Ads Right Header

TNPSC important 50 + 50 notes...
1.5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகிமீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.


A.2மீவி⁻¹

B.0.5மீவி⁻¹🌀

C.12.5மீவி⁻¹

D.7.5மீவி⁻¹


2. பொருந்தாததை தேர்ந்தெடுக்க.


 A.கேஸ்கிரைன் தொலைநோக்கி🌀

 B.கலிலியோ தொலைநோக்கி

 C.கெப்ளர் தொலைநோக்கி

 D.நிறமற்ற ஒளி விலக்கிகள்


3.A,B,C மற்றும் D  என்ற நான்கு பொருட்களின் ஒளிவிலகல் எண்கள் முறையை 1.31,1.43,1.33,2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?


A. A🌀

B. B

B. C

D. D


4. கீழ்க்கண்டவற்றுள் அதிகளவில் வெப்பப்படுத்துவதால் பரும வெப்ப விரிவிற்கு உட்படுவது எது?


 A.நீர்🌀

 B.பாதரசம் 

 C அலுமினியம்

 D.கண்ணாடி


5. 144 கூலும் மின்னூட்டம் ஒரு நிமிட நேரம் ஒரு மின்விளக்கின் வழியே பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?


A.2.4 A🌀

B.4.16 A

C.13mA

D.8.64 A


6. பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்.

 கூற்று: நிக்ரோம் வெப்பமேற்றும்     சாதனங்களில் பயன்படுகிறது.

 காரணம்: நிக்ரோம் என்பது மிகக் குறைந்த மின்தடை கொண்ட ஒரு கடத்தி ஆகும்

 குறியீடுகள்:


A. கூற்று மற்றும் காரணம் சரி  மேலும் கூற்றுக்கான சரியான காரணமாகும்

B. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான சரியான காரணம் அல்ல

C. கூற்று சரி காரணம் தவறு🌀

D. கூட்டு தவறு காரணம் சரி


7. கீழ்க்கண்டவற்றுள் மனிதனின் கதிரியக்க பாதிப்பின் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவு எவ்வளவு?

 I.ஒரு வாரத்திற்கு 250 மில்லி சிவர்ட்

 II.ஒரு வருடத்திற்கு 20 மில்லி சிவர்ட்

 III.ஒரு மாதத்திற்கு 250 ராண்ட்ஜன்

 IV.ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன்

 குறியீடுகள்:


A.I மற்றும்II 

B.II மற்றும்IV🌀

C.Iமட்டும்

D.I மற்றும்III


8. கீழ்கண்ட எந்த தொகுதி தாதுக்களை உருவாக்கும் குடும்பம் என்றழைக்கப்படுகிறது?

 

 A.தொகுதி 13

 B.தொகுதி 14

 C.தொகுதி 15

 D.தொகுதி 16🌀


9. கீழ்கண்ட எந்த தாதுவிலிருந்து உலக உற்பத்தியில் 76 சதவீதம் தாமிரம் பெறப்படுகிறது?


 A.காப்பர் பைரைட்🌀

 B.ரூபி காப்பர்

 C.காப்பர் கிளான்ஸ்

 D.மாலகைட்


10. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.

கலவைகள்     -      எடுத்துக்காட்டு


A.திண்மத்தில் திண்மம் -துருபிடிக்காத எஃகு B.நீர்மத்தில் நீர்மம் -பாதரசத்துடன் கலந்த சோடியம்🌀

C.நீர்மத்தில் திண்மம் - நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு கரைசல்

D. வாயுவில் நீர்மம் - காற்றிலுள்ள நீராவி


11. பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.

 I.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும்போது

 II.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L)சம இடைவெளியில் நகரும்போது

III.ஒலிமூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது

 மேற்கூறியவற்றில் எப்பொழுது டாப்ளர் விளைவு ஏற்படும்?


A.Iமற்றும் II

B.I மற்றும்III

C.இவை அனைத்தும்

D.எதுவுமில்லை🌀


12. கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

 I.இவ்வலைகள் இயற்கையாகவே குறுக்கலைகள்

 II.அலைநீளம் 4×10⁻⁷ முதல் 7×10⁻⁷ வரை இருக்கும்.

 பின்வருவனவற்றுள் மேற்காணும் கூற்றுகளுடன் தொடர்புடையது எது?


A. ஒலி அலைகள்

B. X கதிர்கள் 

C. அகச்சிவப்புக் கதிர்

D  கண்ணுறு ஒளி🌀


13. கீழ்க்கண்டவற்றுள் எது எத்தனாலிலிருந்து  ஹைட்ரஜனைப் நீக்கம் செய்வதற்கு வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது?

 

 A.சில்வர்

 B.அலுமினியம்

 C.தாமிரம்🌀

 D.பிளாட்டினம்


14. கீழ்கண்ட எந்த சேர்மம் பழச்சாற்றின் மணமுடையது?

 

 A.எத்தனால்

 B.அசிட்டிக் அமிலம்

 C.எத்தில் எத்தோனேட்🌀

 D.சோடியம் ஹைட்ராக்சைடு


15. லெட் நைட்ரேட், பொட்டாசியம் அயோடைடுடன்   வினைபுரிந்து கீழ்க்கண்ட எந்த வீழ்படிவை கொடுக்கின்றது?


 A.வெண்மை நிற வீழ்படிவு

 B.கருமைநிற வீழ்படிவு

 C.மஞ்சள் நிற வீழ்படிவு🌀

 D.சிவப்பு நிற வீழ்படிவு


16. பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்

 கூற்று: இலைத்துளையானது மூடுவதும் திறப்பதும் காப்பு செல்களில் விறைபழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது.

 காரணம்: காப்பு செல்களில் நீர் வெளியேறுவதால் விறைப்படுத்தத்திற்கு உள்ளாகி இலைத்துளைகள் திறக்கின்றன. மேலும் காப்பு செல்களில் நீர் உட்புகுவதால் விறைப்பழுத்தம் குறைந்து இலைத்துளை மூடிக்கொள்கின்றன.


A. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான விளக்கம் சரியாகும்

B. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான சரியான காரணம் அல்ல

C. கூற்று சரி ஆனால் காரணம் தவறு🌀

D. கூற்று தவறு ஆனால் காரணம் சரி


17. வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும்  உள்பக்கமும் காணப்படும் தாவரம் எது?

 

A.குகர்பிட்டா🌀

B.டிரசீனா

C. பெரணி தாவரம்

D.கஸ்குட்டா


18. இயற்கை ஆக்சினை தேர்ந்தெடு

 

A.இண்டோல்-3

B.இண்டோல்-3 புரோப்பியானிக் அமிலம்

C.நாப்தலின் அசிட்டிக் அமிலம்

D.பினைல் அசிட்டிக் அமிலம்🌀


19. கீழ்க்கண்டவற்றுள் எதனைப் பற்றி மரபியல் கலப்பில் புன்னட் கட்டம் தெளிவாக விளக்குகிறது?

 

 A.ஜீனோடைப்🌀

 B.பினோடைப்

 C.இரண்டும்

 D.எதுவும் இல்லை


20 பல்பில்ஸ் முறையில் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?

 

 A.ஸ்ட்ராபெரி

 B.அஸ்பராகஸ்

 C.ரைசோபஸ்

 D.கற்றாழை🌀


21 எந்த நிகழ்ச்சியின் காரணமாக9:3:3:1 என்ற விகிதம் உருவாகிறது?


 A.ஒடுங்கு தன்மை

 B.சார்பின்றி ஒதுங்குதல்

 C.பிரிதல்🌀

 D.குறுக்கே கலத்தல்


22. கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் எத்தனை செல்கள் மற்றும் உட்கருக்கள் அமைந்துள்ளன?


A. 7 செல்கள் மற்றும் 8 உட்கருக்கள்🌀

B. 7செல்கள் மற்றும் 7 உட்கருக்கள்

C. 8 செல்கள் மற்றும் 7 உட்கருக்கள்

D. 8 செல்கள் மற்றும் 8 உட்கருக்கள்


23.  ஒளி வினையின் மூலம் பெறப்பட்ட பொருட்களை வைத்து கார்பன்-டை-ஆக்சைடு கார்போஹைட்ரேட்டாக மாற்றம் அடைவது எச்சுழற்சியில்

 நடைபெறுகிறது என்பதை தேர்ந்தெடு.


 A.கால்வின் சுழற்சி🌀

 B.கிரெப் சுழற்சி

 C.எலக்ட்ரான் கடத்து சங்கிலி

 D.கிளைக்காலிசிஸ்


24. செல்லில் கால்சியம் அயனிகளின் சமநிலையை பாதுகாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?


 A.மைட்டோகாண்ட்ரியா🌀

 B.உட்கரு

 C.கோல்கை உறுப்புகள்

 D.ரைபோசோம்


 25.சடுதி மாற்றத்தை தூண்டும் வேதிப்பொருட்களை தேர்ந்தெடு.


 A.கடுகு வாயு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு

 B.கடுகு வாயு மற்றும் நைட்ரிக் அமிலம்

 C.கடுகு வாயு மற்றும் சிட்ரிக் அமிலம்

 D.கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம்🌀


26. கீழ்கண்ட எந்த ஐசோடோப் தாவரங்களில் விரும்பத்தக்க சடுதி மாற்றங்களை தூண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன?


 A.பாஸ்பரஸ்  32 மற்றும் பாஸ்பரஸ் 34

 B.டிரிட்டியம் 32 மற்றும் பாஸ்பரஸ் 34

 C.கோபால்ட் 60 மற்றும் சீசியம் 137🌀

 D.யுரேனியம் 238 மற்றும் சீசியம் 137


27. பூசா கோமல் என்பது-------- நோய் எதிர்ப்பு திறன் பெற்ற ரகமாகும்?

 

 A.நெல்

 B.தட்டைப்பயிறு🌀

 C.கரும்பு

 D.மக்காச்சோளம்


28. பின்வருவனவற்றுள் எது மிக நீளமான மண்புழு ஆகும்?

 

 A.மைக்ரோகீடஸ் ராப்பி🌀

 B.திராவிடா நிலம்புரான்சிஸ்

 C.லாம்பிட்டோ மாரிட்டி

 D.மெடாபையர் போஸ்துமா


29. முதன்முறையாக தைராக்ஸின் ஹார்மோனை படிநிலையை கண்டுபிடித்தவர் யார்?


 A.எட்வர்ட் C.கெண்டல்🌀

 B.சார்லஸ் ஹாரிங்டன்

 C.ஜார்ஜ் பார்ஜர்

 D.தாமஸ் அடிசன்


30. மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புத்தொகுதி எது?

 

 A.ஹைபோதலாமஸ்

 B.பான்ஸ்🌀

 C.தலாமஸ்

 D.கார்பஸ் கலோசம்


31. கால தூதுவர்கள் என்றழைக்கப்படும் ஹார்மோனை சுரக்கும் சுரப்பியை தேர்ந்தெடு?


 A.தைமஸ் சுரப்பி

 B.அட்ரினல் சுரப்பி

 C.பீனியல் சுரப்பி🌀

 D.பிட்யூட்டரி சுரப்பி


32. கீழ்க்கண்டவற்றுள் எது மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியை மேற்கொள்கிறது?


 A.முகுளம்

 B.தண்டுவடம்

 C.மூளைத் தண்டுவடத் திரவம்🌀

 D.பான்ஸ்


33. பெண்களில் முட்டை கருவுறுதல் நிகழ்ந்தால் எந்த நிலையில் எண்டோமெட்ரியம் கரு பதிவுக்கு தயாராகிறது?


 A.பாலிக்குலார் நிலை

 B.அண்டம் விடுபடுதல் நிலை

 C.லூட்டியல் நிலை🌀

 D.மாதவிடாய் நிலை


34. ஒருமுறை நியூரான்கள் எங்கு அமைந்துள்ளன


 A.மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணி

 B.கண்ணின் விழித்திரை

 C.வளர் கருவின் ஆரம்ப நிலை🌀

 D.நாசித் துளையிலுள்ள ஆல் ஃபேக்டரி எபித்தீலியம்


35. கீழ்க்கண்டவற்றுள் எந்த சுழற்சி 0.3 நொடியில் நடந்து முடிவடைகிறது?


A.ஏட்ரியோல் சிஸ்டோல்

B.வெண்ட்ரிகுலார் சிஸ்டோல்🌀

C.வெண்ட்ரிகுலார் டயஸ்டோல்

D.B மற்றும் C இரண்டும்


 36.கீழ்கண்டவற்றுள் எதை பயன்படுத்தி விந்துகள் விந்து வங்கிகளில் பல ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கப்படுகிறது?


 A.திரவ ஹீலியம்

 B.திரவ நைட்ரஜன்🌀

 C.திரவ ஹைட்ரஜன்

 D.திரவ ஆக்சிஜன்


37. காற்று உள்ள சூழ்நிலையில் குளுக்கோஸ் எத்தனை வழிகளில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது?


A.2

B.4🌀

C.5

D.6


38. நெட்டை தாவரத்தை குட்டை தாவரத்துடன் இனக்கலப்பு செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?


A. தலையில்

B. ஒரு பண்பு கலப்பு🌀

C. மூன்று பண்பு கலப்பு

D. இரு பண்பு கலப்பு


39.ஹேலைடு தாதுவை தேர்ந்தெடு.


A.மாக்னசைட்

B.ஹேமடைட்

C.பைரோலுசைட்

D.கிரையோலைட்🌀


40. தற்போது மயக்கமூட்டியாக குளோரோபார்ம் பயன்படுத்துவது இல்லை ஏன்?


 A.குளோரோபார்ம் ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத்தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.🌀

 B.குளோரோபார்ம் எளிதில் ஆவியாகாத திரவம் ஆகும்.

 C.குளோரோபார்ம் நைட்ரஜனுடன் வினைபுரிந்து நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மத்தை உருவாக்குகிறது

D. குளோரோபார்ம் நிலைப்படுத்தியுடன் சேர்க்கும் பொழுது நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மம் உருவாக்குகிறது.


41. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக

 காண்பவை     சுடரின் நிறம்

அ.Ca2+.              செங்கல் நிறம்

ஆ.Na2+               பொன்னிற மஞ்சள்

இ.Zn2+                பச்சை

ஈ.K+                      கருப்பு


A.அ

B.ஆ

C.இ

D.ஈ🌀


42. கீழ்கண்ட எந்த தனிமம் ஆனோடாக்கல் முறைக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது?

 

A.துத்தநாகம்

B.அலுமினியம்🌀

C.தாமிரம்

D.வெள்ளியம்


43. பாலிவினைல் குளோரைடை எரிதலுக்கு உட்படுத்தும்பொழுது கீழ்கண்ட எந்த பொருள் உருவாகிறது?


 A.டயாக்சின்🌀

 B.வினைல் குளோரைடு

 C.கார் போஜன்

 D.கார்பன் மோனாக்சைடு


44.  வார்ப்பிரும்பில் உள்ள கார்பனின் சதவிகிதத்தை தேர்ந்தெடு.


A.2 to 4.5%🌀

B.<0.25%

C.0.25 to 2%

D.3 to 5%


45. பட்டியல் ஒன்று மற்றும் பட்டியல் 2 உடன் பொருத்துக.

தனிமம்  -   தமிழ்நாட்டில் கிடைக்கும் இடங்கள்

குரோமைட்      1.கோவை

டங்ஸ்டன்         2.தூத்துக்குடி

டைட்டேனியம் 3.திருவண்ணாமலை

ஜிப்சம்              4.சேலம்

மேக்னடைட்     5.திண்டுக்கல்


A.34215

B.45213🌀

C.32145

D.41235


46. எத்தனாலை அமிலம் கலந்த k2cr2o7 கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்து எத்தனாயிக் அமிலம் பெறப்படும் பொழுது k2cr2o7 ல் ஏற்படும் நிற மாற்றத்தைத் தேர்ந்தெடு?

 

 A.ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சள் நிறம்

 B.ஆரஞ்சு நிறத்திலிருந்து நீல நிறம்

 C.ஆரஞ்சு நிறத்திலிருந்து வெள்ளை நிறம்

 D.ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை நிறம்🌀


47. அசிட்டால்டிஹைடின் IUPAC  பெயரை தேர்ந்தெடு.

 

 A.மெத்தனேல்

 B.எத்தனேல்🌀

 C.புரப்பனேல்

 D.பியூட்டனேல்


48. பொருத்துக

 விஞ்ஞானிகள்      கண்டுபிடிப்புகள்


சாடி ஃபஜன்             1.இயற்கை கதிரியக்கம்

ஐரீன் கியூரி             2.இடப்பெயர்ச்சி

H.பெக்கோரல்         3.நிறையாற்றல் சமன்பாடு

ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்4.செயற்கைக்கதிரியக்ம்


A.4321

B.2413🌀

C.4123

D.1243


49. முரண்பட்ட ஒன்றை தேர்வு செய்

 

A.புளூட்டோனியம் 241🌀

B.யுரேனியம் 238

C.புளூட்டோனியம் 240

D. தோரியம்232


 50.சுருங்கிய விழி கோளத்தினால் பின்வரும் எந்த பார்வை குறைபாடு ஏற்படுகிறது?


A.கிட்டப்பார்வை 

B.தூரப்பார்வை🌀

C.விழி ஏற்ப அமைவது திறன் குறைபாடு

D.பார்வை சிதறல் குறைபாடு


 51.கிரிக்கெட் விளையாட்டு வீரர் வேகமாக வரும் பந்தை பிடிக்கும் பொழுது கையை பின்னோக்கி இழுக்கிறார் ஏன்?

 

A.உந்தத்தை குறைப்பதற்காக

B.கணத்தாக்கு குறைப்பதற்காக🌀

C. நிலைமையை குறைப்பதற்காக

D.A மற்றும் B


52. கீழ்கண்டவற்றுள் கணத்தாக்கு விசையின் அலகு யாது?

I.கிகிமீவி-2

II.கிகிமீவி-1

III.நியூட்டன் மீ

IV.நியூட்டன் மீ-1

V.நியூட்டன் வி

குறியீடுகள்


A.I மற்றும் III

B.V மட்டும்

C.II மற்றும் IV

D.II மற்றும் V🌀


53. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய வாய் கழுவும் திரவங்கள் ,வீட்டு உபயோக பொருட்கள், கிருமிநாசினிகள் ,கரைசலில் உள்ள கரைபொருளின் அளவுகள் எந்த பதத்தால் குறிப்பிடப்படுகிறது ?


A.Volume/Volume🌀

B.Weight/Weight

C.volume/%

D.Weight /%


54. எந்த வருடம் டாக்டர்.நார்மன் E .போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்?


A.1967

B.1969

C.1970🌀

D.1972


55. முதன்முதலில் எந்த நாடு IR-8 என்ற நெல் வகையை அறிமுகம் செய்தது?

 

 A.பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா🌀

 B.சீனா மற்றும் இந்தியா

 C.இந்தியா மற்றும் இந்தோனேசியா

 D.வங்கதேசம் மற்றும் இந்தியா


56. கீழ்கண்டவற்றுள் எது மனிதன் உருவாக்கிய முதல் கலப்பின தானியமாகும்?


A.அட்லஸ் -66

B.டிரிட்டிகம் டியூரம்

C.டிரிட்டிகேல்🌀

D.ரப்பனோ பிராசிக்கா


57. 'உயிர்வழி தோற்ற விதி' என்ற கொள்கை யாருடையது?


A.ஓபாரின் மற்றும் ஹால்டேன்

B.எர்னஸ்ட் ஹெக்கல்🌀

C.சார்லஸ் டார்வின்

D.லாமார்க்


58. மரபியலின் குரோமோசோம்களின் பங்குபற்றிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு T.H மோர்கனுக்கு வழங்கப்பட்ட ஆண்டு?


A.1993🌀

B.1997

C.1998

D.1996


59. தாவரங்களின் பசுங்கணிகங்களில் இந்த ஹார்மோன் காணப்படுகிறது?


 A.அப்சிசிக் அமிலம்🌀

 B.ஜிப்ரல்லின்கள்

 C.சைட்டோகைனின்

 D.ஆக்சீன்


60. கீழ்க்கண்டவற்றுள் நீர் மூலக்கூறுகள் சைலகுழாயின் சுவருடன் பிணைய காரணமாக அமைவது எது?


 A.நுண்துளை ஈர்ப்பு விசை

 B.வேர் அழுத்தம்

 C.கூட்டிணைவு

 D.ஒட்டிணைவு🌀


61. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளில் இருந்து வெளியே வர இயலாது?


A. சவ்வூடு பரவல்

B. நீராவிப்போக்கு

C. ஆஸ்மாலிஸ்

D. உள்ளீர்த்தல்🌀


62. பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


A. மாறுபாடு அடைதல்

B. சுய புதுப்பித்தல்🌀

C. சிறப்பு செல்கள்

D. புது குருத்தணுக்கள்


63. கீழ்க்கண்ட எந்த  நோயை குணப்படுத்த  நரம்பு குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன?


A. அல்பினிசம்

B. ஹன்டிங்டன் கொரியா

C. சிபிலிஸ்

D. அல்சீமர்🌀


64.கொலம்பியா வடிநிலக் குள்ள முயல் அழியும் நிலையில் உள்ள விலங்கு என அறிவிக்கப்பட்ட ஆண்டு?


A. ஏப்ரல் 2003

B. ஜூன் 2004

C. ஜூலை 2007

D. மார்ச் 2003🌀


 65.இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள்?


 A.ஓவிபேரஸ்

 B.விவிபேரஸ்🌀

 C.ஓவோவிவிபேரஸ்

 D.அனைத்தும்


66. விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?


A. அட்டை🌀

B. மண்புழு

C. கரப்பான் பூச்சி

D. பாசிகள்


 67.காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது?


 A.கிளைக்காலிசிஸ்🌀

 B.கிரப்ஸ் சுழற்சி

 C.எலக்ட்ரான் கடத்து சங்கிலி

 D.பென்டோ பாஸ்பேட்


 68.வண்ணக் கணிகம் என்று அழைக்கப்படுவது?


 A.குளோரோபிளாஸ்ட்

 B.பசுங்கணிகம்

 C.லியூகோபிளாஸ்ட்

 D.குரோமோபிளாஸ்ட்🌀


 69.தாவர திசுவிற்கு உறுதித்தன்மை அளிப்பது?


 A.பாரன்கைமா

 B.குளோரன்கைமா

 C.கோலன்கைமா

 D.ஸ்கிளிரன்கைமா🌀


 70.ரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கரைகளை நீக்க இது சேர்க்கப்படுகிறது?


 A.நொதிகள்🌀

 B.சோடியம் சல்பேட்

 C.சோடியம் பெர்போரேட்

 D. சோடியம் சிலிகேட்


71. மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் தடுப்பானாக பயன்படுவது?


A. எத்தனால்🌀

B. மெத்தனால்

C. புரொப்பனால்

D. பியூட்டனால்


72. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு?


A.4மீ

B.-40

C.-0.25🌀

D.-2.5


73. பரும விதி என்றழைக்கப்படுவது?


 A.சார்லஸ் விதி🌀

 B.பாயில் விதி

 C.அவகேட்ரா விதி

 D.லாரன்ஸ் விதி


74. எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 0℃ ல் உள்ளதைவிட இரட்டிப்பாகும்?


A.219℃

B.616℃

C.819℃🌀

D.956℃


75. கதிரிக்க பொருளானது ஒரு விநாடியில் வெளியிடப்படும் கதிரியக்க சிதைவின் அளவு 10⁶ எனில் அது ஒரு------------- என வரையறுக்கப்படுகிறது?


A. கியூரி

B. ரூதர்போர்டு🌀

C. பெக்கோரல்

D. ஜான்சன்


76. பாதுகாப்பான கதிர்வீச்சின் அளவு ஒருவாரத்திற்கு?

 

A.50 மில்லி ராண்ட்ஜன்

B.100 மில்லி ராண்ட்ஜன்🌀

C.150 மில்லி ராண்ட்ஜன்

D. 250 மில்லி ராண்ட்ஜன்


 77.ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு நிறை?


A.16கி

B.18கி

C.34கி🌀

D.17கி


78. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண்?


A.2

B.4🌀

C.5

D.7


79. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பதில் தேவையானதில் வறுத்தெடுக்கப்பட்ட தாது,கரி, சுண்ணாம்புக்கல்  இவை விகிதத்தில் முறையே  என்னவாக இருக்கும்?


A.8:4:1🌀

B.8:4:2

C.12:8:2

D.12:4:2


80. ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு?


A.Cuso4.5H2o

B.Mgso4.7H2o

C.Caso4.2H2o🌀

D.Znso4.7H2o


81. அண்டவெளியில் உள்ள உயிரினங்களை பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?


A. அண்டவியல்

B. காஸ்மாலஜி

C. அண்டப் பொருளியல்

D. வான் உயிரியல்🌀


82. கல்மரப் படிவ பூங்கா எங்கு உள்ளது?


A. காரைக்கால்

B. திருவாரூர்

C. விழுப்புரம்🌀

D. காவிரிப்பூம்பட்டினம்


83. ஃபிலாசபிக் ஜூவாலஜிக் என்ற நூலுடன் தொடர்புடையவர்?


A. சார்லஸ் டார்வின்

B. லாமார்க்🌀

C. ராபர்ட் ஹூக்

D. ராபர்ட் பிரவுன்


84. கீழ்கண்ட எந்த தாவரங்களில் விலங்குகள் மலட்டுத் தன்மை உடையவையாக காணப்படுகின்றன?


A. இரு மைய நிலை(2n)

B .மும்மைய நிலை(3n)🌀

C.நான்மயநிலை(4n)

D.அன்யூபிளாய்டி (5n)


85. ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டாகும் நோய் எது?


A. கதிர் அரிவாள் சோகை🌀

B. தலாசீமியா

C.அல்பினிசம்

D.SCID


86.  நல்லி சோமி என குறிப்பிடப்படுவது?


A.(2n-1)

B.(2n-2)🌀

C.(2n+1)

D.(2n-1)


87. கூற்று: தந்தை உருவாக்கும் விந்தனுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது.

  காரணம்: குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்வித பங்கும் இல்லை.


A. கூற்று சரி காரணம் தவறு

B. கூற்று தவறு காரணம் சரி

C. கூற்று காரணம் இரண்டும் சரி🌀

D. கூற்றும் காரணம் இரண்டும் தவறு


88.DNA  இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் கீழ்கண்ட எந்த அளவிலானது?


A.20A°

B.44A°

C.52A°

D.34A°🌀


89. குரோமோசோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்?


A.TH மோர்கன்

B. வால் டயர்🌀

C. வாட்சன் மற்றும் கிரிக்

D. மெண்டல்


90. ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்கள் ஆக செயல்படும் குரோமோசோம் வகை எது?


A. சாட்டிலைட்

B. மெட்டா சென்டரிக்

C. டீலோமியர்🌀

D. அக்ரோசோம்


91. மாதவிடாய் சுகாதார நாளாக கொண்டாடப்படும் நாள் எது?


A.ஜூன் 28

B. ஜூலை 27

C. மே 28🌀

D. செப்டம்பர் 17


92. கருவுறுதல் நிகழாத போது கீழ்க்கண்டவற்றில் எது சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை ரத்தத்துடன் வெளியேறும்?


A. எண்டோமெட்ரியம்

B. கார்ப்பஸ் லூட்டியம்🌀

C. அண்டம்

D. கிராபியன் பாலிக்கிள்


93. இழப்பு மீட்டல் நடைபெறுகிறது? 


A.ஸ்பைரோகைரா

B. பிளனேரியா🌀

C. அமீபா

D. ஈஸ்ட்


94. உப்பும் சர்க்கரையும் சேர்ந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


A. ஒரு மடிக் கரைசல்

B. இருமடிக் கரைசல்

C. பலமடிக் கரைசல்

D. மும்மடிக் கரைசல்🌀


95. கலோரி மீட்டர் உருவாக்க பயன்படும் உலோகம் எது?


A. சில்வர்

B. அலுமினியம்

C இரும்பு

D. தாமிரம்🌀


96. கலீனா என்பது?


A. ஆக்சைடு தாது

B. கார்பனேட் தாது

C. ஹைலைட் தாது

D. சல்பைடு தாது🌀


97. முயலின் விலங்கியல் அல்லது அறிவியல் பெயரைத் தேர்ந்தெடு.


A.ஹருடுனேரியா கிராணுலோசா

B.ஒரிக்டோலேகஸ் கியூனிகுலஸ்🌀

C.ஓவிஸ் ஆர்விஸ்

D.ஈகுவல் பெரஸ் கேப்பல்ஸ்


98. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி I.அட்டைகள் இரத்த ஓட்டம் தொடர்பான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது

II.அட்டையின் ஒரே உயிரியில் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலங்கள் உள்ளன.

 மேற்கண்டவற்றில் தவறானது எது /எவை?


A.I மட்டும்

B.II மட்டும்

C.இரண்டும்

D.இரண்டுமில்லை🌀


99.SACON  மையம் எந்த நகரில் அமைந்துள்ளது?

 

 A.சென்னை

 B.ஹைதராபாத்

 C.கோயம்புத்தூர்🌀

 D.பெங்களூர்


100. தவறான இணையைத் தேர்ந்தெடு

 

A.உலகப் புற்றுநோய் நாள் - பிப்ரவரி 4

B. உலக புகையிலை எதிர்ப்பு நாள்- மே 31

C. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்- நவம்பர் 5🌀

D. மருந்துகளில் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள்- ஜூன் 26

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY