Ads Right Header

வேற்றுமையில் ஒற்றுமை


 வேற்றுமையில் ஒற்றுமை

 • எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டது இந்தியா என்று கூறும் புகழ்மிக்க வரலாற்று அறிஞர் எ.எல். பாஷம் (A.L. Basham) அவர்கள் “அதிசயம் அதுதான் இந்தியா” (The wonder that was India) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 • இந்நூல் இந்திய மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் பழம்பெருமையைப் பறைசாற்றுகின்றது.
 • கங்கை நதி 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாகக் கங்கை அறிவிக்கப்பட்டது.
 • இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணை நதிகளைப் பெற்றுள்ள நதி - கங்கைநதி
 • ஆசியாவின் இத்தாலி என்று அழைக்கப்படும் நாடு - இந்தியா
 • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டின் பருவநிலையே அடிப்படையாகும்.
 • ஒவ்வொரு நிலப்பகுதியும் அமைவிட அமைப்பில் வேறுபட்டுள்ளது என்றாலும், பொருளாதார வளர்ச்சிக் குறியீடு சீராகவே உள்ளது.
 • இந்திய இனங்கள்

  1. காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம் ஆகிய பகுதியில் உள்ளவை. இந்தோ – ஆரிய இனம்.

  2. தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளிலும் வாழும் திராவிட இனம்.

  3. அஸ்ஸாம் நேபாள எல்லையில் வாழும் மங்கோலிய இனம்.

  4. ஐக்கிய மாநிலங்கள், பீகார் பகுதிகளில் வாழும் ஆரிய-திராவிடஇனம்

  5. வங்காளம், ஒட்டரதேசம் (ஒடிசா) பகுதியில் வாழும் மங்கோல் -திராவிட இனம்.

  6. மராட்டியப் பகுதியில் வாழும் மக்கள் சிந்திய - வடமேற்கு எல்லைபுறத்தில் வாழும் துருக்கிய – இரானிய இனம்

 • இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்“ என்று குறிப்பிட்டவர் - டாக்டர் வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் (Vincent ArthurSmith)

 • மொழி வேறுபாடுகள்

 • மொழி என்பது, மனிதன்தமது உள்ளத்து உணர்வுகளைப் பிறருக்கு உணர்த்த உதவும் மிகச்சிறந்த ஒரு கருவியாகும். இதனையே language is the vehicle of communication என்று அபெர் குரோம்பி (Aber crombie) குறிப்பிடுகிறார்.
 • ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பேசும் மொழிகள் 33 உள்ளன.
 • சமஸ்கிருத மொழி வடஇந்திய மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.
 • சமஸ்கிருதம் மற்றும் வடஇந்திய மொழிகளை எழுத தேவநாகரி என்னும் எழுத்து வடிவம் பயன்படுத்தப்படுகிறது.
 • வடகிழக்கு இந்தியாவில் அஸ்ஸாமி மொழி பேசப்படுகிறது.
 • 22 மொழிகள் மட்டுமே இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாகும்
 • அவை

  1. அஸ்ஸாமி

2. பெங்காலி

3. போடோ

4. டோக்ரி

5. குஜராத்தி

6. இந்தி

7. கன்னடம்

8. காஷ்மீரி

9. கொங்கணி

10. மைதிலி

11. மலையாளம்

12. மணிப்பூரி

13. மராத்தி

14. நேபாளி

15. ஒரியா

16. பஞ்சாபி

17. சமஸ்கிருதம்

18. சாந்தலி

19. சிந்தி

20. தமிழ்

21. தெலுங்கு

22. உருது


சமய வேறுபாடு

 • 2011-இன்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 121.09 கோடி,
 • இதில்
  • 79.80% இந்துக்கள்
  • 14.23% இஸ்லாமியர்கள்
  • 2.30% கிருத்துவர்கள்
  • 1.72% சீக்கியர்கள்
  • 0.07% பௌத்தர்கள்
  • 0.37% சமணர்கள்
 • இந்தியாவில் வாழ்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 • ஜம்மு - காஷ்மீரில் இஸ்லாமிய அதிக அளவில் வாழ்கின்றனர்.
 • அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா போன்ற பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
 • பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

பொருளாதார வேற்றுமைகள்

 • உலகளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.
 • இந்தியாவில் பின்பற்றும் பொருளாதாரம் கலப்புப்பொருளாதாரம்

  ஒற்றுமைக் கூறுகள்

 • ‘ஹிந்த்‘ என்ற பெயர் ‘சிந்து‘ என்ற நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
 • சிந்து என்பதை அவர்கள் 'ஹிந்து' என்று உச்சரித்தார்கள். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த அரேபியர்களும் நமது நாட்டை ‘ஹிந்துஸ்தான்’ என்று அழைத்தனர் .
 • வடஇந்தியாவையும், தென்னிந்தியாவையும் விந்திய சாத்பூரா மலைத்தொடர்கள் பிரித்தாலும் இந்தியாவைப் பாரதக் கண்டம் என்றே வழங்குகிறோம்.

அரசியல் ஒற்றுமை

 • அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று ஜவஹர்லால் நேரு தான் எழுதிய 'Discovery of India' என்ற நூலில் கூறியுள்ளார்.

 • சமய ஒற்றுமை

  • சமயங்களின் அடிப்படையில் கொண்டாப்படும் திருவிழாக்கள் மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்கின்றன.
  • பஞ்சாப் - குருநானக் ஜெயந்தி
  • தமிழ்நாடு - நாகூர் தர்கா கந்தூரி விழா, வேளாங்கண்ணி - மாதா ஆலயக் கொடியேற்றவிழா, சிக்கல் - சிங்காரவேலர் ஆலயக் கந்தசஷ்டிவிழா.
  • தமிழகத்தில் கொண்டாப்படும் பொங்கல்விழா வடஇந்தியாவில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாப்படுகிறது.
  • கிறித்துவர்கள் - கிறிஸ்துமஸ்
  • இஸ்லாமியர்கள் மிலாடி நபி, ரம்ஜான், பக்ரீத்
  • பௌத்தர்கள் - புத்தபூர்ணிமா
  • சமணர்கள் - மகாவீர்ஜெயந்தி
  • சீக்கியர்கள் - குருநானக்ஜெயந்த
  • வட இந்தியர்கள் தெற்கே உள்ள இராமேஸ்வரத்திற்குப் புனிதப்பயணம் மேற்கொள்வதும், நமது நாட்டின் சமய மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

  இலக்கியம்

 • இந்தியா இலக்கியங்களின் கருவூலமாகத் திகழ்கிறது.
 • மேகதூதம் மற்றும் சாகுந்தலம் ஆகிய நூல்களை இயற்றியவர் - காளிதாசரின்

 • கலை & கட்டடக்கலை

  தென்னிந்திய கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகள்

  • மாமல்லபுரச் சிற்பங்கள்
  • காஞ்சி கைலாசநாதர் கோயில்
  • வைகுந்த பெருமாள் கோயில்
  • தஞ்சை பீரகதீஸ்வரர் கோயில்
  • மதுரை மீனாட்சியம்மன் கோயில்
  • திருவரங்கம் அரங்கநாதர் கோயில்
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

  வடஇந்திய கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றுகள்

  • ஸ்தூபி
  • சாஞ்சி
  • சாரநாத்
  • மசூதிகள்
  • பூரி ஜெகநாதர் கோயில்
  • கோனார்க் சூரியனார் கோயில்
  • காசி விஸ்வநாதர் கோயில்
  • வைஷ்ணவதேவி கோயில்
  • தாஜ்மஹால்
  • டெல்லி செங்கோட்டை

  இசைக்கலை

  • இந்துஸ்தானி இசை - வடஇந்தியா
  • கர்நாடக இசை - தென்னிந்தியா

  மொழி ஒற்றுமை

  • நமது நாட்டில் பல்வேறு மொழிகள் பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்களால் பேசப்படுகின்றன.
  • செவ்வியல் சிறப்பு தொன்மை, தனித்தன்மை, மொழிகளின்தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டுவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப்பெற்ற மொழியே செவ்வியல்மொழி எனப்படும்.
  • ஒற்றுமைக்காண காரணிகள்

   • அரசர்கள்
   • ஒரே சீரான நிர்வாகம்மொழியும் சமயமும்
   • போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்
   • வரலாறும் நாட்டுப்பற்றும்
   • பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிக்காத்த்தல்
   • தேசியச் சின்னங்கள்
   • தேசியத் திருவிழாக்கள.
  Previous article
  Next article

  Leave Comments

  Post a Comment

  Ads Post 4

  DEMOS BUY