Ads Right Header

Dinamani & The Hindu (Tamil) February - 2021 CA.


2021 பிப்ரவரி மாத நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் இங்கே காணலாம்


கடலோரக் காவல் படையில் ' சி -453 ' நவீன படகு சேர்ப்பு.

இந்திய கடலோரக் காவல் படைக்கு 18 அதிநவீன படகுகளை தயாரித்து வழங்க எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . இதில் 17 - வது படகான சி -453 , இந்திய கடலோரக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளது . சென்னை துறைமுகத்தில் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் , கடலோரக் காவல் படை இயக்குநர் கே.நடராஜனிடம் இந்த படகை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன் ஒப்படைத்தார் . கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.யான எஸ்.பரமேஷ் , எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர் . எதிரிகளை இடைமறித்து தாக்கும் இப்படகு 27.80 மீட்டர் நீளம் , 105 டன் எடை கொண்டது . 45 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது . கடற்பகுதியில் கண்காணிப்பு , தேடுதல் , மீட்பு பணிகளில் ஈடுபடும் இப்படகில் நவீன தொலைதொடர்பு கருவிகள் , வழிகாட்டி சாதனங்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன . உதவி கமாண்டன்ட் அனிமேஷ் சர்மா தலைமையில் இயங்கும் இப்படகு , கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் . இப்படகு சேர்க்கப்பட்டதன் மூலம் , கடலோரக் காவல் படையில் படகுகள் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது . இதுதவிர , பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் மேலும் 40 படகுகள் கட்டப்பட்டு வருகின்றன . பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் 16 எம்கே -3 நவீன ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து கடலோரக் காவல் படைக்கு வழங்க உள்ளது . பாதுகாப்பு துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Feb 20 2021 Paper cutting

Touch Here

Feb 19 

Touch Here

Feb 18

Touch Here

Feb 17

Touch Here

Feb 16

Touch Here

Feb 15

Touch Here

Feb 14

Touch Here

Feb 13

Coming soon...

Feb 12

Feb 11

Feb 10

Feb 09

Feb 08

Feb 07

Feb 06

Feb 05

Feb 04

Feb 03

Feb 02

Feb 01






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY