Ads Right Header

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதிகள் அறிவிப்பு எப்போது?.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் , தேர்வு நடைபெறும் தேதிகள் பொது முடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது . கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத் தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக , பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் , அரசுப் பணிகளில் ஓய்வு பெறுவோரின் வயது உயர்த்தப்பட்ட காரணத்தால் , அர சுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது . இதனால் , தலை மைச் செயலகம் , அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவ லகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது . நடப்பு ஆண்டில் , அறிவிக்கப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை யின் படி குரூப் 1 , 2 , 2 ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால் , தேர்வுகள் ரத்து செய் யப்படும் என்று செய்திகள் வெளியாகின . இந்நிலையில் , திட்ட மிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது . இதுகுறித்து தேர்வாணைய அதிகாரிகள் கூறியதாவது : 2018-2019 , 2019-2020 - ஆம் ஆண்டுகளுக்கான காலி இடங்க ளுக்கு மட்டுமே நடப்பு ஆண்டில் தேர்வுகள் நடைபெறுகிறது . இதனால் நடப்பு ஆண்டுக்கான வருடாந்திரத் தேர்வு அட்டவ ணையில் எந்த மாற்றமும் ஏற்படாது . அறிவிக்கப்பட்ட அனைத் துத் தேர்வுகளும் நடைபெறும் . பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் , அனைத்துப் போட்டித் தேர்வுகளுக் கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் . இதனால் நடப்பு ஆண் டில் போட்டித் தேர்வுகளை எழுத காத்திருக்கும் லட்சக்கணக் கான பட்டதாரிகளுக்கு அரசு சமர்ப்பிக்கும் அனைத்துத் துறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் , அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கப்படும் . எனவே , அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப் பட்டுள்ளதால் , நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள் ளது என்ற தகவல் தவறானது  2021 - ஆம் ஆண்டில் தமிழ்தப் பாதிப்பும் ஏற்படாது என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உறுதிபடக் கூறினர் . 



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY