Ads Right Header

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு.

 


இந்திய

பொருளாதார

திட்டமிடுதலின் வரலாறு

——————————————————


* பொருளாதார திட்டமிடுதலை முதன்

முதலில் கூறிய அறிஞர் – விஸ்வேஸ்வரய்யா


* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு

ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.


* 1934 – ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட

பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்-

விஸ்வேஸ்வரய்யா.


* 1944 – ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன்

முயற்சியாக 8 முன்னணி தொழில்

அதிபர்களால் பொருளாதார

முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு

முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது.

அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.

* 1945 – காந்திய திட்டம் – ஸ்ரீமன்

நாராயணன்

* 1950 – மக்கள் திட்டம் – M.N. ராய்

தேசிய திட்டக் குழு:

* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல்

தொடங்கப்பட்டது.

* திட்டக் குழுவின் முதல் தலைவர் – ஜவஹர்லால்

நேரு.

* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் –

குல்சாரிலால் நந்தா.

* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற

உறுப்பினர்கள்.

* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.

திட்டக் குழுவின் நோக்கம்:

* நாட்டின் பொருளாதாரம் மூலதனம்

மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.

* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு

செய்தல்.

* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு

செய்தல்

* விவசாயம், தொழில்துறை, மின்சாரத்

துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு

மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.

* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.

தேசிய வளர்ச்சிக் குழு:

* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு

தொடங்கப்பட்டது.

* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.

* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் –

மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில

முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும்

மாநில நிதி அமைச்சர்கள்.

தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:

* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம்

அளித்தல்.

மாநில திட்டக் குழு:

* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில

முதல்வர்.

* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில

நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார

நிபுணர்கள்.

* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம்

பொருளாதார முன்னேற்றம் காண 1928

ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத்

ரஷ்யா.

முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 – 1956

முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் –

ஹரோல்டு தோமர்

முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.

சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல்

தொடங்கப்பட்டது.

வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி,

போக்குவரத்து தொழில் துறைக்கு

முக்கியத்துவம் தரப்பட்டது.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட

முக்கிய அணைகள்:

தாமோதர் அணை, ஹிராகுட் எணை,

பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல்

அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை

போன்றவை.

இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 –

1961

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர்

P.G.மஹல நாபிஸ்.

முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில்

தொடங்கப்பட்ட முக்கிய கனரக

தொழிற்சாலைகள்:

* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக

தொழிற்சாலை.

* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக

தொழிற்சாலை.

* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக

தொழிற்சாலை.

* தசம முறையில் நாணயம்

அறிமுகப்படுத்தப்பட்டது.

* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில்

அமைக்கப்பட்டது.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 – 1956

* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் –

P.G.மஹல நாபிஸ்.

* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.

* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்

* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர்,

பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம்

ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.

ஆண்டுத் திட்டம்: 1966 – 1969

* இது திட்ட விடுமுறை காலமாகும்

* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி

அறிமுகப்படுத்தப்பட்டது.

* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம்,

நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.

நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 – 1974

* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும்

தன்னிறவை.

* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ்

அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற

காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு

திட்டம் தோல்வி அடைந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 – 1979

* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின்

மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.

* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.

* ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக்

கொள்ளப்பட்ட திட்டமாகும்.

* இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத்

திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம்

அறிமுகப்படுத்தப்பட்டது.

* ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுழற்சி திட்டம்: 1978 – 1980

இது ஜனதா அரசு திட்டமாகும்.

* முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம் அது

தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு

அளித்தல்.

* குடிசை மற்றும் சிறுதொழிலை

மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம்

பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய

வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 – 1985

ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம்

* வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன்

மூலம் வறுமையை அகற்றுதல்.

* குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம

வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.

ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 – 1990

ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம்

* உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன,

தற்சார்பு ஆகியவை பெருகுதல்.

* ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில்

அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக

வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர்

வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர்

ரோஜ்கர் யோஜனா திட்டம்

அறிமுகப்படுத்தப்பட்டது.

* வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம்

தரப்பட்டது.

ஆண்டுத் திட்டம்: 1990 1992

* இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும்

வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.

* இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக

சந்தையில் நுழையத் தொடங்கியது.

எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 – 1997

எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம்:

* முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி,

மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை

கட்டுப்பாடு, வேகமான பொருளாதார

வளர்ச்சி.

* புதிய பொருளாதாரக் கொள்கை

நடைமுறைபடுத்தப்பட்டது.

* பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம்

அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 –

2002

ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம்.

* வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு

மற்றும் 2004க்குள் முழு கல்வி.

* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி

மற்றும் சமத்துவம்.

* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய

சுதந்திர பொன்விழா

கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான்

என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 – 2007

பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய

நோக்கம்:

* நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர்

முன்னேற்றம், பொருளாதார

சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.

* தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு

மடங்கு அதிகரித்தல்.

* கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.

* 2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16

சதவிகிதம் குறைத்தல்.

பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 – 2012

* மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10

சதவிகிதம் அதிகரித்தல்.

* வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம்

அதிகரித்தல்.

* 70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு

உருவாக்குதல்

* வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.

கல்வி:

* ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத

குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.

* 7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை

விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.

சுகாதாரம்:

* குழந்தை இறப்பு விகிதம் 28 ஆகவும்,

* பிரசவத்தின் போது இறக்கும் இறப்பை 1000க்கும் 1

எனவும் குறைத்தல்.

* மொத்த கருவுறு விகிதத்தை 2 சதவிகிதம்

குறைத்தல்.

* 2009 க்குள் அனைவருக்கும் சுகாதாரமான

குடிநீர் வழங்குதல்.

* ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் விகிதம் 50

சதவிகிதம் குறைத்தல்.

மகளிர் மற்றும் குழந்தைகள்

* ஆண் பெண் பால்விகிதத்தை 2011 –

12க்குள் 935 ஆக உயர்த்துதல் மற்றும்

2016-17க்குள் 950 ஆக

உயர்த்துதல்.

* பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக

வேலைவாய்ப்புகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு

செய்து தருதல்.

உள்கட்டமைப்பு:

* அனைத்து கிராமங்களிலும் வசதி செய்து

தருதல்.

* 500 மக்கள் தொகை உள்ள மலைவாழ்

மக்களுக்கும் 1000 மக்கள் தொகை உடைய

கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து

தருதல்.

* 2007 க்குள் அனைத்து கிராமங்களிலும்

தொலைபேசி வசதி செய்து தருதல்.

* 2012 க்குள் அனைத்து கிராமங்களிலும்

இணையதள வசதி செய்து தருதல்.

சுற்றுப்புறச் சூழல்:

* வனம் மற்றும் மரங்கள் 5 சதவிகிதம்

அதிகரித்தல்.

* உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தவாறு

தூய்மையான காற்று வழங்குதல்.

பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்:

2012 – 2017

* பனிரெண்டாவது ஐந்தாண்டு

திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி

அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.

பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின்

பொருளாதார வளர்ச்சி:

* மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8

சதவிகிதம்.

* விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்

* உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்

* தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்

* சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:

* 10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்

* 50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்

கல்வி:

* 2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்

* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்

இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக்

குறைத்தல்.

சுகாதாரம்:

* பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைத்தல்

* பேறுகால இறப்பு 1000க்கு 1 ஆக குறைத்தல்.

உள்கட்டமைப்பு:

* விவசாய நிலத்தை 90 மில்லியனிலிருந்து 103

மில்லியனாக அதிகரித்தல்.

* அனைத்து கிராமங்களிலும் மின் வசதி

செய்து தருதல்.

* அனைத்து கிராம சாலைகளை இணைத்தல்

* தொகைதொடர்பு நெருக்கத்தை 70

சதவிகிதம் அதிகரித்தல்.

சுற்றுப்புறச் :சூழல்:

* ஆண்டுக்கு 1 மில்லியன் ஹெக்டர்

வனங்களை உருவாக்குதல்

* காற்று மாசுபடுதலை 20 முதல் 25 சதவிகிதம்

2020க்குள் குறைத்தல்.

சேவைத் துறை:

* 90 சதவிகித இல்லங்களுக்கு வங்கி சேவைகள்

அளித்தல்.

* அனைத்து குடும்பங்களுக்கு ஆதார் அட்டை

வழங்குதல்.

ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி விகிதம்:

எண் – இலக்கு – வளர்ச்சி

1. 2.1 – 3.6

2. 4.5 – 4.0

3. 5.6 – 2.2

4. 5.7 – 3.3

5. 4.4 – 5.2

6. 5.2 – 5.2

7. 5.0 – 5.8

8. 5.6 – 6.7

9. 6.5 – 5.4

10. 8.0 – 7.7

11. 8.1 – 7.9

12. 8.0 –

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY