Ads Right Header

Jan 1 to 15 2021_ CA.


தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் டிஆர்.ஓ.ஓ.வின் 63 வது தினம் - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது 63 வது தினம் ஜனவரி 1 2021 அன்று கொண்டாடியது . ' டி.ஆர்.டி.ஓ. கடந்த 1958 ஆம் ஆண்டு 40 ஆய்வகங்களுடன் தொடங்கப்பட்டது . 

உலக அமைப்புகள் - உடன்டிபக்கைகள் மற்றும் மாநாடுகள் சர்வதேச நிதிச் சேவை ஆணையம் " சர்வதேச நிதி சேவை மையம் ஆணையம் ( International Financial Services Centres Authority ) சர்வதேச பத்திர ஆணையத்தின் ( International Organization of Securities Commissions ) உறுப்பினராக இணைந்து உள்ளது . ) சர்வதேச பத்திர ஆணையம் உலகின் பத்திர ஒழுங்குமுறைகளின் சர்வதேச அமைப்பாகும் . இது உலகின் 95 % அதிகமான சந்தை பத்திரங்களை உள்ளடக்கியது . மேலும் இது பத்திரத் துறைக்கான உலகளாவிய தர நிர்ணமாகும் . 

' நாட்டின் சர்வதேச நிதி சேவை மையங்களில் உள்ள அனைத்து நிதி சேவைகளையும் ஒழுங்குப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் 2020 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது . * இதன் தலைமையிடம் ( காந்திநகர் ) குஜராத்தில் அமைந்துள்ளது . 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இணைந்தது இந்தியா 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் இல்லாத உறுப்பினராக இந்தியா இணைந்தது . ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா , பிரான்ஸ் , ரஷியா , பிரிட்டன் , அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன . இவை தவிர நிரந்தரம் அல்லாத 10 உறுப்பு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன . இரு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடுகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன . ' அந்த வகையில் , நிரந்தரம் அல்லாத 5 உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்வதற்கு கடந்த ஜுனில் நடைபெற்ற தேர்தலில் ஆசிய - பசிபிக் நாடுகள் சார்பில் போட்டியிட்ட இந்தியா , பதிவான 192 வாக்குகளில் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது . * இதையடுத்து , ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலில் 2021-22 ஆகிய இரு ஆண்டுகளுக்கான நிரந்தரம் இல்லாத உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது . இக்கவுன்சிலில் இந்தியா தற்போது இணைவது 8 - ஆவது முறையாகும் . - உறுப்பு நாடுகள் தலா ஒரு மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் . அந்த வகையில் வரும் ஆகஸ்ட் மாதமும் , 2022 - ஆம் ஆண்டு ஒரு மாதமும் இந்தியா தலைமை வகிக்கும் .

முழுமையாக காண இங்கே சொடுக்கவும்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY