Ads Right Header

நவீன இந்தியாவின் சிற்பிகள் _ ராமச்சந்திர குஹா.


நவீன இந்தியா என்றதும் நம் மனத்தில் சட்டென்று தோன்றும் விஷயம் என்னவென்றால் , அதன் வரலாற்றைப் படைத்தவர்களே அதிக நம்பகத்தன்மை கொண்டவகையில் அதை எழுதியவர்களாகவும் இருக்கிறார்கள் . நம் தேசத்தின் தலையாய அரசியல் தலைவர்களே அதன் முக்கிய அரசியல் சிந்தனையாளர்களாகவும் இருந்தனர் . அதிலும் மோகன்தாஸ் காந்தி , ஜவாஹர்லால் நேரு , பி.ஆர் . அம்பேத்கர் ஆகிய மும்மூர்த்திகளின் விஷயத்தில் இந்தக் கூற்று மிக மிகச் சரியானது . தேசியவாதத்தின் பிதாமகரான காந்தி அவர்களில் முதலாமவர் . 1920 களுக்கும் 1940 களுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக தேசம் முழுவதும் மாபெரும் எழுச்சியை உருவாக்கினார் . நவீன இந்தியாவின் சிற்பியான ஜவாஹர்லால் நேரு இரண்டாமவர் . இந்திய தேசம் பிறந்த ஆகஸ்ட் 1947 முதல் 1964 மே மாதம் அவர் இறக்கும்வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார் . மூன்றாமவர் , இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சாதியினரின் மாபெரும் தலைவர் அம்பேத்கர் . சுதந்தர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்றவகையில் அவருடைய மேற்பார்வையில் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது . அது 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதி முதல் அமலுக்கு வந்தது . இம்மூன்று தலைவர்களும் போராட்டங்களில் ஈடுபடுதல் , ஒடுக்குமுறைக்கு ஆளாகுதல் , தலைமை தாங்குதல் , நிர்வாகப் பொறுப்பேற்றல் எனப் பல நெருக்கடி மிகுந்த பணிகளைச் செய்தனர் ; எனினும் தாங்கள் கண்ட மற்றும் வடிவமைத்த உலகைப்பற்றி விரிவாக எழுதியுமிருக்கிறார்கள் .


முழுமையாக படிக்க

இங்கே சொடுக்கவும்

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY