Ads Right Header

பிரதமர் மோடி வருகை - முக்கிய குறிப்புகள்.

என்னென்ன திட்டங்கள் ? 

தமிழகத்தில் ரூ .4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார் . மேலும் , ரூ .3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் . 

இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . 

* சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டமா னது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை ரூ .3,770 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது . 

9.05 கிலோ மீட்டர் நீள முள்ள இந்த மெட்ரோ ரயில் பாதையானது , வடசென்னை பகு தியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 

* சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான் காவது ரயில் பாதையானது ரூ .293.40 கோடி மதிப்பில் உரு வாக்கப்பட்டுள்ளது . இந்தத் திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளி மையாகும் . 

சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்தத் திட்டத்தால் ரயில் பயணம் சுலபமாக நடைபெறும் . விழுப்புரம் - கடலூர் - மயிலாடுதுறை - தஞ்சாவூர் மற்றும் மயி லாடுதுறை - திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதை யானது ரூ .423 கோடியில் மின்வழித் தடமாக மாற்றப்பட்டுள் ளது . 

இதன்மூலம் , ரூ .14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரி பொருள் சேமிக்கப்படும் . இந்த மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ .4,486.40 கோடியாகும் . இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் . 

அர்ஜுன் போர் பீரங்கி : முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவ மைக்கப்பட்ட அர்ஜுன் போர் பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித் தார் . இந்த தளவாடமானது , 15 கல்வி நிறுவனங்கள் , 8 ஆய்வகங் கள் மற்றும் பல்வேறு சிறு - குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த வர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது . 

அடிக்கல் நாட்டு விழா : தமிழகத்தில் ரூ .3,640 கோடி மதிப் பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக் கல் நாட்டினார் . கல்லணைக் கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப் பித்தல் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் . இந்தத் திட்ட மானது ரூ .2,640 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது . இதன்மூலம் , காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது எளிதாக்கப்படும் . 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ( ஐஐடி ) சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கப்பட உள்ளது . இதற்காக சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில் , மிகப்பெரிய வளா கம் கட்டப்படுகிறது . இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார் .



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY