தேர்வர்கள் ஆகிய உங்களிடம் மட்டுமே உள்ளது..


நம் ஆர்வத்தால் மற்றும் பயன்பாட்டால் மட்டுமே இது மென்மேலும் வளரும்..


ஒரு புறம் ஐஏஎஸ் கனவுடன் ஒரு நாள் உணவு உண்ணாமல் டீ ,காபியை குடித்துக் கொண்டு ,வாடகை கட்ட முடியாமல் ஓனருக்கு பயந்து ஒளிந்து கொண்டு பலர் தன்னுடைய ஐஏஎஸ் கனவுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...


மறுபுறம் தமிழக அரசு ஐஏஎஸ் பயிற்சிக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல் வருடந்தோறும் பணம் விரையம் ஆகிக்கொண்டிருக்கிறது..


அரசு பதவியில் இருக்கும் திறமையான பல ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களை நாம் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கிறோம்..


இதையெல்லாம் உடைக்க வேண்டும் என்றால் நாம் முயன்றால் மட்டுமே முடியும்.. ஆகவே அரசு கொடுப்பதை சரியாக பயன்படுத்துவது. அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி சீர்படுத்தும். அதை மென்மேலும் உயர்த்துவதும் உங்கள் கையில்தான் உள்ளது...


இதனை தவறாமல் உடனடியாக பகிரவும்..


நன்றி


Selva Rama Rathnam


22-10-2020

Previous article
Next article

Leave Comments

Post a comment

Ads Post 4

DEMOS BUY