Ads Right Header

February 2021 Current Affairs - Shankar IAS Academy.



 பசுமை வரி 

கூடுதல் வரியை விதிக்க சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது . 

* இது சாலையில் ஓடும் பழைய வாகனங்களுக்கு விதிக்கப்படும் . பசுமை வரியானது மாசு வரி அல்லது சுற்றுச்சூழல் வரி என்றும் அழைக்கப்படுகிறது.

* மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது .

* இது மாசுபாட்டை உருவாக்குவோரையும் வரி செலுத்த வைக்கும் . 

* இது மக்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதகமற்ற வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் . 

பசுமை வரி விதிமுறைகளின் கீழ் , எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படும் நேரத்தில் பசுமை வரி விதிக்கப்படும் . 

இது சாலை வரியில் 10 முதல் 25 % வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் . நகரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைந்த பசுமை வரியைச் செலுத்தும் . 

* இருப்பினும் , டிராக்டர் போன்ற விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் . 

 காலநிலை ஏற்புத்தன்மை மாநாடு 2021 

இதை நெதர்லாந்து அரசு நடத்தியது , 2030 ஆம் ஆண்டளவில் , 450 ஜிகாவாட் என்ற அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை இந்தியா இலக்காக வைக்கும் . 

2021 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு COP26 என்றும் அழைக்கப் படுகிறது . இது ஐக்கிய நாடுகளின் 26 வது காலநிலை மாற்ற மாநாடாகும் . 

இது 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் . இந்த உச்சி மாநாட்டிற்கு ஐக்கிய இராச்சியம் தலைமை தாங்கும் .


 TNPSC துளிகள் 

மேகாலயாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் மாநிலத்தின் தேர்தல்களில் தகவல் தொழில்நுட்பச் செயலிகளை அறிமுகப்படுத்தியதிற்காக வேண்டி ஒரு சிறப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இது ' தேசிய அளவிலான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகள் - 2020 என்ற விருதிற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்டுள்ளது . 

பிராண்ட் நிதியியல் அறிக்கையின்படி , டாடா ஆலோசக நிறுவனமானது ( TCS ) உலக அளவில் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் TCS நிறுவனத்திற்குப் பிறகு , அசென்சர் மற்றும் ஐபிஎம் ஆகியன உள்ளன . 

ஐந்தாம் தலைமுறைச் சேவையின் நிகழ்நேரச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட நாட்டின் முதலாவது தொலைத் தொடர்புச் செயல்பாட்டு நிறுவனம் பாரதி ஏர்டெல் ஆகும் . 

இந்த நிகழ்நேரச் சோதனையானது ஐதராபாத் நகரில் உள்ள வணிக ரீதியான அமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது . 

இந்தியாவானது ஜனவரி 27 அன்று 3 ரஃபேல் போர் விமானங்களைக் கொண்ட மூன்றாவது தொகுதியைப் பெற்றுள்ளது.

தேசியச் செய்திகள் 

உலகின் வேகமாக வளரும் முதிர்நிலைத் தொழில்நுட்பச் சூழலமைப்பு 

பெங்களூரு நகரமானது 2016 ஆம் ஆண்டு முதல் உலகில் வேகமாக வளரும் முதிநிலைத் தொழில்நுட்பச் சூழலமைப்பு கொண்ட நகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது . 

இந்த அறிக்கையானது இலண்டன் & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது . 

இது தரவரிசையைக் கணக்கிடுவதற்காக Dealroom.co என்ற நிறுவனத்திடமிருந்த தரவை ஆய்வு செய்துள்ளது . 

இந்தப் பட்டியலில் இலண்டன் நகரம் 2 வது இடத்தைப் பிடித்துள்ளது , இதில் முனிச் , பெர்லின் , பாரிஸ் ஆகிய நகரங்கள் முறையே 3 வது , 4 வது , 5 வது இடங்களைப் பிடித்துள்ளது . 

இதில் மும்பை நகரம் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் பெங்களூரு நகரமானது உலகில் தொழில்நுட்ப துணிகர முதலீட்டிற்கான ( venture capitalist - VC ) பிரிவில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது . 

ஷாங்காய் நகரமானது இந்த உலகப் பட்டியலில் VC பிரிவில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது .

Feb 1 2021 CA

Touch Here

Feb 2 2021 CA

Touch Here

Feb 3 2021 CA

Touch Here

Feb 4 2021 CA

Touch Here

Feb 5 2021 CA

Touch Here

Feb 6 2021 CA

Touch Here

Feb 7 2021 CA

Touch Here

Feb 8 2021 CA

Touch Here

Feb 9 2021 CA

Touch Here










Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY