Ads Right Header

அடிப்படை உரிமைகள் Study Material!

 


அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள் தங்களுக்குள்ளேயே எவ்விதமா உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் இவை வெற்றுப் பாத்திரங்களாகவே உள்ளன. ஒவ்வொரு தலைமுறையினரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில்பெற்ற உன்னதமான அனுபவங்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்.

கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கம்:

அடிப்படை உரிமை என்ற அதன் பெயரிலிருந்தே அதன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இதற்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உத்திரவாதமும் முக்கியத்துவம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் அரசியலமைப்பினால் உத்திரவாதமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் அடிப்படை சட்டமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு தனிமனிதனின் உடைமை, அறிவுசார் உரிமை, நீதி மற்றும் ஆன்மிக மேம்பாடு போன்ற அனைத்திற்கும் மிக அத்தியாவசியமாக அடிப்படை உரிமைகள் உணரப்படுகிறது.

    அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் பகுதி –III ல் சரத்து 12 முதல் 35 வரை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பகுதி –III இந்தியாவின் மகா சாசனம் (Magna carta of India) என அழைக்கப்படுகிறது. இப்பகுதி மிக நீளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய, நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறும் அடிப்படை உரிமைகள் கொண்டுள்ளது. நமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையானது உலகின் வேறு எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளை காட்டிலும் அதிக விரிவானது ஆகும். குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டை காட்டிலும் விரிவானதாகும். அரசியலமைப்பினால் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்து நபர்களுக்கும் எவ்வித வேறுபாடும் காட்டுவதில்லை. அனைத்து தனி நபர்களின் சமத்துவத்தையும், தனி மனிதனின் கௌரவத்தையும், பொதுமக்களின் நலன்களையும் மற்றும் தேசத்தின் ஒற்றுமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் மக்களாட்சியை (Political Democracy) வளர்ப்பதாகும்.

உண்மையில் நமது அரசியலமைப்பில் ஏழு (7) அடிப்படை உரிமைகள் இருந்தன.

  1. சமத்துவ உரிமை ஷரத்து 14 முதல் 18 வரை
  2. சுதந்திர உரிமை ஷரத்து 19 முதல் 22 வரை
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை சரத்து 23 முதல் 24 வரை
  4. சமய சுதந்திர உரிமை சரத்து 25 முதல் 28 வரை
  5. கலாச்சார மற்றும் கல்வி சரத்து 29 முதல் 30 வரை
  6. அரசியலமைப்பு வாயிலான தீர்வு சரத்து 32 (சரத்து 226 – உயர்நீதிமன்றம்)
  7. சொத்துரிமை (சரத்து 31 1978-ல் 44-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக நீக்கப்பட்டது. இச்சரத்து தற்போது 300A-வாக உள்ளது.

அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவம்

  1. அடிப்படை உரிமைகள் பூர்ணத்துவமானடிவ அல்ல ஆனால் தகுதி வாய்ந்தவை.
  2. அரசானது இவற்றின் மீது போதுமான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
  3. இவை பெரும்பாலும் அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக உள்ளன.
  4. நீதிமன்றங்களை அணுகி தீர்வு பெற முடியும்.
  5. உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் உத்தரவாதமும் வழங்குகின்றது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற முடியும்.
  6. இவைபுனிதமானவையோ அல்லது நிரந்தரமானவையோ அன்று. பாராளுமன்றம் இவற்றை குறைக்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
  7. தேசிய நெருக்கடி நிலை செயல்பாட்டில் இருக்கும் போது அடிப்படை உரிமைகளில் ஷரத்து 20 மற்றும் 21-ஐத் தவிர பிற அடிப்படை உரிமைகளை செயல்படாத வண்ணம் நிறுத்தி வைக்க முடியும். ஷரத்து 19-ஐ யுத்தம் அல்லது அந்நிய படையெடுப்பின் போது செயல்படாமல் தடுத்த நிறுத்த முடியும்.

அரசின் வரையறை (சரத்து 12)

ஒருவரது அடிப்படை உரிமையை மீறியது அரசா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக சரத்து 12-ஆனது “அரசு”(ளுவயவந) என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்பதற்குண்டான வரையறையைக் கொடுக்கிறது.
சரத்து 12-ன்படி,“அரசு” என்ற சொல்லில் பின்வருவன அடங்கும்.

  • இந்திய அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம்; மற்றும்
  • ஒவ்வொரு மாநிலத்தினுடைய அரசாங்கம் மற்றும் சட்டமன்றம்; மற்றும்
  • இந்திய ஆட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து உள்ளுர் அதிகார அமைப்புகள் (Local Authorities) அல்லது பிற அதிகார அமைப்புகள் (Other Authorities); அல்லது
  • இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து உள்ளுர் அல்லது பிற அதிகார அமைப்புகள்.

அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் சட்டங்கள் (சரத்து 13)

சரத்து 13ன் படி அடிப்படை உரிமைகளுக்கு முரண்படுமாறு அல்லது மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது இல்லாநிலையதாகும் மற்றும் செல்லாததாகும்.

  • சரத்து 13(1) – அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பாக, இந்திய எல்லைக்குள் அமலில் உள்ள அனைத்து சட்டங்களும் (Law in force)இ அடிப்படை உரிமைகள் குறித்த வகைமுறைகளுடன் எந்த அளவிற்கு முரண்பட்டதாக உள்ளதோ அந்த அளவிற்கு இல்லா நிலையதாகும்.
  • சரத்து 13(2) – குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவோ அல்லது மீறுவதாகவோ, அரசு எந்தச் சட்டத்தையும் (law) இயற்றக் கூடாது மற்றும் இந்நிபந்தனைக்கு முரணாக (in contravention) சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால், அது அம்முரண்பாடு அளவிற்கு இல்லாநிலையதாக்கப்படும்.

1. சமத்துவ உரிமை (சரத்து 14 – 18)
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு சரத்து – 14.
  • சாதி, சமய, இன, பால், பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை சரத்து – 15.
  • அரசு வேலைகளில் சமவாய்ப்பு ஷரத்து – 16.
  • தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் சரத்து – 17.
  • இராணுவத்திலும் கல்வித் துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களைத் தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு சரத்து – 18.
2.சுதந்திர உரிமை : (ஷரத்து 19 – 22)
  • இந்திய அரசியலமைப்பு விதி 19 ஏழு (7) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது.
  • குற்றங்களுக்குத் தண்டனையளிப்பது குறித்த பாதுகாப்பு, (ஷரத்து – 20)
  • உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகதப்பு (ஷரத்து – 21)
  • ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை – சரத்து 21A
  • கைது செய்யப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் எதிராகப் பாதுகாப்பு – சரத்து
3. சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து 23 மற்றும் 24)
  • மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதை தடைசெய்தால் – ஷரத்து
  • 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகளிலோ, மற்றும் ஆபத்தான வேலைகளில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது – ஷரத்து
4.சமயச் சுதந்திர உரிமை (சரத்து 25 – 28)
  • மனசாட்சி படி செயல்படவும் சுதந்திரமாக வேலைகளில் ஈடுபடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் உரிமை – சரத்து
  • சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை – சரத்து
  • சமய வளர்ச்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை – ஷரத்து
  • சமய போதனைகளுக்குச் செல்லாமலிருக்க உரிமை – சரத்து
5.கலாச்சார மற்றும் கல்வி உரிமை (சரத்து 29 – 30)
    சிறுபான்னையினர் மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் உரிமை. ஷரத்து சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை. ஷரத்து
6. அடிப்படை உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் (சரத்து 31A, 31B மற்றும் 31C)
7.அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை – சரத்து 32

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வுபெற கீழ்க்கண்ட நீதிப்பேராணைகள் வகை செய்கின்றன.

சமத்துவ உரிமை (சரத்து 14 – 18)

சரத்து – 14
  • சட்டத்தின் முன் சமம்
  • சட்டத்தின் “முன் அனைவரும் சமம்” என்பது இங்கிலாந்தில் தோன்றியதாகும்.
  • எந்த நபருக்கும ஆதரவாக சிறப்பு சலுகைகளை மறுத்தல்
  • சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபருக்கும் எவ்வித சலுகைகள் காட்டப்படாது
  • சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை.
  • அனைவருக்கும் சமமான பாதுகாப்புச் சட்டம்
  • இக்கருத்து அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுத்ததாகும்.
  • சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர்.
  • சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் சம பாதுகாப்பை வழங்கும்.
  • எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும்.
சரத்து – 15
  • அரசு எந்தக் குடிமகனையும் அவனுடைய மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காரணமாகக் காண்பித்து, அவனை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.
  • எந்தக் குடிமகனும் அவன் சார்ந்துள்ள மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் நுழையும் போதும் தடைப்படுத்தவோ அல்லது நிபந்தனை விதிக்கப்படவோ கூடாது.
  • பெண்டிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதிலிருந்து அரசினை இந்த ஷரத்தில் உள்ள எதுவும் தடுக்காது.
  • அரசு, சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கி உள்ள வகுப்பினர்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகைகள் அளித்து, அவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றமடைய தனிச்சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதற்கு அரசினை எதுவும் தடுக்காது.
சரத்து 16
  • அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி அல்லது நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவின் எப்பகுதியில் வாழ்ந்து வருவதாக இருப்பினும் வேலை வாய்ப்புகளில் அரசு சம வாய்ப்பு அளிக்க மறுக்கக் கூடாது. மதம், இனம், சாதி, பால், இறங்குரிமை, பிறப்பிடம் மற்றும் உறைவிடம், இவற்றின் அடிப்படையில் அரவின் ஒரு அலுவலகத்தில் அல்லது பணியில் ஒரு குடிமகன் அமரத் தகுதியற்றவனாக ஆக்கப்படக் கூடாது.
  • அரசுப் பணிகளை திறமையாகச் செய்வதற்குரிய தகுதிகளை நிர்ணயிப்பது ஷரத்து 16க்கு எதிராக அமையாது.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY