Ads Right Header

வேலுநாச்சியார்


வேலு நாச்சியார் 

 1730 ஆம் ஆண்டு , இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாதசேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார் . எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார் . ஆயுதப் பயிற்சி பெற்றார் பல மொழிகள் கற்றார் . 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார் . 

ஆங்கிலேயர் படையெடுப்பு 

1772 இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார் . இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் ஹைதர் அலியைச் சந்தித்து ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார் . வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார் .

 ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை , விருப்பாட்சிக் கோட்டை , அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார் . இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது . அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதின்படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது . மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் . 

அதன் பின்பு , சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர் . மேலும் , தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் . 

படை திரட்டல் 

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது . ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும் , பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார் . படை காளையார் கோயிலை கைப்பற்றியது . இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது , பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது . சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி , நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி , என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள் .

 வேலுநாச்சியார் , தனது ஐம்பதாவது வயதில் , தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார் . 

இறுதி நாட்கள் 

1793 இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது . அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார் . பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25 , 1796 அன்று இறந்தார் .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY